Translate

Saturday, November 30, 2013

அசத்தலான கண்டுபிடிப்புகள்.



' ஐ 3 எக்ஸ்போ ' என்ற மூன்று நாள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், சென்ற சென்ற செப்டம்பர் 27ம் தேதி துவங்கி நடந்து முடிந்து விட்டது. கோவை பி.எஸ்.ஜி., "முன்னாள் மாணவர்கள்" சார்பில், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்குவிப்பு தளம் அமைக்கும் வகையில் நடைப்பெற்றது. நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த 550 கண்டுபிடிப்பாளர்களின் 750 புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன.

இளம் தலைமுறையினர், புதிய சிந்தனையுடன், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கையாண்டாலும், அடையாளம் காட்டப்படாமல் உள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தளம் கிடைத்தால், நாட்டு மக்களுக்கு நவீன கண்டுபிடிப்புகள் கிடைக்கும். அதனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த கண்காட்சி தொடக்கமாகும். 

   இதில் வேளாண்துறை, சூரிய ஆற்றல், இஞ்சினியரிங் துறை, உணவு பதப்படுத்துதல், ஜவுளித் துறை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அத்துடன் பல்வேறு துறைகள் சார்ந்த அசத்தலான கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன.  அதில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மிதி வண்டிக்கு, சூரிய மின்சாரத்தில் இயங்கும் படியாக அமைந்திருந்த கண்டு பிடிப்பு. மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்களை அரசு உத்தரவு படி, இலவசமாக  பெற தகுதியில்லா, ஆனால்  கையால் பெடல் சுற்றி இயக்கும் மூன்று சக்கர இலவச சைக்கிளைப் பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, சிரமத்தைக் குறைக்கும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் முறையில் மாற்றியமைத்து வழங்கினால், பேருதவியாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் அவர்கள், இதை சிந்தனையில் இருத்தி, சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மூன்று சக்கர சைக்கிள்களை மாற்றி,  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவு இட வேண்டுமாய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

ஓங்குமே புகழ்.



சலனங்கள் யாவும் 
முன்னேற்றத்திற்கு கேடு.

சபலங்கள் யாவும் 
நலன்களுக்கு கேடு.

நிலையற்ற மனத்தால் 
அடையா குறிக்கோள்.

நிதானமில்ல செயலால் 
அனைத்தும் பாழ்.

தேவை வேகம் 
இடமதை ஒட்டி.

சிந்தனைகள் யாவும் 
பணி வழி தொடர,

பணியுமே சிறப்பு 
தானாய் வணங்கி.


இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.



Friday, November 29, 2013

கண்ட கனவு சாதனையாய்



அமெரிக்கா சான்பிரன்சிஸ்கோ நகரை சேர்ந்த மைல்ஸ் ஸ்காட் என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு, காமிக் ஹீரோவான 'பாட்மான்" 'BATMAN' உடன் சேர்ந்து 'கோத்தம்' நகரை காக்கும் இலட்சிய கனவு. 

அக்கனவையும் நிறைவேற்ற முன்வந்தது ஒரு அமெரிக்கத் தொண்டு நிறுவனம். அதற்காக, சேவகர்கள் பலர் தேவைப்பட்டதால், தனது இணையதளத்தில்  தகவல் வெளியிட்டது. எந்த ஒரு பண எதிர்ப்பார்ப்புமின்றி தாமாக முன்வந்து 10,000க்கும் மேற்பட்டோர், கலந்து கொள்ள முன் வந்தனர்.

'கோத்தம்'காக்குமிலட்சிய கனவை, நவம்பர் 15ம் தேதி  சான்பிரன்சிஸ்கோவை கற்பனை நகராக மாற்றி, பேட் மான்' உடையணிந்த ஒரு நடிகருடன், 'மைல்ஸ்'  சும் "பேட் மொபைல் " என்ற வாகனத்தில் சென்று சாகசங்களை நிகழ்த்தினான்.

"சபாஷ், மைல்ஸ். அப்படிதான் கோத்தம் நகரைக் காக்க வேண்டும்" என்று   அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, 'வைட் ஹவுஸ் இன்' என்ற டிவிட்டர் மூலம் பாராட்டுகளைப் பகிர்ந்துக் கொண்டார். 

நாமும் பிரார்த்திப்போம் 'மைல்ஸ் ஸ்காட், விரைவில் புற்றுநோயிலிருந்து விடுப்பட்டு, சாதனைக்குரியவனாய் திகழ.

என்னவென்று கூற?



அன்பால், பாசத்தால், காதலாலும், திறமையைக் கண்டும் மாற்றுத்திறனாளரை மணக்க முன்வருகின்ற காலமாக மாறி வருகின்ற இவ்வேளையில், சம்மந்தி மாற்றுத்திறனாளியாக இருப்பின், எங்கள் கௌரவத்திற்கு குறைவு என சொல்பவர்களை, கருதுபவர்களை என்னவென்று கூற?   



வெறும் லைக் மட்டும் போடாமல், உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே. உங்கள் வலைப்பக்கங்களிலும்  ஷேர் செய்து உங்கள் நட்புகளின் கருத்துக்களையும் சேகரித்து உதவுங்களேன். 

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - Mrs.Theebamani Ulaganathan



Mrs.
Theebamani Ulaganathan

தீபங்கள் ஒளி உமிழ,
மணிகளோ ஒலியெழுப்ப,
நாதனின் துணையுடனே,
உலக நாதனின் அருளுடனே,
நலன்கள் யாவும் அடைந்திடவே
வாழ்த்துக்கள் பகிர்ந்தோமே இந்நாளில்.

மிக தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - Vasanth Krupa



Vasanth Krupa
27/11/13

வசந்துக்கு,
வசந்தம் இன்று மட்டுமல்ல,
வசந்தமே என்றும் 
வாழ்விலே வீச 
வாழ்த்துக்களை அன்புடன் 
வழங்கினோம் ஆசிகளாய்.

தாமதமான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பேரனே.

எமனாய் -



உருக் கொள்ள -
- வைத்தனையோ,
நீ எமைக் கடித்து.


Thursday, November 28, 2013

புயல் நிவாரணம்- மாற்றுத்திரனாளிகள் போராட்டம்.



ஓடிஸா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை , கடந்த மாதம் 'ஃபைலின்' புயல் தாக்கிய போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு உயிர் சேதம் தடுக்கப்பட்டது. 

\பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள்  நிவாரண உதவிகள் வழங்கி  வருகிறது. இந்நிலையில், தங்களுக்கும், புயல் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, ஏராளமான    மாற்றுத்திறனாளிகள் பிச்சை  எடுக்கும்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் ராஜேந்திரகுமார் பிசோய் கூறுகையில்,"இயற்கை பேரிடர்களால், இம்மாவட்டத்தி 2000க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையானவர்களிடம் குடும்ப அட்டை இல்லாததால் நிவாரண உதவிகள் பெறமுடியவில்லை.' என்றார்.

இதற்கிடையே, மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க, வட்டார வளர்ச்சி அலுவலகர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

# எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தான் கவனிப்பார்களோ?

# இதுதான் அழுத்த பிள்ளை பால் குடிக்கும் என்பதோ?     

வங்கி கல்விக்கடன் ​ - தெரிந்து கொள்ளுங்கள்.



படிப்புக்கு கடன் வழங்குவது வங்கியின் கட்டாய கடமைகளில் ஒன்று.

வங்கிக்கு விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்பினாலும், நேரில் கொடுத்தாலும் வங்கி ரசீது தர வேண்டும்.

வங்கியில் பெற்றோர்களின் எந்த கடன் இருந்தாலும், கல்விக்கு கடன் தர மறுக்க முடியாது.

குடும்ப சூழ்நிலையை, கல்விக்கடன் விண்ணப்பிப்போர் சொல்லத்தேவையில்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு மாணவனோ மாணவியோ கடன்கல்விக்கடன் பெற்றிருந்தால் கூட, அவர்களின் சகோதர சகோதரிகளுக்கு கல்விக் கடன் தர மறுக்கக் கூடாது.

கல்விக்கடனுக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

மூன்றாண்டுகள் தராமல் இருந்தால் கூட, முதலாண்டில் விண்ணப்பித்திருந்தால், மூன்று ஆண்டுகளுக்குறிய தொககையைப் பெற்றுக் கொள்ளலாம்.

தொழிற்கல்வி சார்ந்த எந்த படிப்புக்கும் வங்கிக் கடன் பெறமுடியும். 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், எந்த படிப்புக்கும் கடன் பெற முடியும்.

உங்களுக்கு அருகிலுள்ள, எந்த தேசியமயமாக்கப்பட்ட எந்த வங்கியையும் அணுகலாம்.


பதினைந்து அல்லது முப்பது நாட்களுக்கு மேல் விண்ணப்பத்தின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் வங்கி எடுக்க வில்லையெனில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த காரணத்துக்காக கல்விக்கடன்  விண்ணப்பம் நிலுவையில் உள்ளது அல்லது எந்த விதிமுறையின் கீழ் நிராகரிக்கப்பட்டது போன்ற தகவல்களை கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.

கல்விக்கடனுக்காகநான்கு லட்சம் ரூபாய் வரை எந்த பிணையம் (சூரிட்டி) கொடுக்கத் தேவையில்லை.

நான்கு லட்சம் முதல் எழரை இலட்சம் ரூபாய் வரை மூன்றாவது நபர்  பிணையம் (சூரிட்டி) கொடுத்தால் போதுமானது.

அதற்கு மேல் கடன் வாங்க சொத்து பிணையம் தேவை. கல்விக்கு ஏற்றபடி கடன் பெறலாம்.

படித்து முடித்து ஓர் ஆண்டு அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்களுக்குள் முதல் தவணையை செலுத்த ஆரம்பிக்க வேண்டும். 

நன்றாக படித்து, வேலைக்கு போய் வங்கியில் பெற கடனை அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். அடைத்து விட வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும்.

தகவலுக்கு நன்றி தெரிவிப்போம்.

தகவல்:
தீபக் 
'வாய்ஸ் ஆஃப் இந்தியன் '  உதவி மையம்.



மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றையோருக்கும் கொல்கத்தா ரயில்வேயில் வேலை



வேலை: 1) கோல்கத்த ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல் போர்ட்டர்,
                2) கலாசி 

பணியிடங்கள் : மொத்தம் 2,830. இதில் 3% அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு.                                            ஏறக்குறைய, சுமார் 84 பணியிடங்கள்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ.

வயது வரம்பு: 18 லிருந்து 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசின்                                 வயது வரம்பு சலுகையும் பின்பற்றபடும்.
விண்ணப்பிக்கும் முறை: 1) கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் ரூபாய் 100/=க்கு  வரைவோலை (D.D ) இணைக்க வேண்டும். பிற்படுத்தபட்டோர் / ஊனமுற்றோருக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு ) கட்டண விலக்கும்  உண்டு.

2) சுயகையோப்பமிட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும் 

அனுப்ப வேண்டிய முகவரியும், உரையின் மேல் குறிப்பிட வேண்டியதும்:


Application for Recruitment in Pay Band-I Rs.5,200-20,200/ - with GP 
Rs.1,800/- Eastern Railway

Senior Personnel Officer (Recruitment),
Railway Recruitment Cell,
Eastern Railway,
56, C.R.Avenue,
RITES Building,
1st Floor,
KOLKATA - 700 012

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2013க்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrcer.com 





Tuesday, November 26, 2013

அனுபவங்கள்- இன்றொரு தகவல்... - தன்னம்பிக்கையாளர்கள் -1



இன்று  பணி நிமித்தமாய் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிக்  கொண்டிருந்தோம். வழியில்  

1) கால் பாதிப்படைந்த ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர், விந்தி விந்தி நடந்துக் கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விசாரித்தோம். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதாகவும், இன்று தேர்வுயெனவும், சேலத்திற்கு அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருவதாகவும் தெரிவித்தவரிடம், வாழ்த்துக் கூறி, தொடர்ந்து அவரிடம் தொடர்புக் கொள்ள, தொலைப்பேசி எண்களைக் கேட்டதற்கு, எம்மிடம் கைப்பேசியில்லை என்றதும், எமக்கு ஒரு வியப்பு. இவர் எம்மிடம் மறைக்கிறாரோ, விரும்பவில்லையோ என நினைத்து, கேட்டே விட்டேன். என்னப்பா சாதாரணமாக பள்ளிக் குழந்தைகளிடமே கைப்பேசி புழங்குகின்ற நேரத்தில், உன்னிடம் இல்லையென்கிறாயே.

எங்கள் குடும்ப வசதிக்கு, கைபோன் வைத்துக் கொள்ள இயலவில்லை. பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற ஆவலினால், எம்.ஏ. பொருளாதாரம் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றதும், எமக்கு மிக்க வருத்தமாகி விட்டது. அவரிடம் யாம் கூறியதற்கு வருத்தம்  தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் கூறி, உதவிகள் தேவைப்படின் தயங்காமல் எந்த சமயத்திலும் முன்கூட்டியே தெரிவிக்கவும், முடிந்ததை செய்த உதவுகிறேனென சொல்லி, கல்லூரிக்கருகில் விட்டு விட்டு வந்தோம்.

சிறிது தூரம் வந்ததும், ஒரு கையிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர், அவரிடமும் பேச்சுக் கொடுத்தோம்.

2) சிறு வயதிலேயே வலது கையை விபத்தில் இழந்து விட்டதாகவும், 10ம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது ஒரு ஹார்ட்வேர் கடையில் வேலைப்பார்ப்பதாகவும், சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே அரசு வேலை எதுவாக இருப்பினும் உடனடியாக வாங்கி தந்து உதவும்படி கேட்டார், அத்துடன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வேலை கேட்க போவதாகவும் தெரிவித்தார். முதல்வரை ஒரு முறை சந்தித்து விட்டால் வேலை கிடைத்து விடும் என்றும் நம்புகிறார். ஒரு பக்கம் அவர் செயல்பாடும், சொற்களும்  நகைப்பை ஏற்படுத்தினும், மற்றொரு பக்கம் அவர் அறியாமையைக் கண்டு மிகவும் வருத்தத்தையே ஏற்படுத்தியது. தற்போது இருக்கும் சூழ்நிலையை எடுத்துக் கூறி,  வாழ்க்கைக்கு  வருவாய், சில தொழிலுக்கான வழிமுறைகளை  தெரிவித்து அனுப்பி வைத்தோம்.

அந்த நேரத்திலேயே கால் இழந்த ஒரு மாற்றுத்திறனாளியை சந்தித்தோம்.

3) மூன்று சக்கர மிதிவண்டியில் வந்தார். நடுத்தர வயதானவர். உடன்பிறந்தவர் யாருமில்லை. தாயும் இல்லை. வயதான தந்தை மட்டும் உடன் இருக்கிறார். வருமானம் அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை மட்டும். தந்தைக்கு முதியோர் உதவித்தொகை இதுவரை இல்லை. மூன்று சக்கர மிதிவண்டியும், செயற்க்கைக்காலையும் சேலத்தில் ஒரு அறக்கட்டளை மூலம் பெற்று இருக்கிறார். இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடு திகழ்கிறார். ஒரு டம் டீ கேன் ஒன்று யாரேனும் கொடுத்து உதவினால், பேருந்து நிலையத்தில் "டீ" விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டிக்கொள்வேன் என்றார். மிகவும் மகிழ்வாக இருந்தது. 

முகநூல் வழியாக தகவல் வெளியிட்டு உதவிப் பெற்றுத் தருகிறேன் என கூறி மேலும் தன்னம்பிக்கை     அளித்து அனுப்பினோம். 

# யாரினும் உதவ விரும்பினால் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.







Friday, November 22, 2013

இப்படியொரு வேஷம் - இன்றொரு தகவல்.



எந்தொரு அறிவிப்பு கொடுக்காமலும், அனுமதி கேட்காமலும், உரிமையுடையவர்கள் போல, 

அவர்களாகவே கேட்டை திறந்துக் கொண்டு வந்தனர் இருவர்  கேட் திறந்து வரும் சத்தம் 

கேட்டு, யாரோ உறவினர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது, அவர்கள் தானே முன்னறிவுப்பு 

 கொடுக்காமல் உள்நுழையக்க கூடியவர்களாக இருப்பார்களென நினைத்தப்படி, 

சோர்வினால் சிறிது  ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எமது மனைவியை எழுப்பியபடி, வீட்டுக் 

கதவைத் திறந்தால்,   பிராமணர் உடுத்தும் அமைப்பில் பளீர் வெள்ளை நிறத்தில்  கரை 

போட்ட வேட்டியை கட்டி, மேல் வெற்றுடம்பில் அங்கவஸ்திரம் குறுக்கில் சுற்றி போட்டபடி, 

மத்திய தர வயதையுடைய இருவர், ஏதோ ஓமம் செய்ய வேண்டும் கூறி, இந்த ஒரு 

ரசிதுகளோ, நோட்டோ இல்லாமல் வசூலுக்கு வந்திருந்தார்கள்.

நினைவுகள் பின்னோக்கி ஓடியது. சில மாதங்களுக்கு முன்பும், இதே போல பட்டு வேட்டி, பட்டு

அங்கவஸ்திரம் அணிந்தபடி வயதில் மூத்தவர்கள்  இவர்கள் வந்திருந்தனர். அவர்களும் 

முன்னறிவுப்புக் கொடுக்காமல் கேட் திறந்து கொண்டு வந்தார்கள். கம்பிரத் தோற்றத்துடன் 

வயதிலும் முதிர்ந்தவர்களாய் இருந்ததால், அவர்களை அமர வைத்து, வந்த விஷயத்தை 

விசாரித்தோம், அவர்கள் ஏதோ யாகமோ, மோகமோ செய்யப்போவதாக கூறி, நன்கொடை 

கேட்டார்கள். யானும் ரூபாய் 50/= கொடுத்தோம். அவர்கள் 50/=ரூபாயில் யாகம் செய்ய 

முடியுமா என கூறியதும், என்னடா வம்புயிது என எண்ணியபடியே மேலும் 50/= ரூ கொடுத்தோம். 

அடுத்து அவர்கள் கூறிய வார்த்தைதான் எம்மை மிகவும் யோசிக்க வைத்தது. நாங்கள் இருவர் 

வந்திருக்கிறோம், இந்த 100/= ரூபாய் போதுமா? கடவுள் அடையாளம் சொன்னதால்தான் 

உங்களிடம் வந்தோமென கூறினார்கள். பெரியவர்களே எம்முடைய சக்திக்கு 

கொடுத்திருக்கிறேன், கடவுளுக்கும் எமைப் பற்றி தெரியுமென கூறி, வெளியே அனுப்பி 

வைத்தோம். உடனடியாக எதிர் வீடு, அடுத்த வீடு என போய் கொண்டிருந்தார்கள், வசூல் செய்தபடி.

