Translate

Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Tuesday, October 17, 2017

நீ, நான், நாம்



அருவியாய் நீ
ஆனந்தத்தில் நான்
அணைத்துக் கொண்டோம் நாம்.

ஆற்றோரம் நீ
அருகில் நான்
அன்றிருந்தோம் நாம்

அள்ளித்தர நீ
அள்ளிக் கொள்ள நான்
ஆட்டத்தில் நாம்

அலையாய் நீ
ஆடுவதில் நான்
ஆறாய் நாம்

ஆறிலே நீ
அறுபதிலே நான்
அறிந்தோம் நாம்

அறிவொளியில் நீ
அதனொளியில் நான்
அகந்தையின்றி நாம்.

மோகனத்தில் நீ
மௌனமாய் நான்
மொட்டவிழ் நேரத்தில் நாம்

ஒதுங்கியிருந்தாய் நீ
ஒட்டியிருந்தேன் நான்
ஒன்றாய் நாம்..

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Monday, September 21, 2015

நான்




சூரியன் உதிக்கிறது
வெளிச்சம் படர்கிறது
கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால், மனமோ?
இருட்டிலே இருக்கிறது
பாதையின்றி தவிக்கின்றது
அறியாமல் விழிக்கிறது
நிலையின்றி துடிக்கிறது.

பகல் பொழுது கழிந்தது.
பகலவன் மறைந்தது
மாலையும் வந்து
இருட்டும் ஆனது.

உள்ளமுடன் உடலும் சோர்ந்தது.
படுக்கையில் வீழ்ந்தது – ஆனால்
மனதுக்கு உறக்கமில்லை.
வழியும் கிடைக்கவில்லை.

அணுவிலும் அணுவாய்.
அவ்வணுவிலும் துரும்பாய்
அனைத்திலும் நிறைந்திருந்து
அலைக்கழிக்கும் இறைவா!

பட்டமாய் பறப்பேனா?
பாடமாக இருப்பேனா?\
பட்டழிய செய்வாயா?

பாவியாய் பெயரெடுத்து.