Translate

Showing posts with label சொல்லாமல் [செய்தாய் / செய்வேன்]. Show all posts
Showing posts with label சொல்லாமல் [செய்தாய் / செய்வேன்]. Show all posts

Wednesday, October 4, 2017

சொல்லாமல் [செய்தாய் / செய்வேன்]




சொற்களால் கொல்லுகிறாய் 
சொக்க வைத்து நீ எனை.
சோரம்போனதாய் எண்ணி (சொல்லி)
சொருகுகிறாய் கத்தி என் மனத்தில்.

சொகுசான வாழ்வெனக்கு 
சொல்லி நீ அரவணைத்தாய்.
சொக்கி நான் சரணடைந்தேன் 
சொந்தமது ஆகும்முன்னே.

சொல்லும் செயலும் வேற்றுமையாக்கி  
சொன்னதை இலகுவாய் மறந்து விட்டாய்.
சொலித்த உன் வார்த்தைகளால் - எனை
சோறாக்கி  சேறாக்கினாய்.

சொல்லம்புகள் என்னை துளைக்க,
சொல்லொன்னா துயரத்தில் நான்.
சொருகுவேன் என்றேனும் உன் மனத்தில் 
சோகத்தில் நீ துடிக்க.  


-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.