சரஸ்வதிக்கு பிறந்தநாள்
வாழ்த்து.
அறுபதை அணைத்த ஆரணங்கே
ஆயுளும் ஆனந்தமும்
ஆண்டவன் அருளாவே
அன்பு அக்காவின்
ஆசிகள்.
மரகத பதுமையே!, மணி
விழாவில்
பதம் பதித்த மாணிக்க
மணிவிளக்கே!!
பாக்கியம் பெற்ற பண்மணி
சதங்கையே!!!
லட்சுமி கடாக்ஷமுடன்
மங்களம் நிறைந்த மண
வாழ்வில்
நான்கெழுத்து வாரிசு
சுபஹரும்
மூன்றெழுத்து மகனுறை
மகளுடன்,
இரண்டெழுத்து பேத்தி
தியாவின்
திகட்டா பேச்சில்
திளைத்து,
அந்நிய மண்ணில்
தெள்ளமுதுடன்
மாசிலா செல்வங்களோடு
ஆனந்தமே காணவும்,
மாண்புற வாழவும்,
மலையப்பன் அருள் வேண்டி
பிரார்த்திக்கும் அன்பு
சகோதரி.
No comments:
Post a Comment