Translate

Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Thursday, November 26, 2015

பணியிட மாறுதலுக்கு – வாழ்த்துக்கள்.




ஏதேதோ நினைவுகள்
எங்கெங்கோ சிதற,
ஏற்றம் கொண்ட உம் வாழ்வை
மறந்தோம் யாம் வாழ்த்த.

கொண்ட தொழிலில்
திறமையால் உயர்ந்து,
சிறப்புடன் வாழ
மகிழ்வுடன் வாழ்த்தினோம்.

நல்லாசிகள் சுபகர்.

வாழ்க! வளர்க!!

1/6/15

புது கடைக்கு வாழ்த்து.

  
ரகுநாத் & சுதா ரகுநாத், புது கடைக்கு வாழ்த்து.

புதிய பாதைப் போட்டு,
பயணம் தொடர்ந்து விட்டீர்.
பாதை விரிவடைந்து
பயணம் சிறந்திடவும்,
பகலவன் ஒளி போல
பரவலாய் விரிந்திடவும்,
பரந்தாமன் அடியொற்றி
பரவசத்தில் வாழ்த்தினோம்.


வாழ்க! வாழ்க!! வளர்கவே!!!

30/05/15

Friday, September 11, 2015

வாழ்த்துக்கள் - 04/09/2013





ஊதும் குழலோ,


கோலாட்ட நிலையோ?


அழகான கோலம்.


குறும்புகளின் காலம்.


வாழ்விலே சிறக்க,


வாழ்த்துக்கள் யாவும்


உம் வாண்டுகளுக்கு.



https://www.facebook.com/photo.php?fbid=10201243559905571&set=a.10200163753151077.1073741826.1068747424&type=1&theater&notif_t=photo_reply

Kavi Priya

Saturday, November 22, 2014

இனிய நல்வாழ்த்துக்கள் - ஸ்வேதா




விழி வழிக் கண்டு
செவி வழிக் கேட்டேன்.
வழிந்த சொற்களால்
நிறைந்தது நெஞ்சு.

பணிகளில் நிறைவாய்,
பக்குவம் அடைய,
நிறைந்த வாழ்த்து
மகிழ்வுடன் உனக்கு .

இனிய நல்வாழ்த்துக்கள் ஸ்வேதா .  

Monday, October 27, 2014

வாழ்த்துக்கள் - இராஜ. தியாகராஜன்





பாவலர். இராஜ. தியாகராஜன்

வண்டமிழ் பாவலரோ
பரவசமாய் பார்த்திருக்க,
புன்னகையோ அகத்தினிலும்
மலராய்  பூத்திருக்க,
படம் பிடித்ததையா
பளிரென ஒளிவீசி.

இனிய நாள் வணக்கம் பாவலரே..

https://www.facebook.com/photo.php?fbid=993755720640370&set=a.158691114146839.38380.100000178538631&type=1&theater


பாவலர். இராஜ. தியாகராஜன்
அவர்களின் விளக்கம்

கவிஞர்Dhavappudhalvan Badrinarayanan A M மிக்க நன்றி உங்கள் இனிய 

கவியுரைக்கு.


மிளிர்ந்திடும் கணித்திரை விழியத்தைக் காண்கையிலே,

பளிச்சென்றே செல்வனவன் படுசோராய் சொடுக்குகையில்


வெளிப்பட்ட மகிழ்வென்னும் விந்தையென, கரைகாணாக்


களிபொங்கும் நிகழ்வெனவே கணப்போது படமிதுவே:



எமது பதில் நன்றி:

ஆஹா...
சொக்க வைக்கிறது உமது நடை.
சொல்லறியா எமக்கது முடை.
பண்டமிழோ பாவலருக்கு உடை
நடைபோடுமே என்றுமது  படை.


மிக்க மகிழ்ச்சி பாவலரே.
தமிழன்னை பால் புகட்டியமைக்கு.

