Translate

Monday, July 30, 2007

காதல் மயக்கம்

என் இதயம் பறக்கிறதே
காற்றடைத்த பலூன் போல.
என்னை நீ ஏற்றதாலா,
உன் மனத்தை கொடுத்ததாலா.

நானறிவேன் உன் மனத்தை
உன் மனமும் எனைப் போல
பறக்கத் துடிக்கும்
என்னுடன் சேர்ந்திணைந்தே.

மகிழ்ச்சியால் விரிகிறது
விரிவதால் வலிக்கிறது
வலியிலும் இனிக்கிறது
தொடர வேண்டுமென்றுமே.

மகிழ்ச்சியால் கண்ணும்
பொழிகிறதே பனித்துளியாய்.
"எனோ நினைக்கிறது என் மனமும்,
இன்றே நாம் இணைந்தால் சுகமென்று."

அல்லது

"ஏனோ நினைக்கிறது என் மனமும்,
இக்கணமே இறந்தாலும் நலமென்று."

பின் குறிப்பு:: இக்கிளைமாஸ் மேற்காணூம் இரண்டு முடிவுகளில் எது நன்றாக உள்ளது ?. உங்கள் கருத்தை அறிய ஆவலுடன்.

Sunday, July 29, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நிஜம்
+++++

நோயாளியே !
மரித்துப்போ.
உன்னை விட,
உனக்காக உழைப்பவர்கள்
அதிகம் சிரமப்படுவதால்.
%%%%%%%%%%%%%

மறுப்பதற்கில்லை
++++++++++++++

நீயோ உரிமையென,
அவரோ இல்லையேன.
கொள்வாயோ ஏற்று
அல்லது
கொடுப்பாயோ விட்டு.
எதைக் கொண்டு வந்தாய்
அதை இழப்பதற்கு
இறைவனின் கூற்றுப்படி.
%%%%%%%%%%%%%

நடப்பு
+++++

பிறப்பை எடுத்தாய்
பிறப்பைக் கொடுப்பாய்.
அழிப்பதை நினைத்தால்,
அழித்தே போவாய்.
%%%%%%%%%%%%

தலைகணம்.

வானமே வசப்பட்டது
எனது அன்பினால்.
ஆனால் நீயோ,
வசப்படவில்லை என்னிடம்.
வீழ்ந்து விட்டேன் மடுவிலே,
தலைகணத்தினால்.
எழுந்து நிற்க தேடினேன்
தோள் அணைக்க.

ஓலமிட்டது !!....

தேனென கருதி
சுவைத்திட்டேன் விரும்பி.
கசந்ததை உணர்ந்தேன்
விஷமென அறிந்தேன்.
நாவது வரள,
உடலது துடிக்க,
உயிரது பிரியும்
நேரமது நெருங்க,
மனமோ ஓலமிட்டது
"ஐ லவ் யூ"
"ஐ லவ் யூ".

Friday, July 27, 2007

சொல்லித் தந்தாய் !

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச
அறித்துக் கொள்ள நானே
செய்து விட்டாய் நீயே.

நானும் கீழே விழ,
எள்ளி நகையாட
செய்து விட்ட நீயே
சென்று விட்டாய் கானா.

என் நிலை அறிந்தே
வெதும்பியது மனமே.
இந்நிலை மாற்ற
எண்ணினேன் உடனே.

வெற்றிக் கொள்வேன்
எனை அறிய.
செய்திடுவேன்
நீ அறிய.

கொடுக்கிறேன் பங்கு

உங்கள் அழுகை
பிடிக்காது எனக்கு,
என் அழுகையே
அதிகாமாய் இருப்பதால்.

என்றும் நீங்கள்
மகிழ்ச்சியாய் இருங்கள்.
கொடுக்கிறேன் பங்கு
என் மகிழ்ச்சியையும்.

Wednesday, July 25, 2007

நட்பெனும் உறவிலே

மாபெரும் மரத்திலே,பறவை ஒன்று
தங்கி வாழ்ந்தது நாட்கள் சிலவே.

கலகலக்கும் குரலிசையால்
கலக்கியது இதயங்களை.

வந்த நேரம் மறையவில்லை.
கழிந்த நேரம் தெரியவில்லை.

செல்கிறது இறையைத் தேடி.
என்று வருமோ இம்மரத்தைத் தேடி.

Tuesday, July 24, 2007

பிரியமானவளே !........

எனைக் கொடுத்து
உனைத் திருட
நினைத்திருந்தேன்.
ஏற்கவில்லை
என் மனத்தை.
இழக்கவில்லை,
கொடுக்கவில்லை,
உன் மனத்தை.

நிறைக்குறை அளந்தேன்,
இருபுறமும்.
சமமென நினைத்தேன்
சரி தானே.
இல்லை, கொடுத்தாயா
உன் மனத்தை
வேறிடமே.அறியா நிலையுடனே
கேட்டேன் உன்னிடமே.

நட்பென கூறி
என் காதலையே
முறித்து விட்டாய்.
ஒருதலைக் காதலால்
துடித்து விட்டேன்.
நட்பொன்றே போதுமென
பிரிந்து விட்டாய்.
மனமொடிந்து விட்டேன்,
பிரிக்க முடியா காதலுடன்.

Sunday, July 22, 2007

அவளா ???...... இவள் !!!!!.......

நான் பிறந்ததைச் சொல்லவா ?
வளர்ந்ததைச் சொல்லவா ?
விழிகளில் விழுந்ததைச் சொல்லவா ?
காதல் மலர்ந்ததைச் சொல்லவா ?

அவளுடன் கழித்தைச் சொல்லவா ?
காதலுடன் கொஞ்சியதைச் சொல்லவா ?
சுற்றித் திரிந்ததைச் சொல்லவா ?
உலகை மறந்ததைச் சொல்லவா ?

உறவுகள் பிரிந்ததைச் சொல்லவா ?
உறக்கம் தொலைந்ததைச் சொல்லவா ?
சொல்லி விடுகிறேனே முதலில்
என் காதல் தோல்வியை.

நிலையற்ற நினைவுகளால்
சுற்றி வருகின்றேன்
நாங்களாய் இருந்து
நான் மட்டுமாய் இன்று.

சந்திக்கும் நேரம் தாமதமானால்
துடித்து துவழ்பவளா, இன்று !
கொஞ்ச செய்து, கெஞ்ச செய்து
தவிக்க விட்டவளா, இன்று !

சிரித்து, சிரிப்பூட்டி
சிரிக்கச் செய்தவளா, இன்று !
நேரங்கழித்து விடைப்பெற்றாலும்
வாட்டமடைபவளா, இன்று !

கண்கள் கிறங்க,
உடலைத் தழுவி,
கழுத்தை வளைத்து,
உதட்டைத் தேடி,
முத்தம் கொடுத்து,
கிளர்ச்சி ஊட்டியவளா,இன்று.

என்னுடை சிறிதே கசங்கினாலும்
வருந்துபவளா, இன்று !
கணநேரமே பிரிந்தாலும்
கண்ணீர் விடும் அவளால்,
கிழிந்த உடையாய், கலைந்த கோலமாய்
என் நிலைக்கு காரணமாய் இன்று.

அன்றொரு நாள், அவளோ
காத்திருக்க வைத்தாள்.
காலம் தாழ்த்தி வந்தாள்.
மகிழ்வுடனே சொன்னாள்.

வெளிநாட்டு மாப்பிள்ளையாம்,
கை நிறைய சம்பளமாம்,
சுகமான வாழ்வாம்,
இது அவள் இலட்சியமாம்.

அழைப்பிதழ் வந்திடுமாம்
வந்தவுடன் தருவாளாம்
என்றும் என் நினைவாக
பரிசுப் பொருள் தரச்சொல்லி,
கூறி விட்டு அவளும்
சென்று விட்டாள் விரைவாக.

படிப்பிருந்தும் வேலையில்லை,
வருவாயிக்கு வகையில்லை,
வாழ்க்கைக்கு வசதியில்லை,
இன்றுள்ள என் நிலையை,
சொல்லாமல் காட்டி விட்டு
அகன்று விட்டாள் அங்கிருந்து.

என் நிலை தெரிந்தாலும்,
கருத்தை அவள் கேட்கவில்லை.
என்னுடன் சேர்த்திணைத்து
கோட்டையைக் கட்டியவள்,
இன்றோ கட்டிவிட்டாள்
எனை வைத்து சமாதியாய்.
ஆனாலும் கற்பைக் காத்தேன்
அவளிடம் நான்.


Thursday, July 19, 2007

தலைப்பு.....!

தலைப்பே
தலைப்பாய் முன்னிருக்கும்


தலைப்பே
தலையாய் தானிருக்கும்.

தலையாக தானிருப்பான்
தலைவனாக தானிருப்பான்.

தலைப்பையிலிருந்து
தலையே முன்வரும் முதலாக.

தலைப்(பி)பையிலே அனைத்துமே
அடங்குமே உணர்வுகளாக.

