Translate

Showing posts with label விடியலில் நான்கு. Show all posts
Showing posts with label விடியலில் நான்கு. Show all posts

Tuesday, January 2, 2018

விடியலில் நான்கு – 4 நீ வேண்டும்



தனியாத தாகம் வேண்டும்
தனி\ணிப்பதற்கு நீ வர வேண்டும்
உடனிணைந்து நீ வர வேண்டும்
என்றுமது நிலைத்திருக்க நீ வேண்டும்
ஏக்கமின்றி தவித்திருக்க நீ வேண்டும்
ஏற்றிட்டு என்றும் பார்த்திட வேண்டும்
புரிந்து நீ அணைத்திட வேண்டும்
புல்லரிக்க செய்திட வேண்டும்
புதுமைகளாய் இருந்திட வேண்டும்
புண்படாமல் உரைத்திட வேண்டும்
புன்னகையால் முகம் மலர வேண்டும்
பூரிப்பாய் மனம் திகழ வேண்டும்
புவியில் எம் படைப்பு நிலைக்க வேண்டும்
தமிழ் தாயே நீயெனக்கு அருள வேண்டும்
ஆவலாய் வாசித்திட வேண்டும்
கருத்தை உணர்ந்திட வேண்டும்
ஆனந்தத்தில் மிதந்திட வேண்டும்
உன் சொற்களால் மகிழ்ந்திட வேண்டும்
அது என் வழியிலும் நிகழ்திட வேண்டும்
துணையாய் நீயிருந்திட வேண்டும்
படைப்புகளுக்கு கரு தந்தருள வேண்டும்
உன் சொற்களனைத்தும் எனக்கும் வேண்டும்
பொருளறிந்து நான் பதித்திட வேண்டும்
பொல்லாப்பின்றி எழுதிட வேண்டும்
பொறுப்பான நடையிட வேண்டும்
பொங்கி தானாய் வர வேண்டும்
பொங்கவும் மனம் துணிய வேண்டும்
உன்னாலே நான் நிலைத்திட வேண்டும்
எல்லோரும் உன்னை போற்றிட வேண்டும்

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன் 🙏