Translate

Sunday, August 26, 2007

காசுப் போட்டு..

காசுப் போட்டு
செலவழித்து
நீரை வாங்கி
குளித்தனர், குடித்தனர்
இலவசமாய் கிடைத்த
நீர்நிலையை அழித்து விட்டு.

இயற்கையாய்
கிடைக்கும் நீரை
வீனாய் ஓட விட்டு,
சிறுதுளி பெருவெள்ளம்
மழைநீரை சேமிப்பீர்
விளம்பரம் செய்தனர்
வீனாய் செலவு செய்து.

விளம்பரம் ஒவ்வொன்றும்
பல லட்சம் பெறும்.
நீர்நிலையை மேன்படுத்த,
ஊருக்கு ஒன்றாய்
சில லட்சமெனசெலவழித்தால்,
நிச்சயம் வளம் பெரும்.

கூறு போ(கெ)ட்டவர்கள் !

குடிநீர் குளத்தை!
குப்பை மேடாக்கினர்
குடிநீர் தேவையை மறந்து.
குளமிருந்த இடத்தை
கூறுப் போட்டனர்
குடியிருக்க என்று.

குடிநீரின்றி
குடத்தைத் தூக்கிக் கொண்டு,
குவிந்து விட்டனர்,
குடிநீர் வண்டியை
குறி வைத்து.

குறித்த நேரமின்றி
குப்பையாய் வந்த நீரை,
குடிநீர் தேவையால்
குடித்தனர் வடித்தும் வடிக்காமலும்.
குற்றம் சுமத்தினர்
குடிநீர் இல்லையென்று
கூறுப்போட்டவரை மறந்துவிட்டு.

ஏற்றமா? ஏமாற்றமா?

ஓ....!!! நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் எம் வீட்டிலே, பூங்காற்று நுழைந்தது. உணருமுன்னே, புயற்காற்றாய் பிரிந்தது எமை விட்டு. ஆமாம், அது வேறொன்னுமில்லைங்க. வலைநண்பர்.திரு.பாலசுப்ரமணியம் கணபதி @ G.கிருக்கன் அவர்கள், (Composetamil.com)படைப்பாளிகள், வாசகர்களில் சிலராவது, அவரது படைப்புகளையும்,விமர்சனைகளையும் மற்றும் 2 Blogsயும் வாசித்து இருப்பீர்கள், அவர் முன்கூட்டியே அனுமதி பெற்று, மைசூர் ஹூப்ளியிலிருந்து எம்மை சந்திக்க வந்திருந்தார். இவ்வளவு தூரம் நம்மைத் தேடி ஒருவர் வந்திருக்கிறாரே, என்ற மகிழ்ச்சியை மனது உணர்ந்து, நிரப்பிக் கொள்ளும் முன்பாகவே,நேரமின்மையைக் காரணம் காட்டி, சில நிமிடத்துளிகளில் விடைப்பெற்றது, ஏமற்றத்துடன் ஏக்கமும் அடையசெய்தது.

எனது படைப்புகளை உடனுக்குடன் அலசுபவர்களில் இவரும் முக்கியமானவர். நிமிடத்துளிகளில் விடைப்பெற்றதால், நினைத்த எண்ணங்கள் கரைந்தது மனத்துக்குள்ளே. இவ்வளவு ஏமாற்றம் இருந்தாலும், அறிமுகப்படுத்திக் கொள்ள நேரில் சந்திக்க வந்ததை ஏற்றமாகவே கருதுகிறேன். இதன் மூலம் என் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறேன்.

Saturday, August 25, 2007

தேடத் தேவையில்லை

ஒப்பந்தமாய் இருந்தேனோ ?
ஓர் பந்தமாய் வந்தாயோ?
ஒப்பற்று போனேனோ?
ஒப்பேற்றிக் கொண்டாயோ?

நாள் பொழுது போகுமோ?
இனிமை எங்கு போனதோ?
செயல்படுத்த நினைத்துவிட்டால்,
தடையேதும் ஒன்றுமில்லை.

நமக்குள் இருக்கும் அன்புதனை
தேடிச்செல்லத் தேவையில்லை.
அறிய செய்ய மனமிருந்தால்
வருத்தம் என்றும் வாராதே.

புலம்பல் !

