Translate

Showing posts with label சொக்கியிருக்கும் காதல் புறா. Show all posts
Showing posts with label சொக்கியிருக்கும் காதல் புறா. Show all posts

Thursday, December 28, 2017

சொக்கியிருக்கும் காதல் புறா


இணைகளுக்கோர் அடையாளம்
காதலில் இதொரு பூபாளம்
மேயும் கள்வருக்கிது கடிவாளம்.
கற்பிற்க்கிது உவமானம்.

கடல் கடந்து விட்டாலும்
இணைத்தேடி வந்து விடும்.
இணையொன்று மரித்தாலோ
உடனிணைந்து உயிர் துறக்கும்.

பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்.
இதன் உறவை அறிந்தும்
பாழும் மனிதனிவன்
அதை மட்டும் மறந்தான்.

காதலோ
சில சமயம் பொதுவிடத்தில்.
கூடல் மட்டும்
என்றும் மறைவிடத்தில்.

கற்றுக் கொள்ள
எத்தனையோ அதுவிடத்தில்,
கற்றுக் கொண்டோம்
கழுகுகளாய் மாறி நாம் கொன்று புசித்தோம். 🦅🦅🦅

கூட்டிலே அடைத்து நாம் வைத்திருந்தோம்.
கூடலுக்கு தனியிடம் தர மறந்தோம்.
கூட்டமாய் பறந்தது மகிழ்ந்திருக்க
சிறகொடித்து கூண்டிலடைத்து மகிழ்ந்திருந்தோம்.

காதலில் கசிந்துருகி
விழி மூடி மயங்கியிருக்க,
காமத்தீ பற்றியெரிய
மறைப்பின்றி தவித்திருக்க,

மறைப்பிட துடிக்கிறது எம்மனது.
ஆனால்
சலனத்தில் களைந்திடுமே
அதன் நிலையிங்கு.

செழித்த இடத்தில் உள்ளழகு
துளிரில்லா கிளையிலே எங்கிருக்கு?
துண்டாடும் மனிதருக்கு செல்லுமோ
விழி வழியே மனதிற்கு?

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