Translate

Showing posts with label போனது போகட்டும். Show all posts
Showing posts with label போனது போகட்டும். Show all posts

Monday, August 6, 2018

போனது போகட்டும்





=++++++++++++++++++++
போனது போகட்டும்
++++++++++++++++++++

என்னவளே இனியவளே
எனக்கு நீ மூத்தவளே,
உன் வருத்தம் நான் அறிந்தவளே.
மனமுடைந்து தவிக்காதே. 11

தோழியாய் எனை அணைத்தவளே
துவண்டு நீயும் போகாதே.
என் கரத்தைப் பிடித்துக் கொள்.
தோளில் தலை சாய்த்துக் கொள்.
உன்னோடு துணையாக
என்றுமே நானிருப்பேன். 29

நடந்ததெல்லாம் மறந்து விடு.
நடப்பதை இனி சிந்திப்போம்.
துணிவாக நாமிருப்போம்.
வாழ்வில்லையா நமக்கினி
வாழ்ந்து நாம் வென்றிடுவோம்.
மீண்டும் உனக்கு சொல்கின்றேன்
என்றும் துணையாய் நானிருப்பேன். 48

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