Translate

Monday, March 25, 2013

விடியட்டும்......


கோலமிடும் கால்களை நீ நோக்க,
    தலைக் குனிந்த உன் முகத்தை நான் பார்க்க,

வனப்பிலே மயங்கி நான் உன் கைப்பிடிக்க,

   வார்த்தைகளால் கானம் பாடி உடனிழைய,

உல்லாசமாய் நொடிகளாய் நாள் கழிய,

   தலைக்கீழாய் மாறியதே,  நிலை ன்று.

மறைந்ததே கனவுகளாய் அத்தனையுமது.

   தள்ளாடித் தலைக்கவிழ்ந்தேன் உன் முன்னே.

மது அரக்கன் எனை ஆட்ட, தவிர்த்தேனே நானுமுன்னை.

   மாற்றமது கொண்டதே தீக்கோளமாய் உன் விழிகள்.

சத்தியங்கள் தினம் செய்தேன் உன் தலை மீதே.

   குடிகாரன் என் பேச்சோ விடிந்ததும் ஓடிப்போச்சே.

அறிவிருந்தும் என் விழுந்தேன் படுகுழியில்?

   குடும்பமதை சீரழிய செய்து விட்டேன்.

சிந்தனையில் தெளிவிருக்க, சீர் செய்ய மனமிருக்க,

   மாறுதடா அத்தனையும் மது அருந்தும் என்னாலே.

சத்தியத்தின்  மதிப்பை நானும்  இழக்கச் செய்தேன்.

   குடும்பமுடன் என் மதிப்பை அழியச் செய்தேன்.

யாருமினி போதையிலே சிக்க வேண்டாம்,

   குடிகாரன் பேச்சு இதுவென தள்ள வேண்டாம்.

போதையில்லா  ஒரு நொடியில் சொல்லி விட்டேன்.

   விரைவிலே நானுமெனை திருத்திக்கொள்வேன்.

குடும்பமதில் மகிழ்வை பிறக்கச் செய்வேன்.

   குடும்பத்தின் நலன் மீதே இனி போதைக்கொள்வேன்.

புலந்த பின்னே என் பேச்சு போய் விட்டால்----
 
என்ன செய்வேன்?

   அதனால் விடியாமல் போகட்டும் என் இரவு.

விடியட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி இனி.


  நண்பர்களே, தங்கள் பக்கத்தில் இப்பதிவை, மறுபதிவிட்டு (Pls Share in your page), மது விலக்கு பிரச்சாரத்திற்கு உதவும்படி கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். 

No comments: