Translate

Wednesday, December 24, 2014

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

ஆண்டவரின் கிருபையால் 
ஒளி வீசும் இல்லங்கள்.
ஆஹாவென புகழ்பாடும் 
அற்புத கோலங்கள்.

வானிலிருந்து விண்மீன் 
வழிதனைக் காட்ட,
வந்திணைந்த மக்களோ 
வழிதனைப் பிடிக்க,



ஆண்டவர் பாதங்கள் 
அடியெடுத்து வைக்க, 
அனைவரின் இல்லத்திலும் 
அகலட்டும் துன்பமெல்லாம்.

வாழ்வு அங்கே 
உயர்வினைக் கொடுக்க,
ஸ்தோத்திரம் கூறினோம் 
பிதாமகன் அவதரித்த நாளில் 

ஆண்டவரே ஆசிர்வதிப்பீர் 
அனைவரும் 
அனுதினமும் 
அன்புடனும் நலமுடனும் வாழ,

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.


#வழிதனைக் காட்ட = ஆண்டவர் பிறந்துள்ள இடத்திற்கு 
#வழிதனைப் பிடிக்க = ஆண்டவரின் வழிமுறையை கடைப்பிடித்தல்.

Thursday, December 18, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Gee Shankar







60தைத் தாண்டி / 62ஐ தொட்ட  இளைஞர் நண்பர் சங்கர் ஜி அவர்களை, பிறந்தநாளுக்கு வாழ்த்துங்கள் நண்பர்களே.

வினைத்தீர்க்கும்
விக்ன விநாயகர் அருளால்
விரையட்டும் நாட்களெல்லாம் 
விளையாடும் அளவுக்கு
இளமையோ திரும்பட்டும்
இருபதாய் துலங்கட்டும்.
இருப்பாய் அது வளர
இன்பமாய் இருக்கட்டும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Wednesday, December 17, 2014

இனிய திருமண வாழ்த்துக்கள் - சந்தோஷ் [ Mr.santhosh ]


சந்தோஷ் 
Mr.santhosh


இணைந்த உள்ளங்கள்
இரண்டற கலக்கட்டும்.
இரண்டென பெற்று
இன்பமென்றும் தொடரட்டும்.

இனிய திருமண வாழ்த்துக்கள்.

Thursday, December 11, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - திருமதி. சரஸ்வதி பட்டாபிராமன்




எமது சகோதரி திருமதி. சரஸ்வதி பட்டாபிராமன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நிலைக் கொண்ட இளமைகள் 
இனிமையாய் நினைவிலே.
பரந்த (விரிந்த ) அந்த நாட்களும் 
நாடி வந்து சொல்லுமே.
வாழ்வில் நிலையாய் மகிழ்வுகள் 
மலர்ந்துக் கொண்டு இருக்கவும்,
வலு மிகுந்த நலனுடன் 
செல்ல வேண்டும் என்றுமே.
நிகரில்லா அளவிலே 
அருள வேண்டும் இறைவனே.



மகிழ்வான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.


Wednesday, December 10, 2014

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்




துவங்கிய இரவு
துரிதமாய் விடியட்டும்.
தூய்மையான நட்புடனும்
தூயவன் அருளோடும்
துலங்கட்டும்  உறவுகள்.

இனிதாகட்டும் இந்நாளும் நண்பர்களே .

Tuesday, December 9, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Samy Gopal




இறைவனின் அருளோ உடனிருக்க,
நட்புகளின் வாழ்த்துகளோ தொடர்ந்து வர,
நாளும் பொழுதும் நலமாக,
மனமோ என்றும் மகிழ்வாக
நீங்கள் அதிலே திளைத்திருக்க
நாங்கள் வாழ்த்தினோம் அன்பாக.

இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் ஐயா.




Monday, December 8, 2014

பழகுமோ? - குறுங்கவிதை




சந்தோச நினைவுகள்
சங்கீதம் பாட,
சலங்கையணியும்
சதிரிட  பழகுமோ?

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே ...




Thanks for Photos: 

1) http://mylaimuthukkal.blogspot.com/
2) http://www.geotamil.com/pathivukal…/…/stories/a_saskiya4.jpg

Sunday, December 7, 2014

ஹைக்கூ....



புன்னகை பூக்களை பொறுக்குகிறேன்.
அலைகிறது பேராசையாய்

'' மனம் ''

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

எதை?






வார்த்தைகளின்றி
வதங்கி கிடக்குதோ?
வம்புக்கு தும்புக்கு
வழியின்றி போனதோ?
வானிலே விழிகள்
வழி காண துடிக்க,
வாய்த்த நட்போ
வாய்ப்புக் கொடுக்குமோ?
வாயைத் திறந்து
வாங்கி கொள்ளுமோ?

எதை?  எதை? எதை?
''                 ''            ''
''                 ''            ''
''
''
''
''
''
''
''
''
இனிய நாள் நல்வாழ்த்துக்களை !!!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 2014 - திருமதி.சுபாஷிணி நாராயணன்


திருமதி.சுபாஷிணி நாராயணன் 

நட்பும் உறவும்  சீராட்ட,
நலங்களெல்லாம் உமை நீராட்ட,
நினைவுகளோ என்றும் தாலாட்ட,
ஆனந்தத்தில் மனமது பூத்திருக்க,

இரத்தத்தால் பந்தமோ  பிணைந்திருக்க,
பாசத்தால் உறவோ  இறுகியிருக்க,
நலமோடு நாட்களெல்லாம் நடைப்பயில,
நினைவுகளோ  மகிழ்வோடு சிறகடிக்க,
ஓம் எனும் அருளோ உமைக்காக்க,
பிரார்த்தித்தித்து வாழ்த்தினோம் மகிழ்வாக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.

கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் 3




கார்த்திகை விளக்குகளோ
மினுமினுக்கும் விண்மீன்கள்.
கவர்ந்திழுக்கும் அத்தனையும்
கண்களை சிமிட்டியபடி.

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.



‪#‎இது‬ நால்வர் வீட்டு கார்த்திகை தீப திருவிளக்குகள்.

கிண்ணத்திலே








வண்ண வண்ண மலர்களோ
வரிசைகளாய் காட்சியளிக்க,
ஒன்று மட்டும் கிண்ணத்திலே
ஒய்யாரமாய் அமர்ந்திருக்க,
விழுந்ததடா நெஞ்சமது 
கிண்ணத்திலே உறவாட.
இனிய நாளாகட்டும் நண்பர்களே .

உயர்வு.




செயல்களில் ஒன்றாய்
செலுத்துதல் நன்று.
பண்புடை செயல்களில்
பணிதலும் ஒன்று.
பிரார்த்திக்கும் மனமோ
உயர்விலும் உயர்வு.

இனிய நாளாகட்டும் நட்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், 
சூழ்ந்துள்ள நட்புக்கும், உறவுக்கும்.



Friday, December 5, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Jahir Gold





தங்கமென மினுமினுப்பு.
கருப்புத்தங்கமென பளபளப்பு.
வார்த்தைகளில் ஓர் விறுவிறுப்பு.
பேச்சுக்களில் ஓர் சலசலப்பு.
வாழ்விலோ சுறுசுறுப்பு.
நிலைக்கட்டும் கதகதப்பு.
உயர்வோ சரசரப்பாய்
செல்லட்டும் பரப்பரப்பாய்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


சுகம் தேடி.




பட்டொளி வீசியபடி
படர்ந்ததடி சூரிய ஒளி.
பறவைகளும் அங்குமிங்கும்
பறந்ததடி இரைத்தேடி.
பார்வையுள்ள மனிதனோ 
படுத்திருந்தான் சுகம் தேடி.

சனி விடுமுறைநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

தலை நிமிர்ந்து நில்லடா!




தமிழின் எழுத்தாலே
இழிவுக்கு வழியில்லை.
இழிவாக இருந்தால் - அது
தமிழால் வந்ததில்லை.

மாடங்கள் பல கட்டி
கோட்டையாய் செய்திடுவோம்.
மாக்களாய் வருவோரை,
மக்களாய் திருத்திடுவோம்.

ஒன்றாய் நாம் இணைந்து
வளம் மேலும் சேர்த்திடுவோம்.
வறுமை என்று வருவோரை,
குறைப்போக்கி அனுப்பிடுவோம்.

வந்தாரை வாழ வைக்கும்
எங்கள் தமிழ்நாடு.
வாழ்ந்தாரை நினைக்குமே
எங்கள் திருநாடு.


இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.

கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் 2





கார்த்திகைக் குமரனின்
கனிவான விழிகள்
காணட்டும் உம்மை,
கனமழையாய் அருளட்டும்

மகிழ்வான கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் 1





தீபத்தின் ஒளிப்போல
திகழட்டும் உம் வாழ்க்கை.
சுடர் விடும் பிரகாசத்தில்
சுற்றிருப்போர் காணட்டும்.
மகிழ்வான நன்னாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

Thursday, December 4, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - தேனம்மை லெக்ஷ்மணன் 13/07/13




தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

உமக்குத்தான்....

ஏட்டிலே எழுதி வைத்தேன் 
எழுதியதை சொல்ல வந்தேன்.
சொல்ல வந்த வாழ்த்துக்களை 
சொல்லாமல் இருப்போமோ?

வற்றா நதியாய் கவி பிறக்க,
வளமது நலமுடன் இணைந்திருக்க,
என்றுமே மகிழ்வுகள் உடனிருக்க,
பகிர்ந்தோமே வாழ்த்துகளை உமக்குத்தான்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ. 

Wednesday, December 3, 2014

உலக ஊனமுற்றோர் தின நல்வாழ்த்துக்கள்.















சுமைகளில்லா வாழ்க்கையுண்டோ
சுமப்பதில் பேதமுண்டே.
அறியா நிலைக் கொண்டு
அனத்துவதில் பயனென்ன?
போராட்ட வாழ்க்கையிலே 
உறுதியுடன் செயல்படுக.
தயக்கங்கள் தகர்த்தெறிந்து
வீறுகொண்டு எழுந்திடுக.
மாற்றங்கள் நமக்கென
கொண்டு வருவோம்
உயர்வான நிலையை
நாமடைய,
ஊற்றுக்கண் எதிலேன
நாமுணர்வோம்.
இறையருள் இன்னருள்
என்றேன்றோம்
அத்தனையும் உமக்கென
வேண்டி நின்றோம்.
உலக ஊனமுற்றோர் தின நல்வாழ்த்துக்கள்.





Tuesday, November 25, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Vithyasagar Vidhyasagar






வித்யாவாணியின் கடாஷம்
விரியட்டும் உம் படைப்புகளில்
விண்ணளவு உயரட்டும்
வியக்கட்டும் பார் முழுதும்.
நலனுடன் விளையாட,
மகிழ்வுடன் கவிப்பாட
மனமது துள்ளியாட,
வாழ்வாங்கு வாழ்ந்திருக்க
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞரே.



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sri Vasavi Priya Rajesh





ஒவ்வொரு கேக்கும் 
உன் பிறந்த நாளை 
நினைவூட்டட்டும்.
அத்தனையும் சுவையாய் 
மனத்திலே இனிக்கட்டும்.
உள்ளத்திலே மகிழ்வும் 
உடலிலே நலனும்,
இளமையாய் நிலைத்திருக்க,
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ வாசவி ப்ரியா.   




Monday, November 24, 2014

கலங்குகிறது - ஹைக்கூ....






காணா நெஞ்சமும்,
கண்ட கண்களும்
''கலங்குகிறது''

மகிழ்வான நன்னாள் வாழ்த்துக்கள் அன்பு நட்புகளே .

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - கவிஞர் மைக்கல்கொலின்






கவிஞர் மைக்கல்கொலின் 

உள்ளங்களோ கொடிகளாய் பிணைந்திருக்க,
மலர்களாய் வாரிசுகளோ பிறப்பெடுக்க,
உறவுகளோ இயற்கையான உரமாக,
வாழ்வோ செழிக்கட்டும்  மிக மகிழ்வாக.

மகிழ்வான திருமண நல்வாழ்த்துக்கள்.

Saturday, November 22, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Asukavi Navaneetha Krishnan




Asukavi Navaneetha Krishnan


கிருஷ்ணனின் லீலைகளோ அளவற்றிருக்க,
அத்தனையும் மகிழ்வாய் நமக்கது இருக்க,
நவநீதனாய் உடனிருந்து அருள் பாலிக்க,
நலன்கள் யாவும் நிலைத்திருந்து உமை காக்க,
இனிய இந்நாளில் வாழ்த்தினோம் அன்புடனே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய நல்வாழ்த்துக்கள் - ஸ்வேதா




விழி வழிக் கண்டு
செவி வழிக் கேட்டேன்.
வழிந்த சொற்களால்
நிறைந்தது நெஞ்சு.

பணிகளில் நிறைவாய்,
பக்குவம் அடைய,
நிறைந்த வாழ்த்து
மகிழ்வுடன் உனக்கு .

