துவள்கின்ற நாள் பொழுதில்
துண்டுகளாய் எம் இதயம்.
துரத்தும் - என்
துயரத்தை
துடைத்து விட
துணையின்றி தனித்திருந்தேன்.
துன்பத்தையும் மறந்து
தூண்டும் இன்பத்தையும்
துறந்து யான்
தூசியென ஒதுக்கி விட்டு
தூய்மையான
துறவுதனை,
தும்பிக்கையானை
துணையெனக் கொண்டு
துரத்துதலில்லா வாழ்வுதனை
துதித்தேன் பெற்றிடவே.
No comments:
Post a Comment