Translate

Wednesday, July 31, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Veeravel Manivannan



சொல்லும் செய்திகள்
சுவைக் குன்றாயிருக்க,
உண்மையும் நேர்மையும்,
படைப்பிலே, நிலையாயிருக்க,
பெருமையும் புகழும்
சேர்ந்துனை உயர்த்த,
நவில்தலும் நாடலும்
மகிழ்வைக் கொடுக்க,
செயலும் உழைப்பும்
நலந்தனை அளிக்க,
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
வளமாய்  வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

https://www.facebook.com/photo.php?fbid=621325421240437&set=p.621325421240437&type=1&theater


Tuesday, July 30, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Siva Shankar S

சிரஞ்சீவி. சிவசங்கர் பிறந்தநாள் வாழ்த்து

இடம்: ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் திரு ஈங்கோய் மலை.
தேதி: 27/07/2013 சனிக்கிழமை

நீண்டிருக்குமே பட்டத்துநூலாய்
நினைவுகளும் உன் மனத்தில்,
நீங்காமல் நிலைத்திருக்கும்
நிலாமுற்றத்து நிகழ்வுகளும்..
வானத்துக் கற்கள்
விண்ணிலிருந்து வீழ்ந்தாலும்,
வானவில்லாய் ஜொலிக்குமே
வனப்பூட்டும் உன் கைப்பட்டு.
சித்திரமாய் உன் வாழ்க்கை
சிங்காரமாய் தொடர்ந்திடவே
ஆட்டுவிக்கும் அவனருளோ
ஆனந்தத்தை உமக்கருள
மகிழ்வுகள் என்றென்றும்
நலனுடன் இணைந்து வர.
வாழ்த்துக்கள் பகிர்ந்தோமே
வாசமான பிறந்தநாளுக்கு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகபிள்ளையே!!!


அன்புடன்,
மாமா, அத்தை மற்றும் குடும்பம்.
சேலம்.


https://www.facebook.com/photo.php?fbid=621264081246571&set=p.621264081246571&type=1&theater

பேத்தி தியா முதலாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இடம்: ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம்  திரு ஈங்கோய் மலை.

விழி மூடி திறந்தது போல
வருடமோ கழிந்தது முழுதாக.

இரண்டிலே இன்று நீ அடி வைக்க,
இதயமோ பூரித்தது மகிழ்விலே.

அசைவுகள் ஒவ்வொன்றும்
ஆனந்தத்தை அள்ளித் தர,

உன் குறும்புகளால் அனைவரின் 
உள்ளமும்  குளிர்வடைய,

எழுத்திலே பதியுமோ -
நீ
எட்டி வைக்கும் அடிகளெல்லாம்.
நலமுடன் மகிழ்வும்  உன் வாழ்வில்
ஏற்றமுடன்  இணைந்து சேர்ந்து வர,
அவனருள் என்றுமே நிலைத்திருக்க.
ஆனந்தத்தில் என்றுமே நீ மகிழ்ந்திருக்க

அரவணைத்த கைகளால்
அன்புடனே ஆசிகளை வழங்கினோம் யாம் உமக்கு.

இனிய நினைவுகளுடன்  - இரண்டாம் 
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை
.


நல்லாசிகளுடன்,
தாத்தா: A.M.பத்ரிநாராயணன்,
பாட்டி: ராஜராஜேஸ்வரி.
சேலம்.

ஷஷ்டியப்தபூர்த்தி & மாங்கல்யதாரண வாழ்த்து.



ஸ்ரீ.K.பட்டாபிராமன் & ஸ்ரீமதி.சரஸ்வதி ராமன்
இடம்: ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் 
திரு ஈங்கோய் மலை.
தேதி: 27/07/2013 சனிக்கிழமை



சிந்தனையில் மனமிருக்கும் சிந்தித்தே முடிவெடுக்கும்.
அலையலையாய் அனுபவங்கள் அத்தனையும் உள்ளுக்குள்ளே.
அமைதியான நடையுடனே, அறிந்த ஞானியாய் நீரிருக்க.
ஆற்றலுக்கு அளவில்லை, அவையாவும் குடத்துக்குள்ளே.

பாசத்திற்கும் நேசத்திற்கும் வயதில்லை,
அரவணைக்கும் உள்ளத்திற்கு வயதோர் தடையில்லை.
இன்னிசையாய் திகழட்டும் உம் வாழ்க்கை, இல்லாளின் துணையுடனே.
பெரியோர் ஆசிகள் உமைக் காக்க,

சுற்றம், நட்பின் வாழ்த்துக்களோ பெருமழையாய் நீராட்ட,

பொங்கும் மகிழ்வுடன் நீவீர் இருந்து,
குடும்ப உறவுகள் விரிவாக, எண்ணங்களோ உமைத் தாலாட்ட,
எண்ணியெண்ணி பார்த்திருக்க, த்தனையிலும் மகிழ்வியிருக்க,

இறைவனின் அருளோ நித்தமும் தொடர்ந்திருக்க,

பொற்றாமரை கரத்தால் அவன் வழங்க, குடும்பமுடன் நீர் பெற்றுயர,
வயதென்ன அறுபதது, தாண்டட்டும் திடமாக நூறையது.
அகவை நூறைக் கடந்தாலும் ஆனந்தம் என்றும் நிலைத்திருக்க,
ஸ்ரீ பட்டாபிராமருடன் சரஸ்வதியும்,
லக்ஷ்மிகரமாய் உடனிருக்க.

