Translate

Showing posts with label சரியான நேரமிது!. Show all posts
Showing posts with label சரியான நேரமிது!. Show all posts

Tuesday, August 5, 2014

சரியான நேரமிது!



நான் செல்லும் பாதையெல்லாம் 
தொடரும் விழியை நானறிவேன்.
வாய் திறவா உன் நிலையாலே 
மௌனமாய் செல்கின்றேன்.

மேய்ந்திட பார்க்கிறாயோ 
வேலியற்ற பயிரென.
சந்தைப்பொருளாய் நினைத்தாயோ 
விற்பனையில் பெற்று விட.   

காலிலே மெட்டியிட்டு 
காட்டிட வழியுமில்லை.- நெற்றிப் 
பொட்டிடவும் முடியவில்லை 
சாதியெனும் சட்டத்தால்.

புது வாழ்வு உனக்கென 
வகுத்துக் கொண்டு, 
குடும்ப வாழ்வில் மகிழ்வாக 
நீயுயர்ந்து வாழ்ந்திடவும்   
செல்லரித்த மனமுடனே 
செல்லாக்காசாய் ஆகுமுன்னே,

அறியா உன் மனமும் 
அறியட்டும் இதைப் படித்து.
பாசமுடன் நினைக்கின்றேன் 
உடன்பிறவா நிலையிருந்தும்/.