Translate

Showing posts with label இரு பொருள் கவிதைகள். Show all posts
Showing posts with label இரு பொருள் கவிதைகள். Show all posts

Tuesday, December 5, 2017

புது பாடம் - 17 - இரு பொருள் கவிதைகள்


கத்திரிக்க நீ
காயாய் நான்
கத்திரிக்கோல் - கத்திரிக்காய்-

பாதையில் தள்ளி விடும்
ஆட்டத்தில் வீழ்த்தி விடும்.
குழி – பல்லாங்குழி

நடப்பதற்கு இது
பாய்வதற்கு அது
கால் – கால்வாய்

அறிவதற்கோர் குறி
பயணத்திற்கோர் குறி
மொழி – வழி

விரைவாய் நீ
செயலாய் நான்
வேகம் – விவேகம்


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

புது பாடம் - 16 - இரு பொருள் கவிதைகள்


பாதி விழிப்பு
பாதி உறக்கம்
இயக்கம் - மயக்கம்

அனுபவத்தால் நீ
அனுபவத்தில் நான்
மலை - மடு

அணைத்தாய் நீ
அணைப்பில் நான்
காமம் - தாகம்

அழகிய உருவில் நீ
பெரிய உருவில் நான்
சிலை – மலை

உடைப்படுவதற்கு அது
உரைப்பதற்கு இது
கல் – சாணைக்கல்




-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Saturday, November 25, 2017

புது பாடம் - 15 - இரு பொருள் கவிதைகள்



அணைத்தாய் நீ
அணைந்தேன் நான்
நீர் - நெருப்பு

அணைத்தாய் நீ
அணைந்தேன் நான்
மழை - வெப்பம்

அணைத்தாய் நீ
கொதித்தேன் நான்
நெருப்பு - நீர்

அணைத்தாய் நீ
உருகினேன் நான்
தீ - மெழுகு

அணைத்தாய் நீ
எரிந்தேன் நான்
தீ - விறகு


--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

Tuesday, November 21, 2017

புது பாடம் - 14- இரு பொருள் கவிதைகள்


அதிலொரு சுவை
இதிலொரு சுவை
ஆட்டம் - பாட்டம்

ஆடு மாடு அதில்
நீர் சேமிக்க இதில்
பட்டி - தொட்டி

உருவத்தில் அவன்
உள்ளத்தில் இவன்
கனவான் - கயவன்

உணராமல் போனான்
உணர்ந்து நடித்தான்
ஏமாளி - கோமாளி

வில்லம்பில் தேர்ந்தோர் சிலர்
சொல்லம்பால் குதறுவோர் பலர்
குறி - வெறி


--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