Translate

Sunday, August 10, 2008

எப்போதும்.......

எண்ணங்கள்
வெவ்வேறாய் இருந்தாலும்,
தாக்கங்கள்
ஒன்றாய் இருப்பதாலே.

உன் நினைவுடனே
நானிருக்க!
என் நினைவின்றி
இருப்பாயோ நீ?

எப்போதும் ஒரு நினைவாய்
ஒருபோதும் மறையாமல்,
நினைவுகளை அலைக்கழிக்கும்.
இந்நிலையே இருவருக்கும்
போதுவாய் இருக்குமன்றோ.

Thursday, August 7, 2008

இது ஒரு பக்கம்



பேச்சுக்கு துணை இல்லையென

அழுது தீர்ப்போம்.


ஆறுதல் சொல்ல

அருகினில் வந்தால்,

அவரைப் பிடித்து

கசக்கிப் பிழிவோம்.




ஒப்புக் கென்றே

ஒப்பாறி வைக்க

ஆயிரம் பேர்கள்

அவணியில் உண்டு.




கூட்டு சேர்ந்து

கும்மாளம் அடிக்க

துட்டு- உன்னிடம்

இருந்தால் உண்டு.




காய்ந்த குளமோ

இரையின்றி இருக்க,

பறவைக் கூட்டமோ

பறந்து செல்லும்.




இருக்கும் போது

எல்லாம் தெரியும்.

இல்லாத போதோ

வானம் மட்டும் தெரியும்.




மனம் என்பது

கரைந்து போக,

மானமும் அதிலே

தீய்ந்து போகும்.




மனத்தில் விழுந்த

சூடுகள் எல்லாம்,

கண்களில் தெரியும்

வடுக்களாய் எல்லாம்.




ஏக்கத்தின் பிடியில்

சிக்கித் தவிப்போம்,

ஏனென்று கேட்க

ஆட்களின்றி.




செல்லும் பாதையோ

தவறிச் சென்றால்,

வாழ்வும் விரைவில்

சீரழிந்து போகும்.




ஆக்க பூர்வமாய்

அனுபவத்தில் கண்டவர்,

சொன்ன சொல்லை

செவிமடுத்து கொள்வீர்.

பிமரத சாந்தி- 70 ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து

எமது மதிப்பிற்குறிய தந்தை திரு.P.A. மாணிக்கம் செட்டியார் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 1991-92 ல் நடைப்பெற்ற போது, எமது தந்தைக்கும், தாயார். திருமதி. பாக்யலக்ஷ்மி அவர்களுக்கும் எமது சகோதரிகளால் வாசித்து அளிக்கப்பட்ட வாழ்த்து மடல் இது.
**********************

அன்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஆற்றலைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

இனிமையால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஈகையைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

உழைப்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஊக்கத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

எழுபதைக் கண்டு உயர்ந்தது உங்கள் பருவம்.

ஏற்றத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

ஐயம்பல தீர்த்து உயர்ந்தது உங்கள் பருவம்.

ஐயமின்றி உயர்ந்தது எங்கள் புருவம் .

ஒளிமயமாய் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஓங்குபுகழ் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

ஔவை நெறியில் உயர்ந்தது உங்கள் பருவம்.

அஃதை பார்த்து உயர்ந்தது எங்கள் புருவம் .

Wednesday, August 6, 2008

சொல்லி விட....!!!

மனமோ நினைக்குது
சொல்லி விட.

உணர்வோ தடுக்குது
சொல்லி விட.

நீங்கா நினைவுகளை
சொல்லி விட.

நினைவுகளோ பலயிருக்கு
சொல்லி விட.

கற்பனைகள் பலவே
சொல்லி விட.

கவிதையாய் பிறக்குமோ
சொல்லி விட.

கருவிலே சிதைந்ததையும்
சொல்லி விட.

கருத்திலே கொண்டேனே
சொல்லி விட.

பார்த்ததை மட்டுமா
சொல்லி விட.

படித்ததை மட்டுமா
சொல்லி விட.

கேட்டதை மட்டுமா
சொல்லி விட.

அறிந்ததை மட்டுமா
சொல்லி விட.

இல்லை,
உணர்ந்ததை மட்டுமா
சொல்லி விட.

என்னுடைய ஆசைகளைச்
சொல்லி விட.

அலையாடும் எண்ணங்களை
சொல்லி விட.

ஆக்கமாய் இருந்தால்
சொல்லி விட.

அழகாய் இருக்கும்
சொல்லி விட.

பெற்றதை எல்லாம்
சொல்லி விட.

பெருமையாய் இருக்குமோ
சொல்லி விட.

இன்பமாய் இருப்பதை
சொல்லி விட.

இனிப்பாய் இருக்குமே
சொல்லி விட.

வேதனையாய் இருப்பதை
சொல்லி விட.

வேம்பாய் கசக்குமே
சொல்லி விட.

இருப்பினும் இருப்பினும்
சொல்லி விட.

