Translate

Showing posts with label நேரில் வந்த காரிகை. Show all posts
Showing posts with label நேரில் வந்த காரிகை. Show all posts

Monday, December 20, 2010

நேரில் வந்த காரிகை




கண் விழித்து நோக்க
கலைந்தது உறக்கம்
கயல்விழியால் முன் நிற்க,
கணைத்தேன் என்னவென அறிய.

கர்ணனுக்கு தம்பியாய்
கண் அயர்ந்து விட்டீரோ?
கலைந்ததோ கனவு?
கரைந்ததோ சோர்வு?

காணங்கள் பாடியாடி
கன்னியிடம் சொக்கினீரோ?
கனவிலே வந்த தேவதை யாரோ?
கள்ளச் சிரிப்புடன் அவள் வினவி,

கன்னமும் சிவந்ததோ
கண்ணுடன் இணைந்து,
கண்இமை சிமிட்டி கேட்டவளோ
காற்றாய் விரைந்தாளே
கற்பனைகளை தூண்டி விட்டு.

கடுகியோடும் எண்ணங்களுடன்
கணம் ஒன்றில் புன்னகைத்தேன்
காட்சிகளை நேரில் பார்த்தது போல்
கலகலத்த அவள் செயலால்.


-தவப்புதல்வன்.