Translate

Showing posts with label புதுமை பெண்ணல்ல நான். Show all posts
Showing posts with label புதுமை பெண்ணல்ல நான். Show all posts

Tuesday, October 24, 2017

புதுமை பெண்ணல்ல நான்






பூக்களை நூலாலே
பூமாலை நான் தொடுக்க,
பூவிலொரு கண்ணாக
புன்னகையுடன் நானிருக்க,

பூசூட நினைப்பவளை
பூச்சூட்ட உன்னுடனே
புன்னகையில் அவள் மிதக்க
பூவையவளை அழைத்தாயோ

பூவையவள் கூந்தலிலே
பூவிட்ட மகிழ்வாலே
பூசிக்கும் உன்னை எண்ணி
புன்னகையாலவள் மலர்ந்திருக்க,

பூச்சூடிய என் முதல் நாளை ளும்
பூத்ததின்று  நினைவினிலே.
பொக்கைவாய் நான் திறந்து
புன்னகைத்தேன் பழசையெண்ணி.

பூந்தளிர்கள் நீங்களென்றும்
புது கோலம் பூண்டது போல்,
பூ மணம் எங்கும் பரப்பி,
 பூ விற்கும் பாட்டி நான்
வாழ்த்துகிறேன் அன்புடனே.

குலம் பெருக வாழ்ந்தவள்.
கோமகன் அருள் வேண்டி
கோவில் முன் உங்களுடன்
உங்கள் மகிழ்விற்காக விற்கிறேன்.


-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.