இனிய நல்வாழ்த்துக்கள் ஸ்வேதா .  

குறுங்கவிதை




விடியும் பொழுது
விழித்துக் கொள்ளும் எண்ணங்கள்
விரியுமே மனத்தில்
விண்வெளி போல.


இனிய திங்கள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.. =D

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் - ‎Paramasivam Udayakumar





பாதைகளோ கடினமாக,
படிகளெல்லாம் உயரமாக,
பதறாமல் துணிவுடனே,
பகுத்தறிந்து நிலையாக
உச்சியை அடைந்திடவே
உமையே வாழ்த்தினோம்
மிக்க மகிழ்வுடனே.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Thursday, November 13, 2014

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து - Ramesh Periyasamy & ‎Bhuvana Ramesh




Ramesh Periyasamy & ‎Bhuvana Ramesh

காணக்கோடி பலயிருக்க,
கண்டு நீயும் மகிழ்ந்திருக்க,
கருவறையில் காத்திருந்து 
காண வந்தாயோ கனவுலகை நீ.

பார்த்திட்ட உடனே 
பண்பலையாய் நீ.
பரவசத்தில் நாங்கள் 
பார்த்ததும் உன்னை.

உன்னினிய ஒலிகளுக்கு 
உருவமில்லை எந்நாளும்.
உருபோட பார்த்தோமே 
உச்சரிக்கும் உன் ஒலிகளையே.

வளர்ந்திட வேண்டும் 
நலமுடன் நீ.
வாழ்த்திட வந்தோம் 
மகிழ்வுடன் நாங்கள். 



--
இப்படிக்கு
Uncle.A.M.பத்ரி நாராயணன்.

Aunty.& Family

Monday, November 10, 2014

இணைந்து - குறுங்கவிதை






புதுப்புது கோலங்களில்
பூக்கும் புன்னகையும்
 கதைகள் சொல்லுமோ
விழிகளுடன் இதழ்களும்

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

Sunday, November 9, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Jayanthi Sai









இனிமையிலும் இளமையாய்
தொடுத்த பூஞ்சரமோ
வாடாமல் மணம் வீச,
இறைவனின் அருளால்
நலனும் மகிழ்வும்
என்றென்றும் நிலைத்திருக்க,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி. 

குறுங்கவிதை




காய்ந்த மலர்களும்
பூரிப்படைகிறது,
நீ முகர்ந்ததை எண்ணி.

இனிய காலை வணக்கம் நட்புகளே .

Saturday, November 8, 2014

நட்புக்கு வரவேற்பு - Pacha Yappan & Kjt Pushparaj






Pacha Yappan & Kjt Pushparaj

இன்றைய நாள் மகிழ்வாய்,
இனி வரும் நாட்கள் நட்பாய்
மனத்திலே மாசுகளின்றி தொடர,
வாழ்த்தியே வரவேற்கிறோம்
எமது நட்பு குழாமிலே
 நீரும் ஒரு நட்பூவாக இனித்திகழ.

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பரே.  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Gayathri Srikanth






Gayathri Srikanth


சீரான வாழ்வுக்கு,
ஸ்ரீனிவாசனும் ஓதுகிறார்
காயத்ரி மந்திரத்தை. :P

சாவித்ரியும், சரஸ்வதியும்
தன்னகத்தே கொண்ட நீயும்
 மகிழ்விலே நீராடி,
 நலமுடன் பறந்தோடி
சிறப்பாக வாழ்ந்திடவே
வாழ்த்தினோம் உமை இன்று.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Palaniappan Chidambaranathan Rajapalayam








Palaniappan Chidambaranathan Rajapalayam


குறைவிலா நலனும்
குன்றா  மகிழ்வும்
குன்றிலிருக்கும்
குமரனவன்  அருள
துதித்தே வாழ்த்தினோம்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - R.c. Palaniappan





R.c. Palaniappan

தீர்த்தாடும்
தில்லையம்பன்
திருவருளில் என்றும் நீங்கள்
திளைக்கவே பிரார்த்தித்தோம்
இனிய இன்னனாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Wednesday, November 5, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Umaa Shaankar







Umaa Shaankar

ஈருருவை ஓருருவாய் தாங்கி,


வையகத்தை வாழ வைக்கும்,


அர்த்தநாரி ஈஸ்வரனின் 


அருளுமக்கு அன்றாடமிருக்க,


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

நண்பர் உமா சங்கரே.