Translate

Showing posts with label சிறகடிக்கும் எண்ணங்கள்.. Show all posts
Showing posts with label சிறகடிக்கும் எண்ணங்கள்.. Show all posts

Monday, December 17, 2012

சிறகடிக்கும் எண்ணங்கள்.

சிறகடிக்கும் எண்ணங்கள்.


சுற்றமும் நட்பும்
தனிமையைக் கொடுக்க,
அருகிலே நீ
மனத்திலே இருவர்
முவ்வருடன் நான்
சங்கமம் ஆனேன்.




















மனத்திலே மகிழ்ச்சி
அருவியாய் கொட்ட
அணைத்துக் கொண்டேன்
உச்சியை முகர.

உணர்வுகளின் தூண்டல்
உள்மனத்தைத் தீண்ட ,
அமுதமாய் உனக்கு
ஆனந்தமாய் தந்தேன்.

அவனின் அருளால்
அவரைப் பிடித்தேன்.
நீண்ட நாள் கழித்தே
நீ எனக்கு கிடைத்தாய்.

பட்ட காயங்களோ
நெஞ்சிலே இருக்க,
பாவப்பட்ட பிறவியென
எனையே நொந்தேன்.

ஆண்டவனின் பாதம்
சரணம் அடைந்தேன் - உன்
தந்தை, அவருடன்
சங்கமமானேன்.

புத்தம்புது மலராய்
எம் மடியினில் உதித்தாய்
மலடியெனும் பெயரை
மடியச் செய்தாய்.



உதிரம் கொடுத்து
உனை நான் பெற்றேன்.
என் மகன் இவனென
பெருமையை அடைய
பெற்றவள் இவளென
சுட்டும் படியாய்,
ஓயாமல் நானும்
சிறப்பாய் வளர்ப்பேன்.