Translate

Thursday, June 28, 2018

இலை உதிரும் இயற்கை






🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஆரம்பத்தையும் முடிவையும் யாரறிவார்.
இயற்கையே இயற்கையை தானறியுமோ?
இயற்கை உதிர்க்கும் இலைகளெனில்
இவ்வுலக பிறவிகள் அனைத்தும் தான்.
உதிரும் காலங்களில் தானாக,
உதிருமே அதுவும் தனியாக.
காலமிட்ட கட்டளையை
கடப்பது இலகுவாகுமோ?

ஆனாலும் பிறவி ஒன்றாய் மனிதரிருக்க,
தெரிந்தும் அழிக்கிறானே இயற்கையை தான்.
மரமொன்றை அழிக்கையிலே
மாய்கிறதே இலைகளும் அத்துடன் தான்.
தன் சுவாசத்தை தானாக நிறுத்துகிறானே
மரங்களை ஒவ்வொன்றாய் வெட்டிதானே.

திட்டமிட்டு அவன் வாழாமல்
தன் திடத்தையும் தானாய் ஒழிக்கிறானே.
குறுகும் வம்சங்களின் நிலையுணர்ந்து
இலைகளை உதிர்க்காமல் காப்பானோ.
பருவ நிலைகளின் மாற்றங்களால்
முதிர்ந்த இலைகள் தானாக
உதிர்ந்து விழுமே தனியாக.

காக்க வேண்டும்
என்றும் இயற்கையை தான்.
அதை உணர்ந்து நடக்க வேண்டும்
மனிதரும் தான்.

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.