Translate

Friday, March 29, 2013

மட்டன் ஸ்டால்



காத்திருந்த வேளையிலே 
கண்களோ அலைப்பாய,
பதிந்தது ஓரிடம்,
உயர்ந்தது புருவம்,
தெரிந்தது உண்மை,
மகிழ்ந்தது மனம்.
ஓங்கி ஒலித்தது 
ஒற்றுமையின் நிலை.

"ஃபைவ் பிரதர்ஸ் மட்டன் ஸ்டால்" 


* இதே போன்று வித்தியாசமான பெயர்களில் கடைகளைக் கண்டேன். அதில் பெயர் நினைவில் நின்ற சிலவற்றை.

"இரட்டையர் முடி திருத்தகம்".

"அலையகம்" (Cell Shop )

மேலும்  இன்று ஒரு கடை பெயரைக் கண்டேன். 

"டெலி கடை" ( Tele Kadai  )

என்ற பெயரில் கூரியர் நிறுவனம்.

நீங்களும் கவனித்திருப்பீர்கள் வித்தியாசமான பெயர்களை. அதில் உங்கள் கடை, நிறுவன பெயர்களும் இருக்கலாம். அதை பதியுங்களேன்.

சில தொழில்களுக்கு, இப்படி பெயர் வைக்கலாமே என சில, பல பெயர்கள் உங்களுக்கு  உதித்திருக்கும், நினைவிலும் இருக்கும். அப்படிப்பட்ட பெயர்களை பதிவு செய்யுங்களேன். 

* பார்த்தது / உதித்தது என தெளிவாக குறிப்பிடுங்கள்.

Monday, March 25, 2013

விடியட்டும்......


கோலமிடும் கால்களை நீ நோக்க,
    தலைக் குனிந்த உன் முகத்தை நான் பார்க்க,

வனப்பிலே மயங்கி நான் உன் கைப்பிடிக்க,

   வார்த்தைகளால் கானம் பாடி உடனிழைய,

உல்லாசமாய் நொடிகளாய் நாள் கழிய,

   தலைக்கீழாய் மாறியதே,  நிலை ன்று.

மறைந்ததே கனவுகளாய் அத்தனையுமது.

   தள்ளாடித் தலைக்கவிழ்ந்தேன் உன் முன்னே.

மது அரக்கன் எனை ஆட்ட, தவிர்த்தேனே நானுமுன்னை.

   மாற்றமது கொண்டதே தீக்கோளமாய் உன் விழிகள்.

சத்தியங்கள் தினம் செய்தேன் உன் தலை மீதே.

   குடிகாரன் என் பேச்சோ விடிந்ததும் ஓடிப்போச்சே.

அறிவிருந்தும் என் விழுந்தேன் படுகுழியில்?

   குடும்பமதை சீரழிய செய்து விட்டேன்.

சிந்தனையில் தெளிவிருக்க, சீர் செய்ய மனமிருக்க,

   மாறுதடா அத்தனையும் மது அருந்தும் என்னாலே.

சத்தியத்தின்  மதிப்பை நானும்  இழக்கச் செய்தேன்.

   குடும்பமுடன் என் மதிப்பை அழியச் செய்தேன்.

யாருமினி போதையிலே சிக்க வேண்டாம்,

   குடிகாரன் பேச்சு இதுவென தள்ள வேண்டாம்.

போதையில்லா  ஒரு நொடியில் சொல்லி விட்டேன்.

   விரைவிலே நானுமெனை திருத்திக்கொள்வேன்.

குடும்பமதில் மகிழ்வை பிறக்கச் செய்வேன்.

   குடும்பத்தின் நலன் மீதே இனி போதைக்கொள்வேன்.

புலந்த பின்னே என் பேச்சு போய் விட்டால்----
 
என்ன செய்வேன்?

   அதனால் விடியாமல் போகட்டும் என் இரவு.

விடியட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி இனி.


  நண்பர்களே, தங்கள் பக்கத்தில் இப்பதிவை, மறுபதிவிட்டு (Pls Share in your page), மது விலக்கு பிரச்சாரத்திற்கு உதவும்படி கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். 

Saturday, March 23, 2013

அமையவில்லை சரியாக...

உயரமாய் உடல் வளர,
    சிறுமியாய் நான் இருந்தேன்.
பூப்பதிலே குறையிருக்க,
   தாமதமாய் நான் பூத்தேன்.
பெருமூச்சுடன் மகிழ்ந்தனரே 
   வாழ்வுக்கு வழி பிறந்ததென்று.

எம் மகிழ்வோ மாறுபட, ஈடுப்பட்டேன் 
   கல்வியே வாழ்க்கையென்று.
எண்ணங்கள் சிதைந்ததம்மா,
   என் தாயின் வடிவிலது.
நோயினால் அவள் துவள,
   அடுப்பெரிக்க போனேனே.

காலங்கள் தேய்ந்தோட,
     முதிர்க்கன்னியாய்  நான் மாற,
கைப்பிடித்தால் போதுமென்று,
     வந்தவனை நோக்கவில்லை.
திட்டங்கள் தீட்டியவனாய்- எனை 
     வீட்டுச்சிறையினிலே பூட்டி விட்டான்.

சிந்தித்தே பிடித்தானோ 
     சிறைக்கு இவள் சரியென்று.
புரியாத புதிருக்கெல்லாம் 
     விடைக்கிடைத்தது சில நாளில்.
தன் குறையை மறைத்தானே,
     என் கரத்தை பிடித்தவனும்.

வருடங்கள் கழிந்த பின்னும் 
     பூச்சிபுழு இல்லை என்று 
வருத்துத்தான் எடுத்துவிட்டார்,
    எம்மிதயத்தை கூறுப்போட்டு.
கரம் பிடித்தவனின் குறை இதுவென,
    எப்படித்தான் இயம்பிடுவேன் இந்நிலையில்.

ஆண், பெண் இருவரையும் 
      கரம் கூப்பி கேட்கின்றேன்.
நிலை உணரா நிலையினிலே,
      வாயில் வந்த சொல் பேசி,
எமைப்போன்ற பிறவிகளின் 
     இதயத்தைக் கிழிக்காதீர்.

நடைப்பிணமாய் வாழ்கின்றேன்,
      மலடி என்ற பெயரைத் தாங்கி. 
எனக்கெதுவும் அமையவில்லை 
       வாழ்விலே சரியாக.

இறைவனின் படைப்பில்
அல்லல் படும்,
மோகன சுந்தரி @ யவன சுந்தரி.

Sunday, March 17, 2013

தமிழ்நாட்டிலும் ஒரு ஷாஜகான்



தமிழ்நாடு புதுக்கோட்டை உசிலம்குளத்தை சேர்ந்த சுப்பையா தான் இந்த ஷாஜகான். அவர் சொல்வதை கொஞ்சம் கேளுங்க....


    என் மாமா பொண்ணு சென்பகவள்ளி. சின்ன வயசுல இருந்தே, ஒருவர் மேல ஒருவர் பிரியம் வெச்சு வளர்ந்தோம்.கல்யாண வயசு வந்ததும், வீட்டிலே பேசி சேர்த்து வெச்சாங்க. நான் எதிர்ப்பார்த்ததை விட, அன்பான மனைவியா, அக்கறையான குதும்பத்தலைவியா இருந்தாங்க.
 குடும்ப செலவுக்கு பணம் மட்டும் தான் கொடுப்பேன். மத்த எல்லாத்தையுமே பொருப்பெடுத்து பாத்துக்கிட்டாங்க. இடையில் வேலை பாக்கிறத்துக்காக, கோல்கத்தாபோயிட்டேன். கடிதம் தான் தொலைதூரத்திலிருந்த எங்களை சேத்து வைக்கிற அன்பு சங்கிலி.
எங்களுக்கு 10 பிள்ளைங்க. அதுல இரண்டு தவறி போச்சிங்க. மத்த 4 ஆம்பிளை புள்ளைங்களையும், 4 பொம்பள  புள்ளைங்களையும், சென்பகவள்ளி பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க. அவ்வளவு ஆசையா அன்பா புள்ளைங்களை கொண்டாடுவாங்க. அதே பாசம் தான் எனக்கும் தருவாங்க.
குடும்பத்துக்காக உழைச்சவங்க, தன்னோட உடம்ப பார்த்துக்காம விட்டுட்டாங்க. சிறுநீரக (கிட்னி) கோளாறு வந்துடுச்சு. என்னால, முடிஞ்ச அளவு செலவு செய்து பார்த்தேன். 2006லே என்னை தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டாங்க. அப்ப அவங்களுக்கு 63 வயசு.
இராமாயணத்தில, அஸ்வமேத ஆகம் செய்ய,சீதை இல்லாத்தால் ராமர் சிதை சிலை செய்து வைப்பார். அதுமாதிரி, சென்பகவள்ளி இந்த குடும்பத்துக்காக உழைச்ச உழைப்பை கவுரவப்படுத்தவும், என் காதலை வெளிப்படுத்தவும், நானும் என் சென்பகவள்ளியை சிலையா செஞ்சு என் கூடவே வெச்சிகனுமுனு நினைச்சேன்.
ஒய்வூதியப் பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு, 2 இரண்டு இலட்ச ரூபாய் சேர்ந்த்தும், 2009ம் வருஷம் கும்பகோணம் போய் சிலை செஞ்சிக்கிட்டு வந்தேன்.
சித்திரை நட்சத்திரம் அவங்களுக்கு, அதனால ஒவ்வொரு மாசமும் சித்திரை நட்சத்திரலே அவங்களுக்கு பால் பன்னீர், தேன் அபிஷேகம் செய்வேன். அவங்களோட பிறந்த நாள் அன்னிக்கு இல்லாதவங்களுக்கு சாப்பாடு போடுவேன்.
 சென்பகவள்ளி  என்னை விட்டுட்டு போன வருத்தம் இப்ப என் கிட்ட இல்ல. என் கூடவே இருக்கிற மாதிரி தான் இருக்கு. இந்த சிலைக்கு உள்ள தான் அவங்க உயிர் இருக்கு.



Friday, March 15, 2013

வார்த்தைகளைப் புரிந்துக் கொள்வோம்

துணிந்தவனுக்கு துக்கமில்லை
துவண்டவனுக்கோ தூக்கமில்லை.
இது அறியாத சொல்லில்லை
பற்றிக் கொண்டால் அழிவில்லை.

சொல்லும் தகுதியோ எமக்கில்லை.
சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பங்கு பெறுவதில் தொல்லையில்லை.
ஆறுதலுக்கு என்று
ம்  எல்லையில்லை.

வாழ்விலே எதுவுமே நிலையில்லை,
ஏக்கத்தினால் அமைதி அடைவதியில்லை.
அன்பும் பாசமும் வாழ்வின் எல்லை,
அறிந்துக்கொள்ள மறுத்தால் வார்த்தையில்லை.

குறையில்லா மனிதர் உலகிலில்லை
உணர்ந்தவருக்கு மாற்றோர் நிகரில்லை.
அனுபவித்த வாழ்வே உண்மைநிலை.
அறிந்துக் கொள்வதே 
வாழ்வின் உயர்நிலை
இதயமது இயங்கும் வரை உயிரது பிரிவதில்லை.
உயிரற்றுப் போன பின்னே உறவது தொடரவதில்லை.
இல்லையென்பது இனியில்லை.
கண்ணீருக்கு இனி வழியில்லை.

நம் குறையெண்ணிக் குமையாமல் 
நிறை நினைத்து திலைத்திடுவோம்.
இனி முடிவதை செவிமடுப்போம் 
அம்முடிவிற்கு உயிர் கொடுப்போம்.


இறைவனால் படைக்கப் பட்டோம்.
இருக்கும் வரை வாழ்ந்திடுவோம்.
இன்பத்தில் தோய்ந்த நாட்களை
இனி தொடர்ந்தே நினைத்திருப்போம்.

'இதுவும் கடந்து போகும்,
இன்னுமும் கடந்து போகும் "
வார்த்தைகளைப் புரிந்துக் கொள்வோம்.
வாழ்வை அமைதியாய் கழித்து செல்வோம்.


பாசமான பெற்றோரே!!!



              அமரர் பாக்யலக்ஷ்மி மாணிக்கம் - அமரர் P.A.மாணிக்கம் செட்டி.

காலங்கள் கடந்த பின்னே
கருமாதி செய்த பின்னே
காரியத்தில் வெற்றிக் கொண்ட
அருமை பெற்றோரான உங்களைப் பற்றி.

எண்ணிக்கைக்கு கணக்கில்லை.
எழுத்திலிட தெரியவில்லை.
எண்ணத்தில் நிலைத்தால் போதுமது.
என்னாளும் நலமாய் வாழ்வதற்கு.

கனவுகளிலும் நினைவுகள்
காற்றாய் கரைந்தோட,
நிதர்சன உண்மைகள்
நிலையாய் நிலைத்து விட,

வாரிசுகளான எம் சந்திப்பில்
வாசமாய் உங்கள் சாதனைகள்.
கோட்டைக் கொத்தளங்கள் சரித்திரமில்லை
கொடுத்த பாசமே சரித்திரமாய் இதயத்தில்.

நீண்டநெடிய உங்கள் பயணம்
இனி நிசமாக்க முடியாமல் போனாலும்,
நிலைத்திருக்கும், நினைவுகளில் மட்டுமே.
இது நிசமான உண்மையாகும்.

உழைப்பதற்கோ வயதில்லையென
உணர்வுகளில் ஊட்டிய,
உன்னத உம் நினைவுகளை
செயல்படுத்த என்னாளும் நினைத்திருப்போம்.

பின்குறிப்பு: எமது தந்தையாரின் முதலாமாண்டு நினைவுநாளை ஒட்டி எம் பெற்றோருக்கு நினைவஞ்சலி கவிதை இது. ஆங்கில வருட கணக்குப்படி பிப்ரவரி 22ம் தேதியும், எங்கள் மரபுப்படியும் நட்சத்திரம், திதி என்னும் குறிப்புப்படியும் மார்ச் 12ம் தேதி நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.