இல்லாததை இருப்பதாய்
சொல்லி விட.

மனமோ தயங்குது
சொல்லி விட.

உறுதியினை எடுத்தேன்
சொல்லி விட.

உற்றவரை தேடினேன்
சொல்லி விட.

இழந்ததை எல்லாம்
சொல்லி விட.

இயலாமல் தவிக்கிறேன்
சொல்லி விட.

தடைகளும் இருக்கு
சொல்லி விட.

தாண்டி வருவேன்
சொல்லி விட.

எண்ணங்களோ ஆயிரம்
சொல்லி விட.

எழுத்திலிட முயல்கிறேன்
சொல்லி விட.

Sunday, August 3, 2008

அனுப்பிய வாழ்த்து

எமது சகோதரியின் மகள் நீத்துவின் திருமணத்துக்கு அனுப்பிய வாழ்த்து கவிதை.


விழித்த விழிகளோ புது மலராய்
இனித்த நினைவுகளாய்

இன்று முதல் தொடரட்டும்.

வண்ணமிகு தோட்டத்தில்


வாசனை மலர்களாய்
வாசமது எங்கும் பரவட்டும்.


உம் குடும்பமெனும்
தோட்டத்தில்
பசுமை என்றும் நிலைக்கட்டும்.

வாழ்க்கையெனும் படகு


மகிழ்ச்சிக் கடலில்
நிலைத்திருந்து மிதக்கட்டும்.


கண்ட கனவுகளோ
நிற்கும் நினைவுகளாய்

நித்தமும் நிகழட்டும்.


பார்த்த பார்வைகள்
பகிர்ந்து கொள்ளட்டும்.


பாசமெனும் வலையாய்
பின்னிக் கொள்ளட்டும்.


ஆனந்த வெள்ளமோ
அருவியாய் பொழியட்டும்

இன்ப வாழ்வோ
ஆல் போல் செழிக்கட்டும்.


விழுதுகளாய் விரிந்து
நிலையாய் திகழட்டும்.


இனிமையாய் இல்லறம்
நயமாய் நல்லறம்

இணைந்தே இருக்கட்டும்.


இன்றிணையும் நீவீர்,
பல்கி பெருக வேண்டும்.

குடும்பமாய் விரிய வேண்டும்.


குறைவிலா வாழ்வு
அமைய வேண்டும்.


குணவதியே! அவர் குணமறிந்து
உன் வசப்படுத்த வேண்டும்


குள விளக்கே, உன்னொளி
அவர் இதயமதில் ஒளிரவேண்டும்.


உம் இதயங்களை
மாற்றியே குடியேற வேண்டும்.


வேண்டும் வேண்டும்
எத்தனையோ வேண்டும்.

அத்தனைக்கும், இறைவனின்
அருள் வேண்டும்.


எடுத்து வைக்கும் அடிகளெல்லாம்
நிலையாய் செல்ல,

உறுதியாய் இருக்க,
உற்றதுணையுடன் இணைந்தே நடக்க,

இருபக்க நினைவுகளும்
இணைந்தே இருக்க,

செல்லும் வழியோ
சேர்ந்தே இருக்க,

இன்று போல் என்றுமே
இன்பமாய் வாழ்ந்திடவே,


வாழ்க! வாழ்க!! நலமாக!!!
பல்லாண்டு வாழ்க! சுகமாக!!!

என்றே ஆசிகள் பலநல்கி,
வாழ்த்தினோம் மனந்திறந்தே.






மாமா,
ஏ.எம். பத்ரி நாராயணன்.@

தவப்புதல்வன்

Saturday, August 2, 2008

மணமகளைப் பார்த்த படலம்- ஒரு திருத்தம்

யாம் கேட்டுணர்ந்த செய்தியில், கவிதையாக வடிக்கும்போது கீழ்கானும் ஒரு பிழை ஏற்பட்டுவிட்டது.



''என் நினைவு அகலாது
என்றுமே இணைந்திருக்க
அவன் விரலில்- அவளும்
கணையாழி ஒன்றினையே
அணிந்துத்தான் விட்டாளே.''




மேலே கண்ட செய்தி நடைப்பபெறா நிகழ்ச்சியாகும். நடைப்பெற்ற நிகழ்ச்சசியை கீழ்கானும் வகையிலே கவிதையாக வடித்துள்ளேன்.பொருத்துக் கொண்டு வாசியுங்களேன்.

கண்டதும் காதலால்
கவர்ந்து விட்ட கள்வனுக்கு,
கனிந்து வரும் காலத்தை
கண்டுணரும் நோக்கமதில்,
காலம் காட்டி ஒன்றினையே
களிப்புடனே பூட்டி விட்டாள்.

தனக்கென்றே உரிமையென
தயங்காமல் வரிந்துக் கொண்ட
தலைவனுக்கு, தானும் தான்
தளும்புகின்ற மகிழ்வுடனே
தங்கச்சங்கிலி ஒன்றினையும்
தவள விட்டாள்- அவன் மார்பினிலே.