Translate

Showing posts with label அறிவிற்கோ எல்லையில்லை.. Show all posts
Showing posts with label அறிவிற்கோ எல்லையில்லை.. Show all posts

Sunday, December 30, 2012

அறிவிற்கோ எல்லையில்லை.

அறிவிற்கோ எல்லையில்லை. சிறுக்கதை

தென்னாலி ராமன், பீர்பால் போன்று அகடவிகடத்தில் சிறந்த அறிவாளி ஒருவன், ஒரு வெளிநாட்டில் இருந்தான். அந்த நாட்டில் அறிவாளிகளைத் தெரிந்துக் கொள்ள தலைப்பாகை அணிந்து  கொள்வார்கள். அதுவும் அறிவுக்கு ஏற்றபடி தலைப்பாகையின் அளவும் மாறுபடும். அதை வைத்தே அவர்களின் அறிவுத்திறமையை அறிந்துக் கொள்ளலாம்.

இந்த அகடவிகடனும் பெரிய தலைப்பாகை அணிந்திருந்தான். படிப்பறிவு இல்லாத ஒருவன், ஒருகடிதத்தை  அகடவிகடனிடம் கொடுத்து படித்து சொல்லச் சொன்னான்.  வாங்கி பார்த்த அகடவிகடன், எவ்வளவோ முயன்றும் அதில் எழுதியிருப்பது என்னவென்றே புரிந்துக் கொள்ளமுடியவில்லை. இதில் எழுதியிருப்பதை என்னால் படிக்க முடியவில்லை என்று திருப்பிக் கொடுத்தான்.

அதற்கு அவனோ, இவ்வளவு பெரிய தலைப்பாகை அணிந்திருக்கிறாயே, இது கூட படிக்க முடியவில்லையா என கேலியாக கேட்டு நகைத்தான்.  அகடவிகடனுக்கு மகா கோபம். உடனே, அவன் தலையிலிருந்த தலைப்பாகையை இவன் தலையில் வைத்து, இப்பொழுது உன் தலையில் தான் பெரிய தலைப்பாகை உள்ளது. எனவே நீயே படித்துக் கொள் என கூறியவாறே அங்கிருந்து சென்றுவிட்டான்.

என்ன படித்து விட்டீர்களா? சொல்லுங்கள் உங்கள் கருத்தை.