Translate

Thursday, June 28, 2007

திறக்குமா மனம் ?????

கானா கண்கள் பூத்திருக்கும்.
கண்டாலோ மனம் பூத்திருக்கும்.
செயலுக்கு வழி பிறக்கும்.
எழுத்துக்குத் தானே வழிக் கொடுக்கும்.

உன் நினைவுகளால் பல இழந்திருப்பேன்.
அதிலேயும் ஒரு சுகம் கண்டிருப்பேன்.
எழுத்தைத் தந்தது உன் நினைவு.
படைக்கப் பார்த்தேன் உன் அழகை.

கோடுகள் போட்டேன் உனை நினைத்து.
கோளங்களாக உன் உருவம்.
கதைகளாக பலக் கொடுப்பேன்
கவிதைகளாக தான் படைப்பேன்.
விரும்பித் தந்தேன் நான் உனக்கு.
ஏற்றுக் கொள்வாயா மனந்திறந்து ???

அனா, ஆவன்னா........ஹைக்கூ !!!!.........



அனா ஆவன்னா மணலில்
பழகிய நான்கற்பாறையான உன்னில்உளியால் செதுக்காமல்
விரலால் எழுத
நினைத்த என்னை
என்னவென்று சொல்ல

Wednesday, June 27, 2007

முடிவுகள் !


தேர்விலே தேர்வாக,
எழுதிவிட்டோம் விரைவாக.
விடைகளை சரி பார்த்து,
தருவீரோ மதிப்பாக.
பெற வேண்டும் உயர்வாக,
அதனாலே நாமுயர,
நம்மாலே வீடுயர,
வீடாலே நாடுயர,
செய்வோமே நினைவாக.

கிடைக்குமா விடை ????

நேசிக்கிறேன் உனை 
நீங்கா நினைவுடன்.
யோசிக்க வைக்கிறாய் பலவாறு 
அள்ளிக் கொடுக்க மனமிருந்தும்,
ஏனோ கருமியாய். 

கூடும் செயலென நான் நினைத்தேன்.
கூடா நட்பென நீ சென்றாய்.
அறியச் செய்ய நான் முயன்றேன்.
அறிய நீயும் விரும்பவில்லை.

விளக்கம் தரவும் விளையாமல்
விலகி விட்டாய் எனை விட்டு.
விளக்கம் அறியா என் மனமும்,
எப்படிச் சொல்வேன் படும்பாட்டை.

Tuesday, June 26, 2007

அறிந்திருந்தால்.......!

கண்ணகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னைப் பார்த்திருக்கமாட்டேன்.

காதுகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உன் குரலைக் கேட்டிருக்கமாட்டேன்.

வாய் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னிடம் பேசிருக்கமாட்டேன்.

கைகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உனை எழுதிருக்கமாட்டேன்.

மனம் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னை விரும்பியிருக்கமாட்டேன்.

உயிரோடு உயிராக கலந்த
உன்னை சுற்றிருக்கமாட்டேன்,
உன் முடிவு அறிந்திருந்தால்......

கவிதையே !!! ---ஹைக்கூ........

உன்னாலே
ஊஞ்சலாடும் இதயம்,
உறக்கத்தையே
உதறி விட்டது.

Monday, June 25, 2007

திரு இல்லையென்றால் !!!!!!!!!!!

திரு வளத்தானும்,
திரு வலுத்தானும்,
திரு இழந்தானும்,
திரு வலகரத்தால்
திருவலங்காட்டில்
திருவம்மையுடனுறை
திருவய்யன் அளித்த
திருநீறு அணிந்தால்,
திருப் பெற்று
திரு நாளில்
திருவிடம் சென்று
திருவுடன் இருப்பர்
திரும்புதல் இல்லா.

Saturday, June 23, 2007

தவறு யாரிடம் ?

உன் வருகை போது
என் வாழ்க்கையில்
மீண்டுமொரு பருவகாற்று
என நினைத்திருந்தேன்.
நம்பிக்கையெனும்
ஈரப்பசையையும்
உறுஞ்சிய போதுதான்
தெரிந்தது - நீயொரு
வரண்டகாற்றென்று.

உன் வருகையின் போது
கதகதப்பை உணர்ந்தேன்,
பனிகாலத்திற்கு பிறகு
வந்த வசந்தகாலமென்று.
என்னை வெப்பத்தினால்
பொசிக்கியப் போதுதான்
தெரிந்தது - நீயொரு
கோடைகாலமென்று.

உன் வருகையின் போது
செழிக்கச் செய்யும்
பன்னிர் துளிகளென
நினைத்திருந்தேன்,
என்னை கருக்கிய போதுதான்
தெரிந்தது - நீயொரு
அமிலமென்று.

உன் வருகையின் போது
தாலாட்டும் பூங்காற்றென
நினைத்திருந்தேன்.
என்னை, வேரோடு
அசைத்தப் போதுதான்
தெரிந்தது - நீயொரு
புயற்காற்றென்று.

Thursday, June 21, 2007

தேடிய பின் தாடி!.......

கேளாத சொல் தேடி
சொல்லாத பொருள் தேடி
இல்லாத இடம் தேடி
இருக்கின்ற உனைத் தேடி
காணாத காட்சிகளை
கண்டு விட
துடிக்கின்ற உனக்காக
நானும் அதை நாடி
படாதபாடுப் பட்டு
கொண்டு வந்தேன் ஓடி
அருமையை அறியாமல்
பெருமையைத் தெரியாமல்
போட்டு விட்டாய் மூலையிலே
சொல்லி விட்டேன்
கோபத்திலே போடி,
போடியென்றாலும்
போகமாட்டாய்.
வாடியென்றாலும்
வர மாட்டாய்.
நிலை குலைந்து
நிற்க செய்தாய்.
வளர்த்து விட்டேன்
நிலையாய், 'தாடி'.

இலக்கியம்

உன் கதையை
இலக்கியமென
நான் எழுத
இடைமறித்து
நீயே எழுதலாமா-
உன் கதையை ?

எழுதிக் கொள்
உட்கதையை.
விட்டு விடு
என்னிடம்

மூலக்கதையை.


இக்கவிதைக்கு கருத்து பதித்தவர்கள்:-
  • Mylswamy Annadurai likes this.
    • Krishnamal Krish
      உன் கதையை

      இலக்கியமென

      நான் எழுத

      இடைமறித்து

      நீயே எழுதலாமா-

      உன் கதையை ?// அருமை

      எனக்கும் எழுதத்தான் ஆசை கொஞ்சம் நிஜத்தோடு கற்பனையாய் ......படிப்பவர்கள் சொந்தக்கதையோ.... சோகக்கதையோ என முத்திரைப் பதித்து விடுவார்களோவென முடிவுரையை உங்களிடமே கொடுத்து விடுகிறேன்....
      16 hours ago · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      ஆகா... என்ன அருமையாய் சொன்னாய் . எனக்கே அத்தகைய கேள்வி கருத்தாய், சந்திப்பு என்னும் வலைப்பதிவர் கீழே உள்ளதை எழுதியிருந்தார்.

      சொந்தக் கதை...
      சோகக் கதை...
      இந்தக் கதை...
      எந்தக் கதை!

      அப்படியிருக்கையில், உம் நிலையைச் சொல்ல வேண்டியத்தில்லை. இருப்பினும் மற்றவர்களைப் பற்றி நினைக்காமல் நமது எண்ணங்களை பதிப்பாக வெளியிடுவதில் தவறே இல்லை. என்னுடைய நினைவுகளை எத்தனையோ எழுதாமலேயே தவற விட்டிருக்கிறேன். இப்போழுது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதனால் நம்மை மதிக்கின்ற நண்பர்களுடனாவது நம் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளவது தவறில்லை. எனவே தயங்காமல் எழுத, பதிக்கத் துவங்கு சகோதரி. வாழ்த்துக்கள்.
      16 hours ago · · 1 person
    • Krishnamal Krish நன்றிங்க பத்ரி அண்ணா.
      16 hours ago · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M விரைவில் சகோதரியின் அருமையான பதிவை வாசிக்கலாம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
      16 hours ago ·
    • Krishnamal Krish சரிங்க அண்ணா.
      16 hours ago · · 1 person


      இக்கவிதைக்கு விருப்பம் தெரிவித்தவர்:-
      நமது மதிப்பிற்குரிய விண்வெளித்துறை விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai )

தேவையா திருத்தம் ?

நான் வரையும் - உன்
உயிரோவியத்தை
அழித்து விட முயலாதே
சரியில்லையென்று.
உன் நினைவால்
கல்லை உண்டாலும்
கற்கண்டாய் இனிக்கும்
எனக்கு,
என் கைவண்ணத்திலே
குறையிருந்தாலும்
மாறாதே உன் அழகு
என் மனக்கண்ணிலே.




  • இக்கவிதைக்கு கருத்து பதித்தவர்கள்.
    • Jaya Nallapan
      ‎.
      உனக்குப் பிடித்தது,
      எனக்குப் பிடிக்க
      வில்லையே?

      ஆயிரம் அர்த்தங்களை
      உள்ளடக்கி நான் வரைந்த
      அழகிய உயிரோவியம்
      எனக்காகவே துளிர்த்திடவே...

      வழி மேல் விழி வைத்துக்
      காத்திருக்கிறேன்,
      என்னவரின் வருவுக்காக...
      ~ஜெயா நல்லப்பன்~
      Wednesday at 2:32pm · · 4 people
    • Munuswami Muthuraman ‎/// மாறாதே உன் அழகு என் மனக் கண்ணிலே /// மிக நன்று .
      Wednesday at 3:39pm · · 4 people
    • M Venkatesan MscMphil மாறாதே உன் அழகு
      என் மனக்கண்ணிலே.
      Wednesday at 5:20pm · · 3 people
    • Shanmuga Murthy
      என்னில் என்னுள்ளே
      என்றும் வாழும் உன்
      ஓவியம் காவியமாய்
      காவியம் ஓவியமாய்
      நினைவில் பழுதில்லை
      வரைவில் குறையில்லை
      நானே நீயானேன்
      நீயே நானானாய்.
      Wednesday at 6:32pm · · 3 people
    • Sathiabama Sandaran Satia மாறாதே.. உங்கள் கவிதையின் அழகு! என்றென்றும்!! அருமை பத்ரி சார்...
      Wednesday at 8:22pm · · 2 people
    • Sakthi Sakthithasan அன்பின் நணபரே,
      மனதின் நினைவுகளை மறையாவண்ணம் வடித்திருக்கிறீர்கள்
      அன்புடன்
      சக்தி
      Yesterday at 4:55am · · 2 people
    • Kaniappan Padmanaban thanks, very nice...
      Yesterday at 12:53pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Jaya Nallapan :- கவிதையில் உணர்வுகளை உள்ளடக்கி கருத்து பதித்ததற்கு மகிழ்ச்சி சகோதரி.
      8 minutes ago ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Munuswami Muthuraman:- மகிழ்ச்சி நண்பரே.
      6 minutes ago ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Shanmuga Murthy:- "நானே நீயானேன்
      நீயே நானானாய்"

      கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா.
      4 minutes ago ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Sathiabama Sandaran Satia:- "மாறாதே.. உங்கள் கவிதையின் அழகு! என்றென்றும்!! அருமை பத்ரி சார்...''

      மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி. என்றென்றும் உங்கள் அன்பு தொடர வேண்டும். எம் கவிதைகள் மிளிர வேண்டும்.
      about a minute ago ·


      இக்கவிதையை விரும்பியவர்கள்:-

நீயொரு அழகிய......!!!!!!!

அழகிய பேயே! ஏன்
உன்னைத் தொடர வைக்கிறாய்?

என் அழிவாகவே தெரிகிறதே,
உன்னைத் தொடர்வதாலென.

எப்படி துடைத்தெறிவேன்
உன் நினைவுகளை?

எங்கே சென்றடைய
உன்னை மறந்து விட?

எதனால் தடுமாறுகிறேன்
உன் மோகன நினைவுகளாலா?

என்னை உணர்கிறேன்
உன்னை மறக்க முடியாமலே.

எதற்கு இந்த வேதனை
உன்னை இழப்பதால் தானே!

ஏன் வதைக்கிறாய் ?
வாய் திறந்துச் சொல்.

Wednesday, June 20, 2007

தந்தையே !, உங்களுக்குத் தான்

நில்லென்றால் நின்றும்
செல்லென்றால் செல்லும்
உங்கள் பிள்ளைகளாய்
நாங்கள்
ஏனென்றால்
தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை.
உம் கடன் முடிக்க
சுமைகளாய் நாங்கள்
இலட்சியமாய் உழைத்து
வெற்றியுடன் முடித்தீர்
மேடுபள்ளங்களைக் கடந்து
உங்கள் முகத்தில்
நாங்கள் அதிகமாய் கண்டதோ
சந்தோச ரேகைகளை விட
சிந்தனை ரேகைகளே
ஏனென்றால்
சுமைகளாய் நாங்கள்.
உங்கள் அறிவுரைகள் - பலப்பல
ஒவ்வொன்றும்
எங்கள் நினைவில்
தொடர்ந்து வர
மீண்டும்
பகிர்ந்துக கொண்டோம்
உம்மிடையே.
புழங்கும் நாணயம்
இரண்டுப் பக்கம்
தங்கள் நா சிந்தும்
நாணயமோ
நடுநிலையாய்
நிற்குமே என்றும்.
தங்களிடம் என்றுமில்லை
அடித்து பிடுங்கும் நிலை
பெறுவீரே என்றும்
முறையானதை
கொடுத்து விட்டே.
ஆசை அதிகம் கொண்டதில்லை
மோசம் போய் விடுமென்று
ஆனாலும் போய் விட்டது
மோசக்காரர்களிடம் சிக்கி.
காலங்கள் தேய்ந்தாலும்
கடமைகள் இருப்பதாய்
கருதித்தான் தாங்களும்
செயல் படுத்தி வருகின்றீர்
ஓய்வெடுக்க விரும்பாமல்.
ஆசைகள் பல இருக்க
அன்பிலே அது அடங்க
எடுத்துக் கொள்ளும் பழக்கமில்லை
ஆனாலோ
கொடுத்து விடும் பழக்கமுண்டே.
துன்பந்தனை கண்டு
துவண்டுத்தான் விடாமல்
துரத்தும் வாழ்வுதனில்
துரத்தி விட துணையிருந்து
தூண்டி விட்டாள் -உம்
துணையானவள்
இல்லாளாய் இணைந்திருந்து
இல்லம் காக்க
இயன்றதை ஈட்டி வந்து
தாங்களும் கொடுத்து வைக்க
பக்கபலமாய் அவரும் உமக்கிருக்க
சுமை தாங்கியாய் நீரிருந்து
எமக்கோ பகிர்ந்தளித்தீர்
இயன்றதை மனத்தில் கொண்டே.
எமக்கொரு துன்பமெனில்
துளிர்க்கும் உம் விழிநீர்
வெளிச்சம் போடுமே
வெளிக்காட்ட தெரியாத
உமது பாசத்தையும் அன்பையும்.
தங்களின் கண்டிப்பு என்பதோ
கேட்பவருக்கு கசக்கத்தான் செய்யும்
ஆனால் படும்போதோ
அறியச் செய்யுமே
அத்தனையும் இனிமையென்று
கொண்டவளை கடிந்ததை
கண்டதில்லை
தேவையின்றி கோபமும்
கொண்டதில்லை
உம்மிடம் அகங்காரம்
கண்டதில்லை
நீரோ கர்வமும்
கொண்டதில்லை.
பூசி மெழுகத் தெரியாது
புரட்டிப் போடவும் தெரியாது
வேண்டும் என்றும் உங்களுக்கு
வெள்ளை அறிக்கை மட்டுமே.
சுமையாய் கருத மாட்டோம்
சுமைகளாய் எங்களை
சுமந்த உங்களை.
சுகமாய் வைத்திருக்க
சுமப்போமே வலிகளையும்
சுகமென நினைத்துத்தான.
தாங்கள் வாழ வேண்டும்
நீண்ட வாழ்வுடனும்
நிலையான நலனுடனும்
இறையருள் துணைக்கொண்டு.


  • முகநூலில் (Face Book in My Notes) அன்புள்ளங்களின் கருத்துக்கள்:-
    • மன்னார் அமுதன் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
      Wednesday at 12:55pm · · 1 person
    • Keyem Dharmalingam அருமையான தலைப்பு,
      அருமையான கருத்து,
      //சந்தோச ரேகைகளை விட சிந்தனை ரேகைகளே//
      மனதிலாடுகின்றது நன்றி "தவப் புதல்வனே" பத்ரி நாராயணன் அவர்களே!!!
      Wednesday at 1:30pm · · 2 people
    • Kovai Bala S அழகிய கவிதை.
      நன்றி நண்பரே!
      Wednesday at 1:55pm · · 1 person
    • Jaya Nallapan
      ‎.
      //சுமையாய் கருத மாட்டோம்
      சுமைகளாய் எங்களை
      சுமந்த உங்களை.
      சுகமாய் வைத்திருக்க
      சுமப்போமே வலிகளையும்
      சுகமென நினைத்துத்தான.//

      தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை.
      அருமை, அழகு தவா சார்.
      ஒவ்வொரு வரிகளும் என் தந்தையின் மகத்துவத்தை நினைவு கூறுகிறது!!
      Wednesday at 2:42pm · · 1 person
    • Gauthaman Ds Karisalkulaththaan அருமையான எதார்த்த கவிதை!
      Wednesday at 11:17pm · · 1 person
    • Vetha ELanga
      நீண்ட வாழ்வுடனும்

      நிலையான நலனுடனும்

      இறையருள் துணைக்கொண்டு.
      வாழ வேண்டும்......
      god bless him.
      Yesterday at 12:12am · · 1 person
    • Nadarajah Kandaih மகனாக பெற்றதன் பயனை பெற்றுவிட்டார்.அருமையான கருத்துக்களை கொண்ட கருத்துக்குவியல்.இதைவிடஒரு தகப்பன் மகனிடமிருந்துஎதை பெறமுடியும்
      16 hours ago · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Nadarajah Kandaih:- மகிழ்ச்சி ஐயா
      a few seconds ago ·



      விருப்பம் தெரிவித்த நண்பர்கள்:-