ஓரிரு மாதங்களுக்கு பின், இதேபோல வேறொரு ஜோடி, வேறொரு இடத்தில்  வசூல் செய்துக் 

கொண்டிருந்தது.  இன்று இவர்கள். இவர்களைக் கண்தும், பழைய நினைவுகள் வர, எம்மால் 

எதுவும் தர முடியாது. எத்தனை ஜோடிகள் இதுபோல் கிளம்பியிருக்கிறீர்கள் என 

கூறியதும், தாமதமே செய்யாமல், உடனடியாக இடத்தைக் காலி செய்து விட்டு சென்றனர். 

இவர்களைப் பார்க்கும் போது, பிராமணர் வேசமிட்து, வீடுகளை நோட்டமிடுபவர்களைப் 

போலவேதான் தோன்றியது.  என்ன உரிமை, தானாகவே கதவை திறந்துக் கொண்டு உள்ளே 

வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் யாரிடம் புகர் கொடுப்பது? எங்கள் வீட்டிற்கு, இருவர் 

இருவராக, இரு முறை வந்தவர்கள் நன்கு பேர், செல்லும் வழியில் கண்டவர்கள் இருவர், ஆக 6 
பேரில் ஒருவர் கூட நோஞ்சானாக இல்லை. திடகார்த்தமாகவும், கட்டுமஸ்தான உடலை 

உடையவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய 

செய்தியாகும். சாதாரணமாக  பிச்சைக்காரர்கள் வந்தால் 1 ரூபாய், 2 ரூபாய் போடுவோம், 

இல்லாவிட்டால் போய் வா என விரட்டி விடுவோம். இவர்களோ பட்டுடுத்தி ஏமாற்றி, ஏச்சி 

பிழைக்கும் கௌரவ பிச்சைக்காரர்களாக இருக்கிரார்கள்.

நண்பர்களே! உங்கள் இல்லங்களுக்கும், இப்படி யாராவது, வசூல் என்ற பெயரிலும், வேறு 

முறையிலும் வரலாம். வீட்டில் உள்ளவர்களுக்கும், பெண்களுக்கும்  முன்னெச்சரிக்கையாக 

சொல்லி வைக்கவும். இதற்கு முன் இதுபோல் வந்தவர்களைப் பற்றி, யாம், எமது 

மனைவியிடம் கூறாததால், வந்த பிராமணர்களுக்கு  நம்மால் முடிந்ததை கொடுத்து 

அனுப்பியிருக்கலாம் என்ற வருத்தம், ஆதங்கம் எம் மீது மனைவிக்கு ஏற்பட்டது. விவரம் 

கூறியதும் புரிந்துக் கொண்டார்.


பிரார்த்தனை - For Nagoorkani Kader Mohideen Basha's Wife




For Friend Nagoorkani Kader Mohideen Basha's Wife



 புரியா புதிர்கள் , 


அறியா செய்திகள்


அத்தனைக்கும் 


ஆண்டவரிடம் 


விடையிருக்கும்.


அருள் நிலைத்திருந்து 


ஆனந்தமாகட்டும் என்றும்.


பூரண நலமுடன் திகழ 


பிரார்த்திக்கிறோம் நண்பரே.




Thursday, November 21, 2013

புவியியல் குறியீட்டு எண்



பெரும்பாலான மக்களால், பரவலாகவும், சிறப்பாகவும், தரமானதாகவும், மக்களால் விரும்பப்படுகின்ற வகையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு, ஒரு உன்னத தரச் சான்றாக புவியியல் குறியீட்டு எண் பெறுவது வழக்கத்தில் உள்ளது.
அதனால் மற்றவர்கள் அதற்கான உரிமையை கோரமுடியாது. காஞ்சிபுரம் பட்டு, மைசூர் சந்தன சோப், ஹைதராபாத் ஹலீம், கொண்டப்பள்ளி பொம்மைகள், பத்தமடை பாய் என மேலும் சில பொருட்கள் இருந்தாலும், பெரும்பான்மையான பொருட்கள் தரத்துடன் இருப்பினும், புவியியல் குறியீட்டு எண் பெறுவது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இச்சூழ்நிலையை அரசு உணர்ந்து புவியியல் குறியீட்டு எண் பெற்று நம் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பெருமையையும், உரிமையையும் பெற்றுத்தர முன்வரவேண்டும்.

புவியியல் குறியீட்டு எண் பெறத்தக்க வகையில் உள்ள சில தரமான பொருட்களும், ஊர் பெயர்களும்:-
1) விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சியில் தயாரிக்கப்படும், சிறிதளவு என்னையும் ஒட்டாத, சீவல்,சேவு.
2) விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் கருப்பட்டியில் தயாரிக்கப்படும் "ஜீரணி" பிரபலமானது.
3) வேம்பார் கருப்பட்டி,
4) உடன்குடி சில்லுகருப்பட்டி.
5) திருச்செந்தூர் கீழஈரால் சீவல்.

மேலும் பல பொருட்கள் உள்ளது. தமிழக அரசு, முன் வரவேண்டும் புவியியல் குறியீட்டு எண் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.


சர்வதேச குழந்தைகள் தினம். நவம்பர் 20



இந்தியாவில் குழந்தைகள் மேல் பிரியம் கொண்டிருந்த முன்னாள் பாரத பிரதமர், அமரர். ஜவர்கலால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ந் தேதியை 'தேசிய குழந்தைகள் தினம் ' ஆக கொண்டாடி வருகிறோம். 

உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்காக, நவம்பர் 20ம் தேதியை ' சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகத்தில் கொண்டாடப்படும் அனைத்து உலக தினங்களும், மேலைநாட்டு பிரமுகர்களுக்காக கொண்டாட படும்போது, நம் இந்திய தலைவர்கள், பிரமுகர்களுக்காக தேசிய அளவில் கொண்டாடப்படும் நாட்களை சர்வதேச நாளாக கொண்டாட, தக்க நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளலாம் அல்லவா?

# இந்தியரை பெருமைப்படுத்தும் விதத்திலும், நினைவுக் கூறத்தக்க வகையிலும்  ஏதேனும் சர்வதேச தினம் கொண்டாட படுகிறதா? விபரம் தெரிந்த நண்பர்கள் தெளிவு படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம். 

* நாளிதழில் சர்வதச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படத்திற்கு, பதித்திருந்த கருத்து, மனத்தைத் தொடுவதாய் இருந்தது.

"அம்மா.. என ஆசையாய், உன்னை அழைப்பேன் என நினைத்தேன். மற்றவர்களிடம் ' அம்மா... பிச்சைப் போடு' என கேட்க வைப்பாய் என தெரிந்திருந்தால், நான் பிறக்காமலே இருந்திருப்பேன்."  

Wednesday, November 20, 2013

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - Thavamani Ram




கொண்ட தவமோ,
கொடுத்தது வாழ்வை.
கொடுத்தே பெருக,
கோபமில்லா அன்பை.
கொண்டாடி மகிழ்க
கோபுரமாய் கருதி.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்


அறியாத வயதில்லை
புரியாததென நீ கூற.
ஒருவர் மட்டும்
காரணமில்லை,
என்று உணர்வாயோ
நீயும் தான் இதை.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

உலக ஆண்கள் நாள் நல்வாழ்த்துக்கள்.- HAPPY INTERNATIONAL MEN'S DAY



உலக ஆண்கள் நாள் நல்வாழ்த்துக்கள்.

HAPPY INTERNATIONAL MEN'S DAY 



http://www.youtube.com/watch?v=W70dfOevemo&feature=youtu.be

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Balakrishnan Krishnamurthy



பால கிருஷ்ணனாய்
பகுத்தறிய உணர்ந்தவனாய்,
பந்தங்கள் சூழ்ந்திருக்க,
பாசமான குடும்பமுடன்
பாலாறாய் ஓடட்டும்
இனிதாக உம் வாழ்வு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று ( நவம்பர் 20 ) உலக மூலநோய் தினம்



இந்த காலத்தில் உலகில் ஏராளமானோர் மூலநோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். 

காரணம்:-
 பெரும்பாலும் மலச்சிக்கலால் ஏற்படுகிறது. 

எதனால் மலச்சிக்கல்:- 

வெளியிடங்களில் சாப்பிடும், பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவினாலும், 
காரம், இறைச்சி வகைகள், 
நொறுக்குத்தீனி அதிகம் உண்பதாலும் 
சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பதும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:-
!) ஆசன வாயில் தொடர்ந்து ரத்தம் வருவது.
2) மலம் கழிக்கையில் வலி இருப்பது. 
3) ஆசன குழாய் வெளியில் துருத்திக் கொண்டு உள்திரும்பாமல் நிற்பது. 

சிகிச்சை:-
முன்பெல்லாம் அறுவை சிகிச்சை மூலம், துருத்திக் கொண்டுவரும் ஆசன குழாயை நீக்கி விடுவார்கள். அதனால் மலம் கழிக்க வேண்டிய உணர்வு தோன்றியதுமே, அடக்கி நிறுத்த முடியாத சிரமமான நிலையாக இருக்கும். 
இப்போதெல்லாம் நவீன மருத்துவ கண்டுபிடிப்பான லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதால், மூலநோய் மீண்டும் வராமல் தடுத்திட முடியும்.

 மூலநோயினால் அவதி படுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:-
1) தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினசரி 3 லிட்டர்.
2) காரம் மிக்க உணவுகள், பாஸ்ட் புட் (துரித உணவு) வகைகள் தவிர்க்க வேண்டும். 
3) பழங்கள், கீரை வகைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். 
4) நொறுக்கு தீனி சாப்பிடுபவர்கள், அரிசிபொறி, அவுல் பொறி, நெல்பொறி, அவுல் ஆகியவற்றுடன் எதுவும் கலக்காமல் சாப்பிட்டு, வேறு நொறுகுதீனிகளை  தவிர்க்கவும். 
5) டீ, காபி, ஆல்கஹால் (மது, குளிர் பானங்கள்) தவிர்க்க வேண்டும். 
6) அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
7) நாள் தோரும் இரண்டு வேளை, ஒரு டீஸ்பூன் பாகற்காய் ஜீஸ், அத்துடன் சர்க்கரை    சேர்த்தும் சாப்பிடலாம்.

Tuesday, November 19, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shakthi Vel




Shakthi Vel

அன்புடை நெஞ்சுக்கு,
அழகான வார்த்தைகளால்
ஆரத்தி எடுத்தாலே,
ஆனந்தமே எந்நாளும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்பே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - ஸ்ரீதரன் கனகலிங்கம்

நண்பர் ஸ்ரீதரன் கனகலிங்கம் அவர்களை பிறந்தநாளில் வாழ்த்துவோம் நட்புத்தோழமைகளே.


மண்ணிலே புரண்ட காலம் மனத்திரையில் நிழலாட,

கொட்டமடித்த நாட்களும் கோலவிழியில் உருண்டோட,

வாலிப நட்பிலே வம்பளத்த நாட்களும்,

துணையவள் துணையுடனே தூக்கம் மறந்த நாட்களும்,

அசைப்போடும் நாளிதுவாய் அமைந்த இந்த நாளிலே,

பிறந்தநாள் வாழ்த்துக்கூறி ஆர்பரித்தோம் நட்பு என்ற முறையிலே. 2012



இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - Badri Narayanan


தூங்கா நினைவுகளுடன்,
துடிக்கின்ற மனது.
தூவியிருக்கும் இன்று
துளிகளாய் மகிழ்ச்சி.

இன்றில்லை நாளையில்லை
என்றுமே நலமுடன் மகிழ்விருக்க
இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாவா.