Translate

Wednesday, June 29, 2016

வாலறுந்த எலி



வாலறுந்த நரி கதைக் கேட்டிருக்கிறோம். ஆமாம் இது என்ன புது கதையாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா? படிங்க தெரியும் நண்பர்களே.

எலிகளை ஒழிக்க கூடுகள் இடிக்கிகள் மருந்துகள் பல இருந்தாலும் அத்தனையிலும் தப்பித்து உயிர் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன எலிகள். அதுபோலவே
எலிகளை ஒழிப்பதற்காக புதுபுது வழிகளை / உபாயங்களை மனிதர்களும் கடைப்பிடிப்பது தான் வருகின்றனர்.
இப்போது நான் கூறுவதை
எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம் அறிந்திருக்கலாம். ஆனால் இப்போது தான் நான் பார்த்தேன். அதில் சுவாரசியமான தகவல் இருந்ததால், உடனே உங்களுடன்.
 பெரியவர்களின் உள்ளங்கையை விட பெரிதாக, செவ்வக வடிவத்தில் ஒரு அட்டை. அதன் ஒருபுறம் தார் பிசின் போன்ற பொருள் பூசப்பட்டு இருக்கிறது. வாங்கி வருகையில் நம் கையில் ஒட்டாமலிருக்க, அதன் மேல் பிளாஸ்டிக் தாள் ஒட்டப்பட்டிருக்கும். 
அந்த அட்டையை எலி நடமாட்டம் உள்ள இடத்தில் 
பிளாஸ்டிக் தாளை நீக்கிவிட்டு வைத்து விட்டால், கால் அல்லது கால்களை வைக்கும் எலி ஓடமுடியாமல் ஒட்டிக் கொள்ளும். பிறகு நம் விருப்பம், கொல்வதோ, உயிருடன் வீசி விடுவதோ.
சமிபத்தில் ஒரு எலி தொந்தரவு கொடுத்து வந்தது. அதை கொல்ல இந்த அட்டைகளை ஓரிரு இடங்களில் வைத்தோம். காலை விடிந்ததும், ஆஹா.. எலி மாட்டியிருக்குமென சென்று பார்த்தால்..... ஒரு அட்டையில் எலி வால் மட்டும் ஒட்டிக்கொண்டு இருந்தது. 
பல்லி மற்றும் சில உயிரினங்கள் தான் எதிரியிடமிருந்து தப்பித்துக் கொள்ள, தங்கள் வாலை துண்டித்துக் கொண்டு ஓடி போய் விடும். இடுக்கியில் எலியின் வால் மாட்டிக் கொண்டால் கூட, தப்பித்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்குமே தவிர, தன்  வாலை துண்டித்துக் கொண்டு ஓடி விட்டதை இதுவரை பார்த்ததில்லை. இந்த பசையில் ஒட்டிக் கொண்ட எலி,தன் வாலை துண்டித்துக் கொண்டு தப்பி விட்டிருந்தது. 
ஹ.. ஹா... மறுநாள் கோபத்துடன் வந்த எலி, ஒரு மரச்சாமான் சிறு பகுதியை கொரித்து விட்டு சென்றிருந்தது. அதன் பிறகு எலி வந்ததற்கான அடையாளங்களைம் எச்சங்களைம் காணோம்.

# மீண்டும் புது எலி எப்பொழுது வருமோ? 

என்ன தந்திரங்கள் செய்யுமோ?

Sunday, June 26, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

மலரதின் மணம்
மனத்தில் துலங்க,
அறிவின் பசியது
செயலில் மிளிர,
நலனோடு மகிழ்வாய்
வளர்கவே நாளும்.
ஆசிகள் பகர்ந்தோம்
அன்புடன் உமக்கு.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள் சஞ்ஜனா. 💐💐🙌🙌🙌

Saturday, June 25, 2016

Sunday, June 12, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

குயில்களுக்கு கொண்டாட்டம் 
தன் உறவுக்கு இன்று பிறந்தநாள்.
பாடி கழித்தது எல்லாமும் 
இரவு பகல் நினைவின்றி.
வாழ்க்கை முழுதும் மகிழ்வாக
வாழ்ந்திட வேண்டியது ஒன்றிணைந்து.
நானும் இணைந்தேன் அவையுடனே
அன்பான நட்பை வாழ்த்திடவே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவிக்குயிலே. 💐🎉⚡️🎤👍🙌

Friday, June 10, 2016

முதல் காதல்


பார்த்திருந்தேன்
சன்னல் வழியே வானத்தையே.
அகல நினைத்து
கை வைத்தேன் கதவிடையே.
கண் கூசும் மின்னலடிக்க
தவித்து நின்றேன்.
எதிர் வீட்டு சன்னலிலே
முழு நிலா முகங்கண்டு.
கண்ட நிலா…
எனை நோக்கி முகம் பூக்க,
மயக்கத்தில் நானோ
கையசைக்க,
கை நிறைந்த முத்தத்தை
காற்றலையில் பறக்க விட்டாள்
எனை நோக்கி.
சிந்தாமல் சிதறாமல்
பிடித்து விட்டேன்,
காற்றலையில்
வந்தடைந்த முத்தத்தையே.
வீட்டிடை இடைவெளியோ
நீண்டிருக்க,
கண் வழியே முகம் பூக்க,
கையசைத்துப் பேசிக்கொண்டோம்
வாய் பேச வழியின்றி.


என் முன்னே நடைப்பயின்றாள்
அண்ணக்கொடி.
எதிர்நோக்க நிலையினிலே
நேரெதிரேப் பார்த்துக்கொண்டோம்.
கண்டவுடன் நானும்
அவளை புரிந்துக் கொள்ள,
பார்த்த அவளும்
என் முகத்தை நினைவிற் கொண்டாள்.
ரோசாவாய் பூத்த முகம்
அடுத்த நொடி கருகி விட,
இடம் விட்டு விரைந்து விட்டாள்
தலை குனிந்து.
பொருளறியா நான்(னோ)
வருத்தம் கொள்ள,
தஞ்சமடைந்தேன் சன்னலிடை
அவளைக் காண.
நொடிகளோ கரைந்தது நாட்களாக,
மீண்டும் காணவில்லை
சன்னலிடையே
அந்த நிலா.

என் நிலையை,
சோதனை செய்துக் கொண்டேன்.
நினைக்காத நிலையொன்றை
அறிந்துக் கொண்டேன்.
பார்த்திருந்தோம், மகிழ்ந்திருந்தோம்
சன்னல் வழியே.
இத்தனை நாள், என் ஊனம்
அவளறிய வாய்ப்பில்லை.
என் உடல் ஊனம் கண்ட அவள்,
தன் காதலை(யே) களைத்துக் கொண்டாள்.
கண் கண்ட காதலோ…
கருகி விட்டது,
ஒரு சொல் பேசாமல்.







Friday, June 3, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

உறவுகள் பலமாக,
மகிழ்வு இணைந்தாட,
வாழ்க்கை சுகமாக,
என்றுமை நீராட்ட,
வாழ்த்தினோம் அன்பாக.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள் பேத்தி.  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

ஆனந்த்’தத்’ திருஉருவே – என்றும்
ஆனந்தமாய் நீரிருக்க,
அன்னையவர் ஆசீர்
அடையாய் உமைக் காக்க.,
அன்புத்திருக்கோவில் உம் குடும்பம்
அணைத்துமை பாசமுடன் கொஞ்ச,
அன்றாடம் இயங்கட்டும் வாழ்வு
வளத்தோடு நலமுடன்.
புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு
ஆனந்த் அல்லுடுகாரு.

சான சந்தோசமுக,
மாமியா (அப்பா)
அத்தம்மா (அம்மா)
2016