Wednesday, July 18, 2007

கொஞ்சும் நேரமிது !!!

கொஞ்ச நேரமே
கொஞ்சித்தான் பார்த்திடவே
கொஞ்சும் நாளிதிலே
கொஞ்ச வருவேன்
கொஞ்சத்தான் உன்னிடமே.

கொஞ்சுகின்ற பார்வையெல்லாம்
கொஞ்சத்தான் சொல்லிடுமே.
கொஞ்சி குலவிடவே
கொஞ்சுகின்ற முகத்தோடு
கொஞ்சுகின்ற முடிவோடு
கொஞ்ச நாளிலே வந்து
கொஞ்சுவேன் நித்தமும் உனையே !!!.

Tuesday, July 17, 2007

நான் யார் ?

நான் யார்
உன் மீது கோபப்பட.

என்ன உரிமை
உன் மீது கோபப்பட.

உணர்வுகள் இருந்தால் தானே
உன் மீது கோபப்பட.

மேலும்
கோபம் இருந்தால் தானே
உன் மீது கோபப்பட.

Monday, July 16, 2007

என் அன்பே என்னவென்பேன்?....

எண்ண்ங்களின் வேகங்கள்
கட்டி வைத்த அணையினிலே
தேங்கியிருக்கும் நீர் போல,
பொங்கி வழிய வழியின்றி
அலைப்பாயும் வேலையிலே,
துடித்ததிரும் உதடுகளோ
சொற்களைப் பொருக்கிக் கொள்ள,
அடிக்கிக் கொள்ளும் இதயமோ
நிலையின்றி துடித்துக் கொள்ள,
விழிகளில் பூத்த மலர்
மனத்திலே தேன் சொறிய,
வாய் அசைத்த சொற்களெல்லாம்
செவிக் கேட்டு இருந்தாலும்,
ஏங்கி நிற்கும் கண்களுக்கு
எழுத்துருவில் அனுப்பி வைத்தேன்.

Sunday, July 15, 2007

ஹைக்கூ கவிதைகள்....

தனித்திருந்தேன்
விழித்திருந்தேன்
பசிக்கவில்லை
மனத்திலே நீ......!
@@@@@@@@@@@

என்று சந்திப்போமோ?
*********************
வட்டப் பாதையிலிருந்த
நாம்
நீள்வட்ட பாதையில்
இன்று
வெவ்வேறு திசையிலே.
##################

''சக்தி'' நீ...
''சிவ''மாய்
நெற்றிக்கண்
திறந்தாலும்
''சுந்தர''மாய்
இருக்கின்றாய்.
$$$$$$$$$$$$$$$

நீரிலா?
நிலத்திலா?
விண்ணிலா?
எங்கே?

தேடுகிறேன்
உன்னிடத்தில்
தொலைத்த
என் நினைவுகளை.
%%%%%%%%%%

நவரசம் காட்டும்
கவிதையும் - முகம்
திருப்பிக் கொண்டது
இன்று என்னிடம்.
&&&&&&&&&&&&&&

Thursday, July 12, 2007

மூழ்கி தான் இருப்போமே !!!

ஆளுகின்ற எண்ணங்களால்
மனமோ தத்தளிக்க.
தத்தளிக்கும் வேகத்தில்
கண்களில் நீர்துளிக்க.
துளித்த விழிநீரோ
நினைவுகளால் பூத்திருக்க.
பூத்திருக்கும் நினைவுகளோ
பசலையால் மூடுயிருக்க.
மூடியிருக்கும் உதடுகளோ
விழி கூறும் செய்திகளை
அள்ளவும் முடியாமல்
துள்ளுகின்ற வார்த்தைகளை
வார்த்தைகளாய் சொல்லாமல்.
எண்ணங்களின் வேகத்தால்
வாய் அடைத்துக் கொள்ளுமோ.
அடைத்துத்தான் கொள்ளாமல்
உளறித்தான் கொட்டுமோ.
கண் பேச்சுக்கும் வழியின்றி
ஒலிப்பேச்சைத் தொடர்ந்திருப்போம்
நாம் கூடுகின்ற நாள் நோக்கி.
கொட்டுகின்ற வார்த்தைகள்
மகிழ்சியின் வேகத்தால்
சிரிப்பலையில் மூழ்கியிருக்க
மூழ்கித்தான் இருப்போமே
இன்றிலிருந்து இனிமேலே
இணையும் நேரம் பார்த்திருந்து.

Wednesday, July 11, 2007

உன் நினைவும்....

