Translate

Sunday, August 10, 2014

வாழ்த்துக்கள்


எழுதாத எழுத்துண்டோ?
உரைக்காத சொல்லுண்டோ?
ஞாயிறு உதித்த ஞாலத்திலே 
விரைந்து வந்தேன் 
ஒரு வேகத்திலே.

எதற்குங்க?
வாழ்த்துக்கள் சொல்லத்தான்.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள். 

1 comment:

Dhavappudhalvan said...

இதற்கான முக்கிய கருத்துக்களும், அதற்குரிய நன்றிகளும்.

Sankar Mani Iyer:- உயர்ந்த எண்ணங்களால் இனிய சொற்களால் சிறந்த செயல்களால் என்னாளையும் இனிய நாளாக்குவோம். வணக்கங்களுடன் வாழ்த்துக்கள். இன்று நிலவுப் பெண்ணின் நாளன்றோ? இன்னமும் தங்களுக்கு ஞாயிறுதானோ?

Dhavappudhalvan Badrinarayanan A M :-தங்களுக்கு திங்கள் ( ஞாயிறு - சூரியன் ) உதித்த வேளையிலே. ஹா... எப்படி (எப்புடி ..) சமாளித்து விட்டேன் பார்த்திர்களா? ஹா.. ஹா... அஹா...@

Sudhakar Veerabadran:- அருமையானவ வரிகளுடன் அன்பான வணக்கம் கூறிய அருமை சகோ அவர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்..

கவியே... \\ஞாயிறு உதித்த ஞாலத்திலே\\ என்பது சூரியன் உதித்த என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?

Dhavappudhalvan Badrinarayanan A M:- ஆமாம் நண்பரே. அதைத்தான் நண்பர் Sankar Mani Iyer ரின் கருத்துக்கு விடையளித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும். Sudhakar Veerabadran

Aiyer Varada Rajan:-
எழுதாத எழுத்துண்டு இதயத்திலே
சொல்லாத சொல்லுண்டு கண்களிலே
ஆயின் வாழ்த்த விரையும் நட்பு தவமின்றி
இங்கு மட்டுமே ஞாலத்தில்.
நன்றி நட்பு ஞாயிறே


Dhavappudhalvan Badrinarayanan A M :-
நினைக்க தெரிந்தது மனம்,
சொல்ல நினைத்தது குணம்.
உங்கள் எழுத்திலே ஓர் மணம்.
மகிழ்விலே திளைப்பது நட்பினம்
வாழ்த்துக்கள் நண்பரே.@ Aiyrer Aiyer Varada Rajan