Translate

Showing posts with label JP வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label JP வாழ்த்துக்கள். Show all posts

Monday, April 11, 2016

M.S சிசுவை எதிர்நோக்கும் இளமை இதயம் - JP வாழ்த்துக்கள்



 வரவை எதிர்நோக்கும் கண்களுக்கு,
கண்ணாமூச்சி காட்டுகிறாய்.
கரைக்கடந்தது நாட்கள்
கருணைக்காட்டு எமக்கு.
பெற்றோருக்கு கொடுப்பது சர்ப்ரைஸ்
மற்றோருக்கு தோன்றுவது சன்ரைஸ்.
பாட்டியெனக்கு ஏற்படுவதோ பரப்பரப்பு.
பாதிப்பில்லாமல் நீ வருவதே சுறுசுறுப்பு.
இறையருளால் இனிதே பிறப்பாய்.
காத்திருக்கும் எங்களுக்கு மகிழ்வைத் தருவாய்.

ஆசையுடன் பாட்டி,

J.பிரபாவதி. 

Sunday, March 27, 2016

மகளீர் தின வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

08/03/2015 மகளீர் தின வாழ்த்துக்கள்.

மாதராய் பிறந்திட
மாதவம் செய்திட வேண்டும்.
பாரதியின் கனவு நனவாக,
பெண் பொன்னாகி,
குமரி குனவதியாகி,
மங்கை மல்லிகையாகி,
தாய் தாலாட்டாகி,
பாட்டி பாவை விளக்காகி.
மாதராய் பிறந்த நாம்,
மகேசனின் மழுவாகி,
நல்லதே நடக்க, நடப்பிக்க,
பிரார்த்தித்து

பிரவேசித்தேன் (இவ்)வாழ்த்தில்.

நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

03/03/2015 தட்சிதா, பிரனேஷ் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு வாழ்த்து.

செல்ல செல்வங்களே
சிகரம் தொட, எறும்பாய் பயணிப்பீர்.
ஏற்றமே பெற்றிடுவீர் நிலையாக.
கற்ற கல்வி கைக்கொடுக்கும்.
களைப்பில்லா வாழ்வளிக்கும்.
நாளைய உலகம் உங்கள் கையில்,
நாட்டம் கொள்வீர் உமது பணியில்.
இன்றைய முயற்சி நாளைய வெற்றி.
முயற்சியே வெற்றியின் படிக்கட்டு.(படிகள்)
வென்றிடுவீர் சதங்களை(ளாய்)
வாணியின் அருளும் ஆசிகளும்.

வென்றிடவே வணங்கினேன், வாழ்த்தினேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

.2015
மாப்பிள்ளை பத்ரி வெங்கடேஷ் பாபு பிறந்தநாள்
Son-in-law, Wish you happy birthday.
மாப்பிள்ளையின் பிறந்தநாள்
மனம் மகிழும் பொன்னாள்.
உத்தம புத்திரனாம்
உமையவளின் அருள் மகனாம்.
திறமையின் திறவுகோல்
திக்கெட்(டட்)டும் உமது கோல்.
மறைப்பொருள் அருளும் ஆசியுடன்,
மங்கள வாழ்வளிக்க(மைய) - என் 

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Thursday, February 18, 2016

பிறந்தநாள் வாழ்த்து - Subahar Pattabiraman - JP வாழ்த்துக்கள்





Wish you many more happy returns of the day Subahar.

செல்வக்குமாரா, சிங்காரக்குமாரா,
இனிய பொங்கலாகட்டும் இப்பிறந்தநாள்.
ஏறுமுகமாகட்டும் எல்லா பிறந்தநாளும்.
ஏந்தினேன் கைகளை இறைவனை வேண்டி,
சந்ததிகள் செழிக்க, சல்லாபம் கூட,
சாற்றினேன் வாழ்த்தினை சந்தோசமாக.
பெற்றவர் மற்றவர் மறைகளைக் கூற,
ஆற்றுவாய் செயல்களை பொற்பாதம் பணிந்து.
பத்தின் மூன்றரை வென்றாய்.
பத்தின் சதத்தையடைய வாழ்த்துக்கள்.

பாசமுடன் பெரியம்மா,

J.பிரபாவதி.

