Translate

Showing posts with label ஒரு நிமிடம். Show all posts
Showing posts with label ஒரு நிமிடம். Show all posts

Sunday, August 23, 2015

ஒரு நிமிடம்


சிறு உரையாடல் – எமக்கும் மருத்துவருக்கும்.

நான்: டாக்டர், ஒரு சிரஞ்சு, ஊசி கொடுங்க.
டாக்டர்: இங்க விற்பதில்லை. மருந்து கடையிக்கு போங்க.
நான்: பழைய சிரஞ்சு, ஊசியே போதும்.
டாக்டர்: அதிலே திருப்பி ஊசி போடக்கூடாது. வியாதி வரும்.
நான்: பரவாயில்லை, அதையே கொடுங்க.
டாக்டர்: யாருக்காக ஊசி?
நான்: எறும்புக்கு
டாக்டர்: எறும்புக்கா!!!
நான்: ஆமாம் டாக்டர். அதுக்குகூட வியாதி வருமா?
      அது நம்மல கடிச்சா வியாதி தொத்துமா?
டாக்டர்: !!!!
        சரி எறும்புக்கு எப்படி ஊசி போடுவிங்க?
நான்: ஏறும்புக்கு இல்லைங்க, எறும்பு புத்துக்கு.
டாக்டர்:  என்ன எறும்பு புத்துக்கா!!!! என்ன மருந்து?
நான்: ஆமாம் டாக்டர். பூச்சி மருந்து, மண்ணெண்ணெய் / சிமை எண்ணெய் / கிருஷ்ணாயில்னு சொல்றாங்களே அந்த கேரோசினையும் சிரஞ்ச்லே எடுத்து செவுறு, தரையில எறும்புங்க போட்டிருக்கிற ஒட்டைகளிலே, நமக்கு போடற மாதிரி ஊசி உள்ளே உட்டு ஸ்ப்ரே பண்ணா, எறும்புகள் பணால்.
இதுக்கூட உங்களுக்கு தெரியலையே டாக்டர்
டாக்டர்:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்னை ஒரு மாதிரி பார்த்தபடியே மேசை மேல்
தலை கவிழ்த்தார். இரண்டு நிமிடம் கழிச்சு டாக்டர்னு கூப்பிட்டேன். அவரண்ட பதிலில்லை. தொட்டு எழுப்பினேன். அப்போதுதான் தெரிந்தது, அவர் பிளாட் ஆகிவிட்டாருனு. உடனே தண்ணி எடுத்து தெளிச்சென். அலுங்க மழுங்க கண்களை இங்கு அங்கு சுத்தி பார்த்தபடி எழ பார்த்தார்.

இதுக்குமேலே அங்கு இருக்கபடாதுனு விட்டேன் ஜூட்.