
வாழ்விலே இனிமை
வந்து உன்னை சேர
சிந்தனை செய் மனமே!
வளமும் புகழும்
உனையே தொடர
சிந்தனை செய் மனமே!
தேடுதல் இல்லா
வாழ்வே இல்லை
சிந்தனை செய் மனமே!
நலமுடன் இளமை
என்றுமே இருக்க
சிந்தனை செய் மனமே!
வாழ்வுடன் மகிழ்வும்
இனிதாய் இணைய
பிறந்த நாள் உனதில்
வாழ்த்தினோம் இனிதே!!!
அன்புடன் வாழ்த்தும்,
அப்பா, அம்மா.