Translate

Thursday, January 17, 2013

நிரஞ்சனா & ஆனந்த் திருமண நாள் வாழ்த்து. 18/1/2013


நிரஞ்சனா & ஆனந்த் திருமண நாள் வாழ்த்து. 18/1/2013
 










புதியதொரு பாதையில்
 பயணம் தொடங்கி
பற்பல அனுபவங்கள்
 நாள்தோறும் இருக்க,
பாங்குடன் அனுகி,
 பங்குடன் தொடர்ந்து
பரவச நினைவுகள்
 பல்கிப் பெருக,
பல்லாண்டு காலம்
 நலமுடன் மகிழ்வுடன்
இணைந்தே நடக்க,
 வாழ்த்தினோம் உங்களை
இனிய இத்திருமண நன்னாளிலே!

அன்புடனும், ஆசிகளுடனும்,

அப்பா, அம்மா.


Tuesday, January 15, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


ஓரிடண்டாய் இருந்த நாட்கள்
வருடங்களாய் கழிந்ததே.
நினைவுகள் முன்னும் பின்னும் ஊஞ்சலாட,
உற்சாக நிகழ்வுகள் பூத்து சிரித்ததே.
ஆண்டுகள் பல கடக்க,
உற்சாக நினைவுகள் பூத்து குலுங்க,
உடலும் உள்ளமும் நலமுடன் திகழ
வாழ்த்தினோம் உம்மை - உம்
இனிய இப்பிறந்த நாள் இன்றிதிலே.



Murali Coimbatore





Monday, January 14, 2013

இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள். 2013


இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.



உழைப்பின் மேன்மைக் காட்டும் பயிர் வகைகள்,
காற்றினிலே அசைந்தாடும் செந்நெல் கதிர்கள்
உழவுக்கு உயிர்நாடி உன்னத பசு வகைகள்
உயிருக்கு உயிர் நாடி விளைந்த நற்பயிர்கள்
ஐம்பொன் பூதங்களை வணங்கி நாம்
தகதகக்கும் செஞ்ஞாயிறு ஒளியினிலே
வேர்வை சிந்தும் விவசாயி உடல் மினுக்க,
உழைத்த உத்தமனாம் உழவனைப் போற்றிடுவோம்.
இனிதான இந்நாளில், சிறந்ததொரு பொன்னாளில்
உடனுழைத்த அனைவருக்கும், அனைத்துக்கும்,
மனமகிழ வாழ்த்துகளை கூறி.


-தவப்புதல்வன்
13/01/2013

Sunday, January 13, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2013


பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பாலுடன் பச்சரிசி
உலைக் கொதிக்க,
உருக்கு நெய்
அத்துடன் செர்ந்துருக,
முந்திரியும் திரட்சையும்
வெல்லமுடன் சேர்ந்தணைக்க,
ஏலத்தின் மணமோ
எட்டுதிக்கும் புகழ் பரப்ப,
நாசி வழி உள்னுழைந்து
வாய் வழியே நீரூற,
சப்புக் கொட்டியதே
நாவுடன் மனமும் தான்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


-தவப்புதல்வன்
13/01/2013

Friday, January 11, 2013

கொடுமைக்காரத் தந்தை..


கொடுமைக்காரத் தந்தை..

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், நாராயணபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாஷா, இவருக்கு திருமனமாகி 4 வயது மகள் உள்ளாள். மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகம். அதனால் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்வர்.

இந்த சூழ்நிலையில், பாஷா, மனைவி மீதிருந்த கடும் கோபத்தினால் தனது 4 வயது மகளை கடுமையாக தக்கியதுடன், குளிர்சாதனப்பெட்டியில் (ஃபிரிஜில் ) வைத்து பூட்டி விட்டார். சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள், பாஷாவை சுற்றி வளைத்து தாக்கி, குழந்தையை மீட்டனர். 

காவலர்கள்  (போலீசார்) விரைந்து சென்று பாஷாவை கைது செய்ததுடன், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த சிறுமியின் உடல் நலம் தேறியுள்ளதாக மறுத்துவர்கள் (டாக்டர்கள் ) தெரிவித்தனர். 

Wednesday, January 9, 2013

கொடுப்பினை




கொடுப்பினை இல்லையென்று
ஏன் குமைந்தாய்?
நலமான வாழ்வே சுகமென்று
ஏனோ நினைக்க நீ மறந்தாய்.

நலமுடன் வாழ வாழ்த்துகளுடன்
மதிய வணக்கம் நட்புகளே......!

உங்கள்,
-தவப்புதல்வன்.

கொசுவின் வாழ்த்து.


கொசுவின் வாழ்த்து.

மின்விசையால் இயக்கி
காற்றை விசையாய் வீசும்
மின்விசிறிக்கும் பயமில்லை.

எம்மினத்தை அழிக்க
காற்றிலே பரப்பி, விரட்டும்
விரட்டிகளை கண்டும் அச்சமில்லை.


கொலைப் புரிகிறீர் மின்மட்டையால்
ஆனால் அழிக்க முடியாது எமை.
வீறுகொண்டு செயல் படுகிறோம்
விரைந்து முட்டைகளை இட்டு.


கழிவுநீர் தேங்கும் வரை,
சுகாதாரம் பேணா வரை
சாதனை படைக்க முடியாது
எமை முழுமையாய் ஒழித்து.
உமக்கோ ஒரு நாள்- அது
எமக்கோ வாழ் நாள்.


பிறவிக்காலம் முடியும் வரை
உறுஞ்சித்தானே வாழ வேண்டும்.
பாவப்பட்ட உமைக் கடித்து
பாவங்களை சுமக்கின்றோம்.

உறுஞ்சியே நாங்களும் பெறுகிடவே
நல்தேகத்துடன் வாழ்ந்திருக்க,
வாழ்த்துகிறோம் உங்களையே.
வாழியே பல்லாண்டு நல்ரத்தமுடனே!
நாங்களும் உங்களுடன் வாழ்ந்திடவே.

Tuesday, January 8, 2013

குறுஞ்செய்தி படைப்புகள்

குறுஞ்செய்தி படைப்புகள்

1) இதயங்களை
    ஆட்டிப் படைக்கும்
     " இதமான சொற்கள்"


பின் குறிப்பு:- கைப்பேசியில் *கவித்துளி* என்ற பெயரில் குறுஞ்செய்தி படைப்புகள் வெளியிடப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எம் குறுஞ்செய்தி படைப்புகளை அனுப்ப சொல்லி கேட்டிருப்பினும், அதில் யான் ஈடுபாடு காட்டவில்லை. மீண்டும் எமது நண்பர் சின்னுசாமியின் வேண்டுகோளுக்கு இணங்கி, நேற்று மேற்கண்ட குறுஞ்செய்தியை அனுப்பி வைக்க, இன்று வெளியானது. 

இது தானோ?


இது தானோ?


இன்றிருக்கும் மனிதனிவன்
இன்றைய பொழுது கழியுமுன்னே,
இருப்பினும் இல்லையென ஆகலாம்,.
இல்லா நிலையது தோன்றலாம்
இதுவே நிலையென்றும் போகலாம்
இழந்து போன சொந்தத்தினால்,
இற்றுப்போன உறவுகளாய்
இனி விழிநீர் தான் சொந்தமோ


சில சொற்கள்:- சில நாட்களுக்கு முன் இரவு தூக்கமில்லாமல் புரண்டுக் கொண்டிருந்த போது, இக்கரு உருப்பெற்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது எமது மனைவியும் சில முறை புரண்டு படுத்தார். என்னம்மா, நான் எழுதிக் கொண்டிருப்பது, உன் உறக்கத்தை கெடுக்கிறதா என கேட்டதற்கு, எனக்கும் உறங்க முடியவில்லை, மனம் உலைச்சலாய் இருக்கிறது என சொல்லிய போது, எனக்கும் உறக்கம் வரவில்லை. மனம் உலைச்சலாய் இருக்கிறது, எழுத தோன்றியதை. எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றேன். மேற்கண்ட பதிவை எழுதி சில நாட்களில், நேற்று எமது மூத்த சகலை அமரர். ராமசாமி அவர்கள் இறைவனடி அடைந்ததுடன் இவ்வரிகள் அவருக்கும், அவர் துணைவியாருக்கும் பொருந்தியது நினைவுக்கு வர, அதிர்ந்து விட்டேன்.
 —


http://www.facebook.com/photo.php?fbid
=522411167798530&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater