Translate

Friday, March 11, 2011

ஒவ்வொரு துகளிலும்

சொல்லொன்று உண்டு

தாயே சிறந்த கோவிலென்று

புரிந்துக் கொள்ள வேண்டும்

அ(த்)தை உமைக் கண்டு.

ஒவ்வொரு கணமும்

எங்கள் நினைவிலே

உங்கள் அயராத உழைப்பும்

கள்ளமில்லா பாசமும்.

ஓயாமல் உழைத்தாலும்

கடனென நினைக்கவில்லை

உடலது சோர்ந்தாலும்

உள்ளமது சோரவில்லை.

கழிகிறது வாழ்க்கைப் பக்கம்

நலிகிறது உடலோருப் பக்கம்

ஆனால், கலங்கவில்லை நீங்கள்

மன உறுதியில் மட்டும்.

ஓய்வு எடுக்குமாம் ராணித்தேனீ

வேலை செய்யுமாம் வேலைக்காரத் தேனீ

ஆனாலோ, ஓய்வின்றி பணிபுரிகின்றீர்

ராணியாய் இருந்தும்.

கையில் கிடைத்த போது

உறுதியில்லா அஸ்திவாரம்

பலப்படுத்தி மாளிகையாய்

பார்க்கின்றீர் வெற்றியுடன்.

மாளிகையின் ஒவ்வொரு துகளிலும்

உங்கள் உழைப்பின்

வேர்வைத் துளிகள்.

வியந்துக் கொண்டு இருக்கிறோம்

அதைக் கண்டு நாங்கள்.

நீங்கள் - கீழே இருந்துக் கொண்டு

ஏற்றி விட்டீர் மேலே.

காலத்தின் முடிவு வரை

முடிவுக்கோ எல்லையின்றி

உடலிலே நோயின்றி

மனத்திலே கலக்கமின்றி

மகிழ்வாக நலமாக

தாங்கள் வாழ வேண்டும்

என்பதே எங்கள் அவா.

இது உங்களுக்காக

இறைவனிடம்

எங்கள் பிரார்த்தனை.

பின் குறிப்பு:-

தாயைப் போன்ற எமது மாமியாரின் 80 வது பிறந்தநாளுக்காக சிறிய சமர்ப்பணம்.

சுமார் 5 வருடங்களுக்கு முன்.



http://www.facebook.com/note.php?note_id=153070741417932&comments

  • நேசித்து பகிர்ந்துக் கொண்டவர்கள்:-
    • Sathiabama Sandaran Satia கழிகிறது வாழ்க்கைப் பக்கம் நலிகிறது உடலோருப் பக்கம்
      ஆனால், கலங்கவில்லை நீங்கள் மன உறுதியில் மட்டும்.// aha.. aha... enna varigal badri sir!! asattal pongga..!!!
      February 18 at 4:54pm · · 2 people
    • Sathiabama Sandaran Satia arumaiyana anbu kaaviyam endruthan sollanum sir... please keep on writing... !
      February 18 at 4:54pm · · 2 people
    • Vishnu Rajan அருமை நண்பரே ..அழகான வாழ்த்தும் பாராட்டும் கூடிய கவிதை மிக நன்று ..
      அருமை அருமை ..:)
      February 18 at 4:57pm · · 2 people
    • Sankara Subra Manian அருமை நண்பரே
      February 18 at 5:13pm · · 1 person
    • Gee Shankar அருமை , மன நிறைவுடன் கூடிய கவிதை ,
      February 18 at 5:17pm · · 1 person
    • Shanmuga Murthy தங்களின் மாமியார் அவர்களின் பணி எத்துனை சிறப்புடையதாக இருந்திருந்தால்.இத்தகைய ஒரு
      வெளிப்பாடு தங்கள் உள்ளத்திலிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை உணர முடிகிறது...
      கொடுத்துவைத்தவர்.
      நீங்களும் உங்கள் அத்தையும்.
      February 18 at 8:05pm · · 1 person
    • Sakthi Sakthithasan அன்பின் நண்பரே,
      அருமையான் பிறந்தநாள் கவிதை. பெற்ற தாயையே கவனிக்க நேரமில்லாமல் ஓடும் இந்த உலகில் உங்கள் மாமியாருக்காக நீங்கள் வடித்த இந்தக் கவிதை அற்புதம்.
      அன்புடன்
      சக்தி
      February 19 at 9:02pm · · 1 person
    • Oswin Stanley அருமை, God Bless
      February 21 at 7:55pm · · 1 person




