Translate

Showing posts with label உணராதது ஏன்?. Show all posts
Showing posts with label உணராதது ஏன்?. Show all posts

Friday, June 22, 2018

உணராதது ஏன்?





உயிருக்கு மேலான
உணர்வுகள் அடைந்த இரணமடா.
விரைந்தோடும் குருதி சிந்தா
சொல்லம்பின் துளைகளடா. 10

எட்டிக்கசப்பாய் ஆனதேனோ?
எடுத்துரைக்கா நிலையேனோ?
எட்டி நின்று வீசுகின்ற
எரியம்புகள்,
எங்கோ தூக்கி வீசுதடா. 21

அத்தனையும் செய்து விட்டு
அடக்கி ஆள முற்படுகிறாயே
உணர்வில்லா என் மெய்யை,
உண்மையில் என்ன பிறவியடா? 33

கைப்பிடித்த போதன்று
செங்கதிர் தணல் முன்னே,
விழித்துளிகள் சிந்தாமல்
கைக்குள் வைத்து,
இமையாய் காப்பேனென
செய்த சத்தியம்
காணமல் கரைந்து போனதெங்கு? 49

பாடம் கற்பிக்க நானினைத்தால்
கதறித் துடிப்பாய் உனை மறந்து.
ஆனாலும் அமைதியாய் நான்,
ஈன்றெடுத்த
என் இரத்தங்களின் நலனுக்காய். 63

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