Tuesday, October 7, 2014

வாழ்த்துக்கள்




கலைகளது உன் கைவண்ணத்தில்
காட்டுமது புது வண்ணத்தில்.
கட்டடத்தின் உள்ளலங்காரங்கள்
காட்சியாய் கடை  விரிக்குமேயினி.

வாழ்த்துக்கள் சுரேகா
வழங்கினோம் இன்று உமக்கு.

Saturday, September 20, 2014

சும்மாயில்லை நிசம் - குறுங்கவிதை



சுவையின்றி போகுமோ?
சுவைத்திட உன் குரலும்.
சுகமான ராகமாய்
சுழல்கிறதே எம் செவிதனிலே.
சூப்பரான விடுமுறை நாளாக அமைய வாழ்த்துக்கள் நட்புகளே.



Tuesday, September 16, 2014

வாழ்த்துக்கள்



ஆஹா! மிளிர்கிறது
அழகாய் மயில்.
ஆனந்தமாய் இருக்கிறது
அற்புதமான உன் கை வண்ணம்
ஆக்கங்கள் உன் கையால்
அதிவிரைவாய் வளரட்டும்.
வாழ்த்துக்கள் ஶ்ரீ வாசவி பிரியா.

Friday, August 22, 2014

ஹர்ஷினி & தக்ஷிதாவுக்கு வாழ்த்துக்கள்

பள்ளி விழாவில் பாரத நாட்டியம் ஆடிய, பரணிதரன் - சங்கீதா குழந்தைகள் (எங்கள் பேத்திகள்) ஹர்ஷினி & தக்ஷிதாவுக்கு வாழ்த்துக்கள்.

சலங்கைகள் சலசலக்க,
ஜாதிகளோ சரசமாட,
ஆலாபனையோ இணையூட,,
அரங்கமே ஆழந்திருக்க,
மெருகேறிய பாவனைகளுடன்,
சுழலட்டும் கால்கள் சக்கரமாய்.
சகலமும் பயின்று நீங்கள்  
வல்லமையுடன் திகழ,
சாஸ்திரங்கள் அங்கு 
சந்தோசமாய் தலையசைக்க,
சர்வகாலமும் நிலைக்கும்படி,
சாகசங்களாய் பதியட்டும்.

ஆசிர்வாதங்கள்  ஹர்ஷினி & தக்ஷிதா

Wednesday, August 13, 2014

நாள் முழுதும் - குறுங்கவிதை





உமை தீண்ட வேண்டும் 
மௌனமாய் என் வார்த்தைகள்.
மகிழ்விலே திளைக்க வேண்டும்.

இனிய நாள் வாழ்த்துக்கள்  

Sunday, August 10, 2014

வாழ்த்துக்கள்


எழுதாத எழுத்துண்டோ?
உரைக்காத சொல்லுண்டோ?
ஞாயிறு உதித்த ஞாலத்திலே 
விரைந்து வந்தேன் 
ஒரு வேகத்திலே.

எதற்குங்க?
வாழ்த்துக்கள் சொல்லத்தான்.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள். 

Wednesday, July 30, 2014

வாழ்த்துக்கள் - E Muthezhilan Peter அவர்களின் பேரனுக்கு.

Frined of VG Santhosam 
https://www.facebook.com/photo.php?fbid=774384329279475&set=a.123476744370240.21549.100001237448465&type=1&theater

E Muthezhilan Peter வாழ்த்துக்கள் . அண்ணாச்சி அவர்களுக்கு என் பேரன் நாளை மறுநாள் சீனாவில் நடைபெறும் உலக ரோபோடிக் (14வது) போட்டியில் கலந்து கொள்ள கோதே பசிபிக் விமானத்தில் பயணிக்கிறான் அவனை வாழ்த்துங்களேன். ..................................... ... ............................................... ..................................................................




///தமிழனின் புகழ் 
தரணியெல்லாம் ஒலிக்கட்டும் 
தங்கள் தங்க பேரனும் 
தங்கமது வெல்லட்டும்.

