Translate

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 16, 2009

நன்னிலம் செழிக்க

உணவை இறைத்தால் சேதமாகும்.
நீரை சிந்தினால் விரையமாகும்.
பொருளை இறைத்தால் குப்பையாகும்.
புன்னகை சிந்தினால் நல்லுரமாகும்

நன்னிலமும் பூக்குமே.
புன்னகையால் நிறையுமே.
உலகமும் செழிக்குமே.
வாழுமே நல்லுறவிலே.

சிந்துங்கள் புன்னகையை
மனம் திறந்து.
அள்ளுங்கள் மகிழ்ச்சியை
வழிய! வழிய!!

மனம் திறந்து சிரித்தால்
நோயின்றி வாழ்வோம்.
முயற்சியது இருந்தால்
மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்.

Saturday, June 20, 2009

கவிதைக் கோலம்

சிந்தனையிலே தான்
உதிக்க,
கவிதையாய்
கருக் கொள்ள,
வரிசையாய்
வாய் முனுக்க,
தாட்களில்
பதித்து வைக்க,
அற்புதமாய்
கைகளோ,
வரி வடிவாய்
கோலமிட்டது

Thursday, May 28, 2009

சந்தோசமாய் எழுதுகிறேன்

ஒவ்வொரு மொழி எழுத்துக்களும், எண்களும், இலக்கணக் கவிதைகளும், புதுக் கவிதைகளும், நவின ஓவியங்களும் ( மார்டன் ஆர்ட் )Morden art எனப்படும் ஓவியங்களும் புரியாதவரை புதிர் தான். புரிந்து விட்டாலோ, தொடர்ந்து ஆவலிருந்தாலோ எண்ணங்களோ விரிவடையும், செயல்களொ விரிவடையும்.

அப்படி விடா முயற்சியுடன் எழுத்திலே தவளும் திரு. பாலு (எ) பால சுப்ரமணிய கணபதியின் " சந்தோசமாய் எழுதுகிறேன் " கிளிக்கித் தான் பாருங்களேன்.

இத்துடன் அவருக்காக ஒரு புதுக்கவிதை. அட கோவிச்சிக்காதிங்க, உங்களுக்கும் சேத்துத் தான்.


தேவை முடிந்தது

இரவோ நெருங்க,

இல்லையோ என நினைக்க,

அவளும் வழங்க,

அவனும் ஏற்க,

மனமும் மகிழ,

தேவையும் முடிய,

உண்டியும் நிறைய,

நன்றியை நவின்றான்

பிச்சைக்காரன்.



Monday, January 5, 2009

உயிரென்ன மலிவா?

உறவொன்று கிடைத்ததால்
உதித்தது ஒன்று.

உறவற்று போனதால்
உதித்ததை வளர்த்தாய்.

உறுதியொன்றை எடுத்தாய்
உறுதியென நினைத்து.

உயர்த்தும்
உறுதியில், பள்ளியில் சேர்த்தாய்.

உயர்வளிக்குமிடத்திலே
உயிரும் பறந்ததோ.

உதித்திருந்த மலரும்
உதிரும் நிலையிலே,

உதித்தவன் உயிருடன்
உன்னுயிரும் துடிக்க,

உன்னுடைய சோகமோ
உயர்வாயிருக்க,

உணர்ச்சிகளுக்கிடையில்
உறுதியாய் எடுத்தாய்..

உள்ளத்தின் சோகமோ
பறந்தே அலைந்தது.

உன்னுடைய உள்ளமோ
விரிந்தே கிடந்தது.

உடல் தானம் செய்து,
ஊனத்தைப் போக்கி,

ஊனமுற்றோர் வாழ
உதவி புரிய,

ஈன்றதை பறிக்கொடுத்த நிலையிலே,
ஈடில்லா இழப்பிலே,

முடிவதை செய்தாய்
விரைந்தே எடுத்தாய்.


மகனென்ற உறவு
இல்லாமல் போகலாம்.

உன்னுடைய செயல்கள்
தோல்வியாய் தெரியலாம்.

உன்னுடைய நினைப்புக்கு
தோல்வியே இல்லை.

அஞ்சலி செலுத்த தெரியவில்லை.
ஆறுதல் சொல்லவும் முடியவில்லை.

தலை வணங்குகிறேன்
உனது முடிவுக்கும் உறுதிக்கும்.



பின் குறிப்பு; சேலம் அருகில் ஒரு பள்ளியில் மாணவன் தலையில் அடிப்பட்டு ''மூளைசாவினால்'' இறந்து விட்டான். அவனின் தாயோ, அவன் உடலிலிருந்து உயிர் பிரியுமுன்னே உடல்தானம் செய்ய முடிவெடுத்து, மிகவும் சிரமத்திற்கிடையில் சென்னைக்கு வந்தும், அந்த சிறுவனின் தந்தையின் ஒப்புதல் கிடைக்காததால், யாருக்கும் பயனின்றி மரணமடைந்து விட்டான். அந்த தாயின் இழப்பும், சட்டங்களின் பெயராலே ஏற்ப்பட்ட பயன்படவேண்டிய நோயளிகளுக்கான இழப்பும் எமக்கு ஏற்படுத்திய வேதனையை எம்மால் முடிந்த அளவு கவிதையிலே வடிக்க முயற்ச்சித்து இருக்கிறேன்.