Translate

Showing posts with label அடையாள அட்டை. Show all posts
Showing posts with label அடையாள அட்டை. Show all posts

Friday, August 14, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை



சென்ற ஆகஸ்ட் 11ம் தேதி சங்ககிரி பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. அதில் கலந்துக் கொண்ட 128 பேரில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது. 3 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

#இந்த முகாம் நடக்க காரணமான திட்டத்திற்கும், நடத்திய அதிகாரிகள், மருத்துவர்களுக்கு நன்றியினையும் மகிழ்வினையும் இத்தருணத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம்.


#குறிப்பாக அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கும், வயது வித்தியாசமில்லாமல், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே தெளிவாக விளம்பரம் செய்து முகாம்கள் நடத்தினால், அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களின் துணையாளர்களுக்கும் பண, நேர விரயத்துடன், பயண சிரமம் பெருமளவு  குறையும் என்பதை சம்மந்தபட்ட அதிகாரிகள் உணர்ந்து ஆவன செய்ய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்கள் என நம்பி தமிழகத்தின் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.