Translate

Showing posts with label பழுது பட்ட உறவுகள். Show all posts
Showing posts with label பழுது பட்ட உறவுகள். Show all posts

Sunday, January 7, 2018

பழுது பட்ட உறவுகள்



எழுதுகின்ற பொழுதுகளில்
எத்தனையோ இழந்திருப்பர்.
எழுதியதை ரசித்தபடி
எண்ணங்களில் மூழ்கியிருப்பர்.

வடித்தெடுத்து வாசிப்பர்
வளர்ச்சிக்கு முத்தெடுப்பர்.
வளமான வாழ்வமைத்து
வானோக்கி உயர்ந்திடுவர்.

காண்பதெல்லாம் ருசியென
கலக்கி சிலரும் அருந்திடுவர்.
கண் விழிக்கும் நாளினில்
காரியம் முழுவதும் முடித்திருக்கும்.

காணாத முகமெனினும்
காதலில் மூழ்கிடுவார்
காமமெனும் போதையில்
கண்ணிருந்தும் இழந்திருப்பார்.

உறவுகள் உடனிருந்தும்
உற்றத்துணையாய் கனிணி மாற
உரு இழந்து போயிருப்பார்
உயிரிருந்தும் உணர்வில்லா ஜடமாக.

சின்னத்திரை முதலிலிருக்க
சின்னப்பேசி உடனிருக்க,
கனிணி சேர்ந்து பிடித்துக் கொள்ள

கண்ணும் காதும் ஆழ்ந்து போக

கருத்ததில்  அது ஊன்றி போக
காற்றிலைனைத்தும் பறந்தாலும்
சுற்றுபுறம் நிலையென்ன
குடும்பத்தின் நினைவெங்கே?

அளவில்லா தகவல்கள்
அறிவிற்கு பல வாசல்கள்.
காணக்கிடைக்க காட்சிகள்.
முனைப்பூட்டும் நிகழ்வுகள்

அறிஞர்களின் அனுபவங்களால்
கற்கக்கொள்ள நிறைய உண்டு
வாழ்ந்த பலர் முறை கண்டு
வாழ்விற்கு பல வழிகளுண்டு.

நாம் கற்றது ஒரு அளவேயில்லை.
கற்பதற்கு அளவேயில்லை.
நாணித்தான் போக வேண்டும்
கற்றதாய் நாம் நினைத்தால்.

அளவோடு மூழ்குவோம்
அமிர்தத்தை நாம் ருசிப்போம்.
அறிவை நாளும் வளரத்துக் கொண்டு
ஆனந்தமாய் நாம் வாழ்வோம்.


ஆக்கம்:-
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன்