Translate

Showing posts with label அலைப்பாயும் எண்ணங்கள். Show all posts
Showing posts with label அலைப்பாயும் எண்ணங்கள். Show all posts

Wednesday, April 11, 2018

அலைப்பாயும் எண்ணங்கள்.


ஆழ்மனத்தின் ஆசைகள்
அளவின்றி இருக்குதைய்யா.
அவனுடன் இணைந்துக் கொண்டு
ஆடிப்பாடத் தோனுதைய்யா.

அல்லும் பகலும் கணக்கின்றி, எண்ணம்
அவன் நினைவில் சுற்றுதைய்யா. என்
அழகு முகம் காண்கையிலே
அவனுருவை காட்டுதைய்யா. விழி
அகற்றி பார்க்கையிலே
அவனின்றி மனம் ஏங்குதைய்யா.
அவனைச் சுற்றும் நினைவாலே
அனைத்தும் பாதியில் நிற்குதைய்யா.

அழகான அவன் சிரிப்பில், மனம்
ஆழ்ந்து போய் திணறுதைய்யா.
அள்ளி நான் சொருகும் போது
அந்த மயக்கமது பொங்குதைய்யா.

அம்மாவாய் நானானேன்
அவனுடனான உறவாலே,
அவன் இங்கில்லா சமயத்திலே
அர்த்தமில்லா காலமாய் தெரியுதைய்யா.

அசதியாய் வீட்டிற்கு வரும் நேரத்திலே
ஆவலாய் ஓடிச் சென்று
அன்பாய் தலை கோதி
அணைத்துக் கொள்ள சொல்லுதைய்யா.


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