உன் வார்த்தையைக் கேட்கின்றேன்,
நிசமென்று நம்புகின்றேன்.
உன் செயலைப் பார்க்கின்றேன்.
பொய்யை உணர்கின்றேன்.
கண்ணால் கண்டதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்.
விசாரிக்கும் போது
நழுவுகிறாயே வாலைமீனாய்.
வென்று விட்டாய் நீ.
தோற்று விட்டேன் உன்னிடமும்
தோல்விகளையே சந்திக்கும் நான்.

Friday, August 24, 2007

ஹைக்கூ கவிதைகள்....

இதயம்
^^^^^

இதயம் இருக்கிறது
மனத்தைப் படிக்க.
வார்த்தைகள் இல்லை
வடித்துத் தர.
---------------

இரவு திருடர்
^^^^^^^^

உண்டிடுவார், உறங்கிடுவார்
பகல் பொழுதினிலே.
விழித்திருப்பார், சென்றிடுவார்
இராப்பொழுதினிலே.
---------------------

ஸ்வர ஜுரம்
^^^^^^^^

இசைமழையில் நனைந்தேன்
ஸ்வர சு(ஜு)ரத்தால்.
மழை நின்றது
சு(ஜு)ரமும் அதிகமானது.
காத்திருக்கிறேன்-மீண்டும்
இசைமழையில் நனைந்திடவே.
-----------------------

நினைத்துப் பார்
^^^^^^^^^^^
என்ன என்று
எப்படி என்று
நினைத்துப் பார்
உன் மனத்துக்குள்ளே.

அறிந்துக் கொண்டால்,
செய்து முடித்து
வெற்றிப் பெறலாம்
நினைத்து விட்டால்.
---------------

துடிப்பு
^^^^^
துடிக்கின்றான் நோயாளி
நோயின் வலியினால்.
துடிக்கின்றார் குடும்பத்தார்
விரைவில் குனமடைய.
துடிக்கின்றனர் செவிலியர்
இயந்திர கதியில்.
துடிக்கின்றார் மருத்துவர்
துயரை நீக்க.
-----------------

ரோஜா காதல்
^^^^^^^^^^
காதல் என்பது
ரோஜாவை போல.
அழகை நினைத்து
தவறாகி விட்டால்,
அதிகமாயிருக்கும்
முட்களின் வலி,
ரோஜா இதழ்களின்
மென்மையை விட.
--------------

Wednesday, August 22, 2007

கறைகள் கலையுமா ?

பொருப்பிலும் கையூட்டை எதிர்பார்த்து,
பெறுவதில் கண்ணாக,
கடமையையும் தவறவிட்டு,
விபரீதம் பல புரிந்து,
வீணர்களாய் வாழ்கின்றார்.
வீரர்களாய் இல்லாமல்.
கற்றுத் தந்த பாடங்கள் காற்றிலோட,
களவாட கற்றுக் கொண்டார்,
காக்க வேண்டிய இடத்திலிருந்தும்.

பொருள் ஒன்றே குறியாக
பொறுப்பு அதுவே தமதென
பொறுப்புகளைத் தள்ளி விட்டு
பொறுப்பின்றி பணிகளை
புறந்தள்ளி வைத்து விட்டு
காலம் தள்ளும் போக்கிலே
கவலையின்றி செயல்பட்டு
காலந்தனை காட்டி விட்டு
கடமைகளை நிறுத்தி விட்டு
கலைந்துத்தான் செல்கின்றார்
காரிய ஆலயத்திலிருந்தே.

மாசுக் கொண்ட மனங்கண்டு
இரத்தம் சிந்தும் நல்லிதயங்கள்
இன்றும் பல இருந்தாலும்
மாசுக் கொண்ட மனங்களினால்
பரந்துள்ள பாரதத்தின்
விரிந்துள்ள காட்சிகளில்
கறைப் படிந்த இடங்களே
பளிச்சென்று தெரிகிறது.

இந்த நிலை மறையுமோ
என்று தான் மாறுமோ
கொடுப்பதிலும் பெறுவதிலும்
இல்லையென்ற நிலையினையே
இக்கணமே உறுதியினைக் கொள்வீரே.
ஏக்கத்தின் கீழிருக்கும்
பாரதத்தின் புதல்வர்களே !
பாரெங்கும் புகழ் பாடும்
உம் செயல் படுத்தும் முடிவு கண்டு.

