Translate

Showing posts with label செல்வம். Show all posts
Showing posts with label செல்வம். Show all posts

Monday, June 2, 2014

செல்வம் தேடிய பாதை



தேடிவந்த செல்வமெல்லாம்
சொல்லாமல் போனதையா.
தேடித் தேடிப் பார்க்கின்றேன்
கண்ணாமூச்சி காட்டுதையா.
இன்று நாளை என்று சொல்லி
நாட்களெல்லாம் போகுதையா.
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்க சொல்லுதையா.
தோல்விகளால் பட்ட காயம்
தீப்பிழம்பாய் எரியுதைய்யா.
வெற்றிப்படியை தொடும்போது
வீரத்தழும்பாய் தெரியுமைய்யா.
இன்று இன்று என்று செய்து
விரைவாய் முடிவு காண்போமே.
நினைத்ததை முடித்து நாம்
வெற்றியைப் பெறுவோமே.
வெற்றியை அடையும்போது
செல்வமது சேருமே.
செல்வமது சேரும்போது
வளங்களெல்லாம் கூடுமே.
வெற்றியில் குடும்பமதை
மகிழ்ச்சி அடைய செய்வோமே.
குடும்பத்துடன் சேர்ந்து நாம்
கலகலப்பாய் இருப்போமே.


Tuesday, February 15, 2011

செல்வம்



தேடி வந்த செல்வமெல்லாம்
சொல்லாமல் போனதைய்யா.
தேடித்தேடி பார்க்கிறேன்
கண்ணாமூச்சி காட்டுதைய்யா.

இன்று நாளை என்று அது
நாட்களெல்லாம் போகுதைய்யா.
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்கத் தோனுதைய்யா.

தோல்விகளால் பட்ட காயம்
தீப்பிளம்பாய் எரியுதைய்யா.
வெற்றிப்படியைத் தொடும்போது
வீரத்தழும்பாய் தெரியுமைய்யா.

இன்றேயென சொல்லியே
விரைவாய் முடிவுகள் காண்வேனே.
நினைத்ததை முடித்து நான்
வெற்றியை அடைவேனே.

வெற்றியில் குடும்பமதை
மகிழ்வடைய செய்வேனே.
குடும்பமுடன் சேர்ந்து நான்
நம்பிக்கையைத் தருவேனே.
(கலகலப்பாய் இருப்பேனே)......