Translate

Showing posts with label ஆதிக்கம் செலுத்திடும் ஆசைகள்!. Show all posts
Showing posts with label ஆதிக்கம் செலுத்திடும் ஆசைகள்!. Show all posts

Friday, June 15, 2018

🌸"ஆதிக்கம் செலுத்திடும் ஆசைகள்!" 🌸








ஆசை விதைகள்
துளிர் விட்டு முளைக்கிறது அன்றாடம்.
உள்ளுக்குளிருந்து இருந்து
தூண்டுகிறது தினந்தோறும்.
ஆசைகள் கோடிக்கணக்கில்
ஆட்டுகிறது மனத்தில் நிலைத்திருந்து. 15

பருவ மங்கையோ பற்றிடத் துடிக்கிறாள்.
இளைஞனும் அவளை அடைந்திடத் துடிக்கிறான்.
அன்றைய உணவை வரியவன் நினைக்கிறான்.
பொருளுடையவன் மேலும் வஞ்சிக்க நினைக்கிறான். 31
இல்லத்தரசிகளையும் ஆட்டுகிறது இன்று
இல்லாத அழகைக் கூட்டிட நினைத்து.
அரசியல்வாதியின் ஊழலைக் கண்டு
அதிகாரிகளும் சுருட்டிட துணிகின்றார்..
தலையிலிருந்து வாலின்முடி வரை
ஆசைகள் நிறைந்து அல்லாடுகிறது இன்று. 51

ஆரம்பமெங்கே முடிவு எங்கே
அறிந்தவன் உண்டோ புவியில் இங்கே.
விழித்தது முதல் உறங்கும் வரை
நினைவுகளில் ஆசை.
தொடராய் தொடர்கிறது கனவிலும் நிலைத்து. 68

✍️✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏🙏