Translate

Showing posts with label உரத்து உரைக்கச் சொல்லுகிறேன். Show all posts
Showing posts with label உரத்து உரைக்கச் சொல்லுகிறேன். Show all posts

Monday, March 5, 2018

உரத்து உரைக்கச் சொல்லுகிறேன்



படைத்தவனின் பாத்திரத்தில் இவனொரு அங்கமடா./
படியளக்க தவறிய காலியான பாண்டமடா./
கைப்பிடி அரிசிக்காய் கட்டப்பட்டு அடிப்பட,/
கோடிக்கோடியாய் கொள்ளையடிப்பவன்
சுகமாக வாழ்ந்து வர,/
காணக்கிடைக்கும் காட்சிகளோ
தலைக்குனிய செய்யுதடா, /

இளமைகளில் கொண்டாட்டம்
ஒரு பக்கம் பாய்ந்தாட,/
வருமையின் கொடுமையோ ஒரு பக்கம் பந்தாட,/
ஏற்றத்தாழ்வுக்கு அளவின்றி வேறுபாடு மிகுந்திருக்க,/
அடைந்துவிட துடிக்குதடா அதைக்கண்டு ஓராசை. /
எப்பாடு பட்டேனும் ஒரு நாளாவது அனுபவிக்க
குற்றமிழைக்க தூண்டுதடா மாயமான பிசாசொன்னு. /
மாறவேண்டும் நிலையிதுவும் மனதிலது துளிர் விட்டு./
வளர்பிறை இல்லையாயின் தேய்பிறையே முடிவாகும்./

ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.