Translate

Monday, August 11, 2014

போகப்போக புரியும்!



மமதையாய் சிரிக்கிறாயோ?
வெற்றியென நீ நினைத்து.
தடுத்துவிட நான் பார்த்தேன் 
தாண்டி நீயும் குதித்து விட்டாய். -எனை 
காதலிப்பதாய் நடித்துக் கொண்டே 
கவிழ்த்தாயே அவளைத்தான். 
அவளறியா  பருவத்திலே 
அண்டிக் கொண்டதே அந்நோயும் தான்.
அவள் திறந்த வாயைத்தான் 
மூடி விட்டாய் உன் வாயால் தான். 
உணர்வுகளைத் தூண்டி விட்டு 
பெற்றுக் கொண்டே பாவத்தினை.
உள்ளிருந்த கிருமிகளோ 
உன்னை தொடர்ந்து பிடித்துக் கொள்ள,
உறக்கமது தொலையுமே 
நினைவுகளின் அலையாலே.
உன் ஆணவமும் திரும்பிப் பார்க்கும் 
தூரமொன்றும் அதிகமில்லை.
மேலுள்ள உன் தலையோ 
குனிய போகிறது, புவிப் பார்க்க.
கெஞ்சத்தான் போகிறாய் 
கேள்விகளால் எனைத் துளைத்து
காலம் சிறிது போகட்டும் 
புரியும் உனக்கு என் முடிவு..
அறியும் நிலை வரும்போது 
அற்று விடும் என் தொடர்பு. 



#எயிட்ஸை தவிர்ப்போம்.
உடலைக் காப்போம்.

#உலக எயிட்ஸ் தின விழாவிற்கு மட்டும் விழிப்புணர்வு செய்ய வேண்டுமென்பது இல்லையே?

2 comments:

Dhavappudhalvan said...

எம் முகநூளில் இப்பதிவிற்கு அருமையான கருத்திட்ட நண்பர்களுக்கு மகிழ்வுடன் நன்றி.

Sankar Mani Iyer ஒருத்தியுடன் மட்டும் உன் உறவிருந்தால் தம்பி
ஒன்னுடம்பு என்றும் ஒழுங்காயிருக்கும் தம்பி.
தெய்வீக போதனைக்கு தலை வணங்கும் முன் நீ
தேக ஆரோக்கியத்துக்கு தலை வணங்கு தம்பி.
பின்னர் போகப் போக புரியும் - அந்தப் பூவின் வாசம் எரியும். ஜாக்கிரதை- நண்பரே அந்த அம்பி'ஸ் ஆம்பல் மலரில் இதனை போஸ்ட் செய்யவும்.

Dhavappudhalvan said...

எம் முகநூளில் இப்பதிவிற்கு அருமையான கருத்திட்ட நண்பர்களுக்கு மகிழ்வுடன் நன்றி.

Sakthi Sakthithasan:- அன்பினிய தம்பி, நாகரீகம் எனும் பெயரிலே இன்றைய உலகில் நடைபெறும் அவலங்களை அழகுற கருத்துடன் நயம்படச் சொல்லியுள்ளீர்கள்

Aiyer Varada Rajan:-
அக்கிரமம்
இக்கிருமி
உக்கிரம்
உபத்திரம்
உயிர் பத்திரம் -நிம்
கவித்திறம்
உயிர தரும்
உயர்தரம்

Shanmuga Murthy:-
நல்லன சொல்வதற்கு காலமும் தேவையோ.
அருமை நண்பரே


LakshmiNarasimhan Venkatapathy excellent