Translate

Showing posts with label நெருப்பிற்கே ஆடையாய். Show all posts
Showing posts with label நெருப்பிற்கே ஆடையாய். Show all posts

Tuesday, September 24, 2013

நெருப்பிற்கே ஆடையாய்


தீயின் தாகமோ
கொழுந்து விட்டு எரிய,
அலறினார் அம்மணி
அதிர்சியில் உறைந்து.

எரிவாயு தாக்கமோ
பாரென சொல்ல,
போர்களமானது
சமையலறை நொடியில்.

எண்ணத் தீர்வுகளோ
சிக்கலாய் இருக்க,
கருத்த மேகமாய்
புகையோ சூழ,

நினைவுகளிலிருந்து
பிரிந்து வந்தது,
ஒளியின் கீற்றாய்
உதயமானது
மனத்திலொன்று

நீர்த்துளிகள் சொட்ட,
தலையை மூழ்கி
ஈரமுடன் வந்தது
நெருப்பை தழுவ.

சூவாலையின் வேகத்தை
சுத்தமாய் நிறுத்த,
நெருப்பிற்கே ஆடையாய்
விரைந்து வந்தது சணல் சாக்கு.