Tuesday, August 21, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நான் !
****

பறக்க நினைக்கும்
சிறகொடிந்த பறவை
நான்
நகரக்கூட முடியவில்லை
விதியின் காலடியில்.
++++++++++++++++

நீ...!!
*****

நீ இருப்பதைப் பார்த்தாலும்
நீ இல்லாத்தை அறிகின்றேன்.
நீ இல்லாத்தை உணர்ந்தாலும்
நீ இருப்பதாக நினைக்கின்றேன்.
+++++++++++++++++++++++

வானமே !
********

ஓ... உருவமில்லாதவனே !
வர்ணங்களை எப்படித்தான்
வாரிப்பூசிக் கொள்கிறாயோ ?
+++++++++++++++++++

இல்லை !
*******

நான் சொல்லித்தான்
புரிந்து கொள்ள
போவதில்லை.

நான் சொல்லாமல்
நீ அறியாமல்
போவதுமில்லை.
++++++++++++++

அவசரக் காதல்
**********

கண்ணும் கண்ணும் கண்டதும்
காதல் வந்தது.
காதல் வந்த நொடியிலே
புன்னகை மலர்ந்தது.
மலர்ந்த புன்னகை மறையுமுன்னே
பிரிவு வந்தது.
+++++++++++++++++++++++

தவறவிட்டேன்.
**********

காத்திருந்த நான்
கலந்துக் கொள்ள தவறிவிட்டேன்
கவிதைப் போட்டியில் தான்.
++++++++++++++++++++

என் நாட்கள்
+++++++++

ஒலியின்றி தான்
ஒளிர்கிறது மனத்திலே
ஒழிந்த என் நாட்கள்.
++++++++++++++

Sunday, August 19, 2007

இலட்சியப் பயணம் !

இடுப்பிலே ஒன்று
வயிற்றிலே ஒன்று
வாழ்க்கைப் பயணம்
மேற்க்கொண்டாள்
அவன் மனைவி,
நோய்வாய்ப் பட்ட
கணவனையும்
சுமந்துக் கொண்டு.

நாம் !

நாடினேன் உன்னை
நாடினாய் என்னை.

கூடினோம் நாம்
கூட்டத்தான் குடும்பத்தை.

நாடினோம் மூத்தவரை
வாழ்த்துக்களைப் பெறத்தான்.

நாடினோம் இறைவனை
வளங்களைக் கேட்கத்தான்.

Tuesday, August 14, 2007

இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.-2007

சுதந்திரத்தை
நீ அடைய
காணிக்கையாய்,
தமை அளித்தார்
முத்துக்களாய்
நீ அணிய.

அணிந்த நீயும் பெருமைக்
கொள்ளும் நேரத்திலே,
உமை சிறுமைப் படுத்த
சிலர் நுழைந்தார்,
போலிகளாய்.

முத்துக்களால் பளப்பளத்த
நீயும் இன்று,
பொழிவிழந்து இருக்கின்றாய்.
உன் அழகு
என்றென்றும் நிலைத்திருக்க
பக்குவமாய் போலிகளை
களைந்து விடு.

காலத்தின் வேகத்தால்
துண்டுகளாய், மீண்டும்
நீ உடையாமல்,
உமைக் காக்க
எமக்கருளைத் தந்துவிடு.

பெற்றெடுத்தத் தாயை
முதல் நினைத்தோம்.
வாழ்வளித்த
உம் பாதங்களை
யாம் பணிந்தோம்.

கருத்துக்கள்
பலவாறு
தானிருக்க.
அத்தனையும்
வெளியிட
இடங்கொடுத்தாய்.

அன்று கூறுகளாய்
சிதைந்திருந்த உனைத் தானே
ஒன்று சேர்த்து
அழகு பார்த்தார்
சித்தர்களாய்.

இன்றோ நிலைக்கெட்ட
மனிதர்களால்,
உனைத்தானே
கூறுப்போட நினைக்கின்றார்
சிதைத்துத் தானே.

அஞ்சி அஞ்சி சாகின்றோம்
நடக்கின்ற கொடுமைக் கண்டு.
அஞ்சாமல் செய்கின்றார்
தமை மட்டும்
மனத்தில் கொண்டு.

உலகுக்கே பாடங்களை
நீ கொடுத்தாய்.
நீ கொடுத்த பாடங்களை
என்றுதான்
புரிந்துக் கொள்வார்.

பட்ட காலில் மீண்டும்
படுமென்பாரம்மா.
அந்த வேதனை மீண்டும்
எமக்கு வேண்டாமம்மா.

எத்தனையோ இன்னல்கள்
இடையிடையே வந்தாலுமே,
உனை சிறுக சிறுக
அழகு படுத்தி வருகின்றோம்.

சிறு அழகு பெற்றிட
ஆண்டுகள் அறுபதாமே,
நீ பேரழகு பெற்றிட
எத்தனை நாளோ.

உமை நினைத்து, நாங்களும்
பெருமைக் கொண்டு,
தொடர்ந்து நாங்கள்
மகிழ்வுடனே இருந்திடவே,
என்றும் நீயும்
சுதந்திரமாய் இருந்திடுக
என்றே நாங்களும்
வாழ்த்திக் கொள்வோம்
வாழ்த்துகளை,
எமக்கு நாமே.

Sunday, August 12, 2007

ஹைக்கூ கவிதைகள்....

காதலால் !
********


வண்ணக்கனவுகள்
கண்டேன் அன்று.
ஆனால்,
காணுகிறேன் இன்றோ
கருப்புக் கனவுகளை.
###############

உலகத்திலே..
***********

மோசக்காரனாய்
பெயரெடுத்தேன்,
உன்னை காதலித்ததால்.
@@@@@@@@@@@@@

சொல்லட்டுமா ?
************

மொழிகள் பகர்வதற்கே !
விழிகள் பயில்வதற்கே !!
கைகள் படைப்பதற்கே !!!
ஆனால்
தூக்கம் பாழ்படுத்த அல்ல.
$$$$$$$$$$$$$$$$$$$$

வானமே !

வெள்ளையாய், நீலமாய்,
செம்பஞ்சு குழம்பாய்,
கருமையாய்
வர்ணங்களை
பிரித்தும், இணைத்தும்
வானவில்லாய்
உன்னில் வித்தைக் காட்டி
வானமே வேடிக்கைக் காட்டுகிறாய்,
வான வேடிக்கையாய் காட்டுகிறாய்.

Wednesday, August 8, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நான்
%%%%

குளம்பி விட்டேன்
குளப்பி விட்டேன்
மனம் தெளிவதற்கு
நாரதராய் நான்.
################

நீ.நீ..நீ....
%%%%%%%

நல்லவன் என்றோ,
வல்லவன் என்றோ
சொன்னதில்லை நான்
ஆனால்
சொல்கிறாய் நீ...
மோசமானவன் என்று.
##################

முத்தங்கள்
%%%%%%

நீ தந்தது
என்னில்
ஐஸ்கட்டிகளாய்.

குளிர்பானமாய்
நான் தந்ததையே
திருப்பித் தந்தாயோ
ஐஸ்கட்டிகளாய்.
################

மாயக்கண்ணாடி
%%%%%%%%

நான் சிரித்தால்
நீயும் சிரிக்கிறாய்.
நான் அழுதால்
நீயும் அழுகிறாய்.
என் மனமென்ன
கண்ணாடியா
எதிரொளிப்பதற்கு.
###############

அரவணைப்பினால்
%%%%%%%%%

உன்னிடத்தில்
விழுந்த நான்
எழ முடியவில்லை
அடிப்பட்டதால் அல்ல.
#################

காண முடியவில்லை
%%%%%%%%%%%

அன்று விதையாய்
இன்று மரமாய்
முழுமையாய்
காண முடியவில்லை.
என் இதயத்தில்
நீ அடர்ந்து
வளர்ந்து இருப்பதால்.
##################

கை தேர்ந்தவள்
%%%%%%%%

நினைத்திருந்தேன்
கபடமற்றவள்,
கள்ளமில்லாதவளென
அறிந்து கொண்டேன்
உன் செயலால்
கை தேர்ந்தவள் நீயுமென.
#################

அத்தனையும்-- சி
%%%%%%%%%

அறிந்துக் கொள்ள பயிற்சி.
வெற்றிக் கொள்ள முயற்சி.
எடுக்க வேண்டும் தொடர்ச்சி.
இல்லையெனில் இகழ்ச்சி.
####################