Translate

Friday, January 30, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Keyem Dharmalingam







கோடுகளின்றி கோலமில்லை.
வளைவுகளின்றி வாழ்க்கையில்லை.
இறையருளின்றி நலங்களில்லை.
நட்புகளின்றி உற்சாகமில்லை.
வாழ்த்துக்களின்றி மகிழ்வுகளில்லை.

மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
நண்பரான உம்மை, இன்றைய நாளில்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்






சௌபாக்யவதி..ஸ்ருதி  - சிரஞ்சீவி.கஜேந்திரன்

இரு மனமாயினும்
ஒன்றென  கலந்து,

குடும்ப வாழ்வது
கோபுரமாய் உயர்ந்து,

பிணைந்த உறவு
புதுமைகளைப் படைக்க,

இறைவனின் அருளது
என்றுமே நிலைக்க,

வளரும் நாட்களில்
நலனுடனும் மகிழ்வுடனும் வாழ,

இனிதான நினைவில்
இன்றுமை வாழ்த்தினோம்



இனிய திருமண நல்வாழ்த்துக்கள்  இளங்கிளிகளே.

நல்லாசிகள் வழங்கும்
தாத்தா A.M பத்ரி நாராயணன்  பாட்டி.ராஜராஜேஸ்வரி