Translate

Showing posts with label உறுதியாய். Show all posts
Showing posts with label உறுதியாய். Show all posts

Tuesday, October 17, 2017

உறுதியாய்




உடலழகை பார்த்த நீ
உள்ளத்தை மறந்து விட்டாய்
உன்னையவள் மணந்த பின்னே
உடலழகு குலைந்திருந்தால்
உரியவளென காப்பாயோ?
உதறி விட்டு செல்வாயோ?
உண்மையாய் நீயுமதை
உரைத்திடு மூடனே.

உனையீன்றவளும் பெண்தானே?
உடன் பிறந்தவளும் பெண்தானே?
உன்னைப்போல் வேறொருவன்
ஊற்றியிருந்தால் ஏற்பாயா?

உலகமது உருண்டையடா
ஊனம் உனக்கு நெருக்கமடா.
உணராத நீ பேடியடா.
உணரும் போது நீ கோழையடா.

ஊருக்குள் வாழும் கயவனடா.
உணர்வுகளால் நீ மிருகமடா.

ஊர் பொதுவிடத்தில் கூட்டி வைத்து
உன்னுறுப்பு அகற்றிருந்தால்
உணர்ந்திடுவாய் நீயுமதை.
உன் கொடுமையின் உச்சத்தை.

ஊரே அதிர்ந்தாலும், 
ஊளையிடுவோர் இருந்தாலும்
ஊறுதனை விளைத்திட
உள்ளடங்கி மறந்திடுமே \ போயிடுமே

உற்றுநோக்கி பார்க்கையிலே
உறுத்தலாய் இருந்தாலும்
உண்மையில் ஓட வைக்கும்
உன்னைப்போல பிறவிகளை.

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.