Translate

Showing posts with label குழந்தைகளுக்கு. Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கு. Show all posts

Wednesday, July 9, 2008

குழந்தை பாட்டு- கடலும் நாமும்

கடலும் நாமும்
************************
அடுக்கடுக்காய் கடல் அலைகள்
ஆர்பரிக்கும் நிலையிலே
அச்சமென்பது உயிரியிலே
ஆசையென்பது மனதிலே
அளவற்று இருக்கையில்
அத்துடனே விளையாடி
ஆனந்தமாய் நனைந்துக் கொண்டு
அலைகளையே கலைத்து விட
அதனருகில் சென்று நாம்
ஆர்பரிப்போம் இணையாக.
அலைகள் வரும் வேகம் கண்டு,
புறமுதுகிடுவோம் விரைவாக.
காலை பிடித்து இழுத்து விடும்,
நொடி பொழுதில் கரைந்து விடும். (இமைக்கும் நேரத்தில் மறைந்து விடும்.)
கண்ணை திறந்து பார்க்கையிலே,
அடுத்து வரும் அலைகளைக் காண்போம்.
அலையை அணைத்து ஆனந்தம் அடைவோம்,
எண்ணிக்கையின்றி அணைத்துக் கொள்வோம்.
ஓடிய கால்கள் களைப்பில் கெஞ்சும்,
மனத்தின் மகிழ்ச்சியில் அத்தனையும் மறையும்.
விலகி செல்ல மனமோ இல்லை,
மனத்தின் மகிழ்ச்சிக்கு எல்லையோ இல்லை.
விண்ணை மறைத்து கருமை பூச,
நிலவை காண கண்கள் அலையும்.
நிலவை கண்டு கடலும் பொங்கும்,
அத்துடன் நமது மகிழ்வும் பொங்கும்.
இரவு பொழுதில் மனமே இன்றி,
பிரியா விடையை கடலுக்குச் சொல்லி
திரும்பி செல்வோம் வீட்டுக்கு நாமும்.