Translate

Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Tuesday, August 6, 2013

வரவேற்கும் நண்பனாய்

Kvs Ram
July 9

புலரும் வேளைகளில்
புத்துணர்ச்சி பொங்கட்டும்.
அமர்ந்த நிலையிலும்
அத்தனையும் நிலைக்கட்டும்.

நட்பிணைப்பு கேட்டமைக்கு
மிக்க மகிழ்ச்சி.
நலமாய் தொடரும் எனும்
நம்பிக்கையுடன்,

வரவேற்கும் நண்பனாய்,
தவப்புதல்வன்.


 https://www.facebook.com/photo.php?fbid=609626225743690&set=p.609626225743690&type=1&theater&notif_t=like

Thursday, December 4, 2008

களங்கமில்லா நட்பு !

வழியிலே கண்டோம்.
முறுவலித்துக் கொண்டோம்.
நாள்தோரும் தொடர
நட்பிலே முடிய,
உள்ளளவும் நிலைக்க,
உறவுகள் செழிக்க...
காலங்கள் சென்றது.
களங்கமின்றி இருந்தது.
குடும்பங்கள் ஆனது,
பேதமின்றி கலந்தது.
ஆலமரமாய் விரிந்தது
அருகாய் நிலைத்தது..
தலைமுறைகள் மாறினாலும்
தழைத்து ஓங்கட்டும்.
நட்பின் ஆதிக்கம்
என்றுமே தொடரட்டும்