ஆவலோடு நீரிருக்க, 
ஆண்டவரின் அருளினால் 
அளவிலா புகழோடு 
ஆனந்தமாய் திரும்பட்டும்.

தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள் உரியதாக்குக நண்பரே.///.

Monday, June 2, 2014

வாழ்த்துக்கள் - Narayyanan Sb




Narayyanan Sb
2014 Apr 27

சுவைக் குன்றா பொருளோடு, 
வளரும் வாடிக்கையோடு, 
நலமோடு வாழ்கவே.

Friday, February 28, 2014

வாழ்த்துக்கள் - Shakthi Vel மகள் காவ்யா தேர்வில் வெற்றி பெற.



Shakthi Vel மகள் காவ்யா 
                 

எண்ணமெல்லாம் ஏட்டிலிருக்க,
எழுத்தெல்லாம் தாளிளிருக்க,
விடைகளெல்லாம் தெளிவாயிருக்க,
வீறுகொண்ட நடையாலே,
வெற்றி உமை வந்தணைக்க,
கல்விமகள் அருளாலே,
சிறப்பிடம் நீ பிடிக்க,
உடனினைந்தே பிரார்த்தித்தோம்.

வாழ்த்துக்கள் காவ்யா சிறப்பாய் தேர்வெழுத.



Sunday, February 7, 2010

கலைஞர் TV யில் நடனமேதை கலாவின் மானாட மயிலாட(4) நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் - 2010.


ஞாயிறாய் பிறந்த அன்று

சூரியனும் மறைந்த பின்னே

மீண்டும் அது ஒளிருது

கலைஞரின் டிவியிலே

மானாடும் மயிலாடும் தொடராக

ஆட்டமும் பாட்டமும்

அற்புதமாய் இருக்குது.

நினைவுகளில் நிறைந்திருந்து

நித்தமும் இனிக்குது.

நடனமேதை கலாவுடன்

மற்றும் இருவர் கூடியே

நடுவராய் முன்னிருந்து,

மானுடன் மயிலுமே

நாட்டியமும் ஆடுது,

நாடகமும் நடத்துது.

வித்தையும் காட்டுது,

விதவிதமாய் இருக்குது.

குலுங்கி குலுங்கி சிரிக்கவே

நிகழ்ச்சிகளும் நிகழுது.

ஒன்று இரண்டு மூன்று என

விரைந்துதான் போனது.

பகுதி நாலு நேற்று தான்

துவங்கியது போல இருக்குது.

வித்தியாச போட்டியால்

விதவிதமாய் ஆட்டங்கள்.

விறுவிறுப்பாய் இருப்பதால்

விரும்பியே பார்க்கிறோம்.

புதிது புதிதாய் கற்றுக் கொள்ள,

போட்டியிலே நடுவரும்,

கருத்துகளை பங்கு வைத்து,

காட்சிகளை பிரித்துப் போட்டு,

எடுத்து சொல்லும் விதத்தாலே,

போட்டியின் சாதனையில்

எங்களதும் சளைத்ததில்லையெ

தீர்ப்பிலே காட்டியே,

நிகழ்ச்சியை நிறைவு செய்ய,

எங்களின் மனங்களும்

நிகழ்வுகளில் இணையுது.

உங்களின் திறமையுடன்,

எங்களின் மனங்களும்

இயந்து இசைந்து ஆடவே,

இன்று போல் என்றுமே,

இனிக்கின்ற நாட்களாய்,

இனிதாய் நிகழ்ச்சிகள் தொடரவே,

இயம்புகின்றோம் வாழ்த்துகளை

வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!

-தவப்புதல்வன்.

தொடர்புக்கு:

A.M.பத்ரி நாராயணன்.

Mb:99414 76945

Mail Id: dhava.ambi@gmail.com

ambadri_57@yahoo.com

Blogs:- http://aambalmalar.blogspot.com

http://aasaidhaan.blogspot.com