பார்த்த நாள் முதலே
பார்வையெல்லாம் உன் மீதே.
நினைக்கும் நினைவுகள்
காட்சிகளாய் உனைக் காட்டிடுமே.

திரும்பிய பக்கமெல்லாம்
தித்திக்க வைக்கின்றாய்.
சொல்லும் சொற்களெல்லாம்
உச்சரிக்கும் உன்னைத்தான்.

அறியாததை அறிந்துக் கொள்ள,
புரியாததை புரிந்துக் கொள்ள,
நெருங்கா நேரத்தை
எண்ணி எண்ணி,
பெரிதாக பெருமூச்சை
நாம் விடுகின்றோம்.

விரைவிலே உனையே
கவர்ந்து செல்ல
உறுதியுடன் நினைத்து
உவ்வகைக் கொள்கின்றேன்,
உன் நினைவும்
என் மேலே உள்ளதாலே.

Tuesday, July 3, 2007

(உன்) நினைவுகள் அகலாமலே !

பூகம்பத்தின் அறிகுறியாய்
எண்ணங்கள் சுழன்றடிக்க
மனமோ தள்ளாட
நிலையின்றி இருக்கையிலே
இரைப்பைநீர் வெளியே
மூக்கின் வழியே பிச்சியடிக்க
நொடியொன்றில் பூகம்பமாய்
உயிர் மூச்சடைக்க
உடலோ விசிறியடிக்க
துடித்து எழுந்தேன்.

மூச்சை சிராக்கி
ஒரு கை நீர் அருந்த
தொண்டையோ கமறலெடுக்க
மருந்துவில்லையைக் கொடுத்தேன்
கமறல் அடங்க.

மதி உறக்கம் இல்லாது
விழி உறக்கமேது
விடிவெள்ளித் தோன்றியது
மதிக்கிறக்கம் கொண்டது
விழியும் உறக்கம் கொண்டது
மயக்கமருந்தில்லாமலே.

இதயம் உறங்கவில்லை
ஆதனால்
துடித்துக் கொண்டே இருக்கிறது
நிகழ்வுகளை ஏற்று
உன் நினைவுகள் அகலாமலே.

வேண்டும் தன்னம்பிக்கை !

தோல்வி என்பது தாமதமே
தோற்கவில்லை நீங்கள்
நினை(த்து)வில் கொள்ளுங்கள்
தோல்வியென கருதும்போது.

வராது வாய்ப்பு
தேடி நம்மை.
செல்ல வேண்டும்
தேடி அதை.

எண்ணம் கொண்டு
செயல் பட்டால்
வெற்றி வரும்
பெரும் மகிழ்வோடு.

வாய் வேண்டாம்
திறமை பேசட்டும்.
வெற்றி நிச்சயமாகும்
வாழ்வு வளமாகும்.

வேண்டும் தன்னம்பிக்கை
வெற்றியதை அடைய.
வேண்டாம் அவநம்பிக்கை
உள்ளதையும் தொலைக்க.

Monday, July 2, 2007

ராஜா கதை !!!!!!!!!!!

சென்ற வழியெல்லாம்
செந்நீர் ஓட,
செழித்திருந்த இடமெல்லாம்
செழிப்பற்று போக,
செல்வங்கள் பல இருந்தும்,
சேயற்ற நிலையறிந்து
செல்லாக்காசாய் உற்றார் மதிக்க ,
செவ்விளநீர் சுவையற்று போக,
செம்பொதியென மனமோ கனக்க,
செம்மரமாய் தனை நினைத்து
செருக்கடைந்த மன்னனவன்
செயலிழந்து போனான்.

படியளப்பவர்கள் !!

படிக்காதவன்
படி அளந்தான்,
கூலி செய்து.

படித்தவனோ
படி அளக்கிறான்,
வேலைத் தேடி.
===============

பின் குறிப்பு ;
1) படி அளந்தான் = சம்பாதிப்பது.
2) படி அளக்கிறான் = பல அலுவலகங்களுக்கு
அலைவது.

Sunday, July 1, 2007

கவிதை !!!

தாயின் மறைவினால்
ஆரம்பித்தேன் எழுத.

மனத்தின் உந்துததால்
தொடங்கினேன் எழுத.

மகிழ்சியின் வெள்ளத்தில்
தொடர்ந்தேன் எழுத.

நினைவுகளின் சோகத்தில்
தொடர்கிறேன் எழுத்தை.

எண்ணங்களின் வடிகாலாய்
எழுதுவேன் கவிதையை.