Wednesday, February 10, 2016

திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

  .2015

ராஜேஷ் & வாசவிப்பிரியா WISH YOU HAPPY   ANNIVARSARRY

மங்கையின் மனம் கவர்ந்த மணாளா,
மணாளனின் குணமான மங்கயே,
மல்லிகையின் மணம், நிறம் போல,
ஆன்றோர் ஆசி கூற,
அனைவரும் வாழ்த்துப்பாட,
மாலை சூடிய மணநாளாம் இந்நன்னாளில்
மனைமாட்சி மாண்புற,
மங்கலமே(ம்) மனம் நிறைய,
ஆயுளோ ஆரோக்கியமாக,
ஆண்டவனின் அருளோ நிலையாக,
மயிலையின் மைந்தனாம்
மயிலாலனை போற்றி,

சாற்றினேன் வாழ்த்துக்களை. 

நினைவுநாள் - JP வாழ்த்துக்கள்

.2015
தந்தையாரின் நினைவுநாள் இந்நாள்.
நினைவுகள் மறக்குமோ தன்னால்.
மறக்காது எந்நாளும் மனமே.

மங்கள ஆசிகள் மலரும் தினமே.

திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்


.2015
தாமோதரன் & சாந்தி தாமோதரனுக்கு மகிழ்வான திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


மங்கள மணநாளின் துவக்கம்.
மல்லிகையின் பூ வாசம் வசந்தம்.
கண்ணனின் ஒரு நாமம் நீயே.
அவனின் குண நாமம் துணைவியே.
இனியவை நாற்பது, இன்பமும் ஏற்பது.
மகள்களின் மாண்பது மகிழ்ச்சியைக் கொடுப்பது.
அறுபதைக் காண ஆரோக்கியம் பேணு.
அஷ்டமாசித்தியும் அடைந்தே வாழ
ஆண்டவனின் அனுக்கிரஹம் அனுதினமும் உண்டு.
கைக்கூப்பி வணங்கினேன் கந்தனை,

கனவுகள் நனவாக வாழ்த்தினேன் உம்மை.

Saturday, February 6, 2016

வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

02/15 சுபஹர் பிறந்தநாள்

WISH YOU HAPPY BIRTHDAY சுபஹர்
வாழ்த்து பெற வந்ததய்யா
வயசு குறிக்கும் நாளும்.
தாமரை மலர வந்ததய்யா
தகதகக்கும் பகலவன்.
முல்லை மலர வந்ததய்யா
முத்தான மதியவன்.
வாழ்வு மலர வேண்டும்
பனி நீக்கும் பகலவனாய்.
வசந்தம் காண வேண்டும்
முதுமையிலும் மதியவனாய்.
வம்சம் விளங்க வேண்டும் ஆலமரமாய் - அது
விருத்தியடைய வேண்டும் அருகாய்.
வாழையடி வாழையாய் நலவாழ்வு பெற
வணங்கினேன் வரதப்பனை,
வாழ்த்தினேன் உன்னை.

வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

2015 பொள்ளாச்சி வாசவி கிளப் President ஆக அல்லுடு ரகுநாத்  பதவி ஏற்றமைக்கு.

நம் வாசவி சங்கத்தின் நலம் பேண
பதவியேற்றீர் தலைவனாக(ராக).
உவகையால் உளம் மலர்ந்தது.
மணம் நிறை மல்லிகையாய்.
பேணுவீர், தலைமையைப் பெட்டகமாய்.
விரித்த புத்தகமாய் பயணிப்பீர்.
வெற்றிகளும் சாதனைகளும்

சாதிக்க(வே) அருள்வான் சர்வேஸ்வரன்.

வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்



2015 ஜனவரி

இந்த வருடம் கோவையில் ஆரம்பமான வாசவி Couple Club ல்  Vice President ஆக வித்யா லட்சுமி பதவி ஏற்றமைக்கு.

சேவைகள் செம்மையாக,
செழுமையே சேவையாக
நன்மைகள் நாணயமாக
நான் கேட்க ஒலி வழியாக
நாடும் நகரமும்
வீடும் புறமும் உயர்வடைய

உன்மத்தமாக வாழ்த்துக்கள்.

Monday, February 1, 2016

வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

2015
பத்மஸ்ரீ வாசவி கிளப் பாட்டு போட்டியில் அரையிறுதிக்கு தேர்வு

இசை மழையாய் வந்தாய்.
புயலாய் பாடினாய்.
தென்றலாய் உணர்ந்தேன்
சன் சிங்கரில் சங்கமித்தாய்
சந்தோஷித்தேன்.