      நேசித்தவர்கள்:-


Friday, March 4, 2011

கரைக்காணா கேள்விகள்....



நட்பிலே தொடங்கியது
கனவிலே வந்ததேன்?

கனவிலே வந்ததால்
கற்பனையில் மிதந்ததேன்?

கற்பனையில் நினைத்தது
காதலாய் ஆனதேன்?

காதலாய் தொடர்ந்தது
கலவிலே முடிந்ததேன்?

கலவிலே முடிந்ததும்
கருவாய் உதித்ததேன்?

கருவென்று அறிந்ததும்
காற்றாய் அவன் பறந்ததேன்?

காற்றாய் அவன் மறைந்ததும்
கன்னியவள் அழுத்தேன்?

கன்னியவள் அழுத்தும்
கணவனாய் (கள்வனவன்) வருவானா?

கணவனாய் (கள்வனவன்) வந்ததும்
கற்பு அது மீண்டதா?

கற்பு என நினைத்ததும்
கட்டவிழ்த்து கொண்டதோ?

கட்டவிழ்த்துக் கொண்டதும்
கடமையது முடிந்ததோ?

கடமையென நினைத்ததும்
கடலலைகளாய் வந்ததோ?

கடலலைகளாய் வந்ததும்
கவிதையாய் பிறந்ததோ?

கவிதையாய் பிறந்ததும்
நட்பதும் முறிந்ததோ?


முகநூலில் (Face Book in My note) கருத்து பதித்தவர்கள்:-
  • M Venkatesan MscMphil கற்பனையில் நினைத்தது

    காதலாய் ஆனதேன்?
    March 5 at 5:08pm · · 2 people
  • Sylvia Velanganni Arumayaana padaippu DP Sir....

    நட்பிலே தொடங்கியது
    கனவிலே வந்ததேன்?
    March 5 at 7:20pm · · 2 people
  • Shanmuga Murthy
    தவறில்லை
    நட்பு காதலானது.
    தவறில்லை
    காதல் உருவானது
    உருவான கருதான்
    ...See More
    March 5 at 8:38pm · · 4 people
  • Sadeek Ali Abdullah சண்முகம் அண்ணா சொன்னதை வழிமொழிகிறேன்..
    கல்யாணத்துக்கு முன்னால் காதலென்றாலே அதில் கலவியை பெரும்பாலும் தவிர்க்கமுடிவதில்லை... உன்னதமான் காதலெல்லாம் குறைந்து விட்டது. இது டேட்டிங் யுகம்.... இதில் கருவை நினைத்து கவலைப்பட யாரும் தயாராயில்லை...
    March 5 at 8:53pm · · 2 people
  • Vishnu Rajan என் மாம்ஸ்க்கு கவிதை அருமை நண்பரே !!!
    March 5 at 9:07pm · · 2 people
  • Sathiabama Sandaran Satia அழகான படம்! அருமையான வரிகள் சார்...
    March 7 at 3:47pm · · 1 person
  • Dhavappudhalvan Badrinarayanan A M உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. இரவு வணக்கம் நண்பர்களே.
    March 7 at 10:19pm · · 1 person
  • Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
    கவிதை நன்றாக இருக்கிறது.
    அன்புடன்
    சக்தி
    Tuesday at 7:59am ·


    இக்கவிதையை விரும்பியவர்கள்:-