வாழ்த்துக்கள் பத்மஸ்ரீ.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

2015
நிரஞ்சனா WISH YOU HAPPY BIRTHDAY

ஆனந்தமே வாழ்க்கையின்
ராஜாவாக பெற்றாய்.
ஆரோக்கிய மாதாவின் ஆசிகளால்
அனைத்துமே ஆனந்தமாகட்டும்.
நிறை செல்வமும், நீள் ஆயுளும்,
வாழ்க்கைத் துணையுடனும்,
வாரிசுகளுடனும்
வளம் பெறவே வாழ்த்துகிறேன்

பொங்கல் - JP வாழ்த்துக்கள்

 2015 பொங்கல்

பொழுது புலர்க புதுமையாக
பொங்கலும் பொங்க இனிமையாக.
ஆனந்தம் அடைக இமையமாக,
வளம் கொழிக்க வல்லமையாக,
செல்வம் செழிக்க செம்மையாக,
நோய் அகல நிரந்தரமாக,
திரைக்கடல் ஓடி திரவியம் தேட,
இந்திய(அந்நிய) மண்ணிலும் இமயம் காண
இந்நாளில் இயற்கையை வேண்டி வாழ்த்துகிரீன்,
வாழியே பல்லாண்டு.

பொங்கலோ பொங்கல்.  

Sunday, January 31, 2016

ஸ்ரீயா, ப்ரணவ் வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

2015
ஸ்ரீயா, ப்ரணவ் Achievement Award வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

செயற்கரிய செயல் புரிந்த செல்வங்களே!
விருதுகள் பெற்றீர் பெருமையுடன்,
செய்தியைக் கேட்டறிந்தோம் செல்லிலே
விருதுகள் வந்தது விரைவாக,
மனமும் மகிழ்ந்தது மலையாக.
பாங்காய் வழி நடத்தும்(த)
பெற்றோர் பெற்றீர்.
பவ்யமாய் பல கலைகள்
கற்பீர் (திறனாக )
வென்றிடுவீர் வெற்றிக்கனிகள் –
- பார் போற்ற.
வென்றிடுவீர் பரிசுகள் -
-அனேகம்.
நலமுடனும் வளமுடனும்
வாழ்க பல்லாண்டு

வளர்க புகழுடன் (நிலையாக)   

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து - 2015 - JP வாழ்த்துக்கள்

2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து.

பயர்நத்தம் சுட்டாலு அந்தரிகி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சிந்தனைகள் சிறகடிக்க
சிதறியதே வார்த்தைகள்.
காலங்கள் கானல் நீரானதே.
கானலும் வேணி(னி)லாக
அழைக்கின்றேன் புத்தாண்டை.
கற்பகமாய், காமதேனுவாய்
காணவே விளைகின்றேன். – வாழ்வில்
பொங்கி வரும் கடலலையின்
வெண்நுரையாய் என்றும் பொங்கவே!
நல் புத்தாண்டும் புலர்கவே!
புவியெல்லாம் மலர்கவே!
செம்மை செழிக்கவே!
வாழ்வாங்கு வாழ
வாழ்வும் வளர்கவே!,
வைகுந்தனின் வரம் வேண்டி

வருடினேன் அவன் பாதமே!  

Friday, January 29, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

சுதா & அல்லுடு ரகுநாத் 

WISH YOU HAPPY 20th   ANNIVARSARRY

கடந்த காலம் கற்பனையாகட்டும்.
கனவுகள் (யாவும் ) நனவாகட்டும்.
நிகழ்காலம் நிஜமாகட்டும்.
நிறைசெல்வம் நிலைத்திட
நிமலனடி போற்றி.
எதிர்காலம் என்றும் ஏற்புடையதாக, (ஏற்றமுடையதாக)
எல்லையில்லா ஆனந்தம் எதிர்கொள்ள (நிலைத்திருக்க)

எம்பெருமாள் அருள் வேண்டி என் நல்லாசிகள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

சரஸ்வதிக்கு பிறந்தநாள் வாழ்த்து.

அறுபதை அணைத்த ஆரணங்கே
ஆயுளும் ஆனந்தமும்
ஆண்டவன் அருளாவே
அன்பு அக்காவின் ஆசிகள்.

மரகத பதுமையே!, மணி விழாவில்
பதம் பதித்த மாணிக்க மணிவிளக்கே!!
பாக்கியம் பெற்ற பண்மணி சதங்கையே!!!
லட்சுமி கடாக்ஷமுடன்
மங்களம் நிறைந்த மண வாழ்வில்
நான்கெழுத்து வாரிசு சுபஹரும்
மூன்றெழுத்து மகனுறை மகளுடன்,
இரண்டெழுத்து பேத்தி தியாவின்
திகட்டா பேச்சில் திளைத்து,
அந்நிய மண்ணில் தெள்ளமுதுடன் 
மாசிலா செல்வங்களோடு
ஆனந்தமே காணவும்,
மாண்புற வாழவும்,
மலையப்பன் அருள் வேண்டி

பிரார்த்திக்கும் அன்பு சகோதரி.