இறைக்குடும்பத்தை பிரார்த்தித்தோம் நலனும் வளமும் பெருகிடவே.
இதயங்களுக்கு இதயத்தால் வாழ்த்துக்களை சஷ்டியப்தபூர்த்தியில் சமர்ப்பித்தோம்.

பாவாவுக்கு இனிய சஷ்டியப்தபூர்த்தி  நல்வாழ்த்துக்கள்.
அக்காவுக்கு நித்யசுமங்கலி மாங்கல்யதாரண நல்வாழ்த்துக்கள்.

தங்கள் ஆசிகளுக்காக,
மச்சினன் A.M. பத்ரி நாராயணன்
தங்கை: ராஜராஜேஸ்ரி
மற்றும் குடும்பத்தினர்.


திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

சென்ற ஜூலை 27ந் தேதி எமது சகோதரியின் கணவருக்கு சஷ்டியப்த பூர்த்தி (  61ம் ஆண்டு பிறந்தநாள்  ) விழாவும், அவர் மகன் (D/o Subahar Pattabiraman
 வழி பேத்திக்கு (Baby.தியா ) 2ம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், எமது மற்றொரு சகோதரி மகனுக்கு ( Siva Shankar S )பிறந்தநாள் விழாவும் ஒரே இடத்தில் (திரு ஈங்கோய் மலையில் ) விமர்ச்சையாக   கொண்டாடப்பட்டது. இதனால்  சில நாட்களாக முகநூளில் தலைக் காட்டவில்லை.




*திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள் ஒன்றாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து காவேரி நதியைக் கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். அகத்திய மாமுனிவர் ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.

நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர் இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

Monday, July 29, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பட்டுக்கோட்டை பிராபாகர் (Pattukkottai Prabakar)




சிறந்த தமிழ் நாவல் கதாசிரியர்  நண்பர் பட்டுக்கோட்டை பிராபாகர் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம் நண்பர்களே.

படைப்பாளி.

தாட்களும் காத்திருக்கும்
உம் கரத்தால் மைப்பட.
கைப்பட்ட காகிதமும் சிலிர்த்துக் கொள்ளும்
கசக்கி நீர் போட்டாலும்.
படைப்பதினால் நீ பிரம்மனானாய்
வாசித்ததால் நாங்கள் வசியமானோம்.
கருக்கொள்ளும் எண்ணங்கள்
கதைகளாய் உருவெடுக்க,
உருப்பெற்ற கதைகளெல்லாம்
உயிர் பெற்றது உம்மாலே.
உயிரோட்டம் எழுத்துகளில்
உறவாடுமது நெஞ்சங்களில்.
நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்வமைந்து
ஆக்கங்கள் தொடரட்டும் சிறப்பாக.
வாழிய நீர் பல்லாண்டென வாழ்த்தினோம்
இனிய இப்பிறந்த நன்னாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



தவப்புதல்வன்.

Dt 1/2 birth: 30/07/2013
Photo: சிறந்த தமிழ் நாவல் கதாசிரியர்  நண்பர் பட்டுக்கோட்டை பிராபாகர் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம் நண்பர்களே.

படைப்பாளி.

தாட்களும் காத்திருக்கும்
உம் கரத்தால் மைப்பட.
கைப்பட்ட காகிதமும் சிலிர்த்துக் கொள்ளும்
கசக்கி நீர் போட்டாலும்.
படைப்பதினால் நீ பிரம்மனானாய்
வாசித்ததால் நாங்கள் வசியமானோம்.
கருக்கொள்ளும் எண்ணங்கள்
கதைகளாய் உருவெடுக்க,
உருப்பெற்ற கதைகளெல்லாம்
உயிர் பெற்றது உம்மாலே.
உயிரோட்டம் எழுத்துகளில்
உறவாடுமது நெஞ்சங்களில்.
நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்வமைந்து
ஆக்கங்கள் தொடரட்டும் சிறப்பாக.
வாழிய நீர் பல்லாண்டென வாழ்த்தினோம்
இனிய இப்பிறந்த நன்னாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
 


தவப்புதல்வன்.

https://www.facebook.com/photo.php?fbid=620401694666143&set=p.620401694666143&type=1&theater

Sunday, July 21, 2013

இனிய இரவு வணக்கம்


புன்னகையுடன் பொழுது
இனிமையாய் புலர,
இனிய கனவுகளுடன்
அமைதியாய் உறங்க
வாழ்த்துக்களை பகிர்ந்தோம்
நட்புகளாம் உமக்கு.

இனிய இரவு வணக்கம் நட்புகளே!




Saturday, July 20, 2013

சுண்டைக்காய் - இனிய மதிய வணக்கம்



சுண்டைக்காய்

அன்றைய நிலையோ
பண்டமாற்று முறையாய்
பாசமும் நேசமும்
படர்ந்தே கிடக்க.

இன்றைய நிலையோ
பங்கு போட்ட நிலையில்
சுணக்கம் கண்டு
சுருங்கியே போனது.


இனிய மதிய வணக்கம் நட்பூக்களே!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ravi Sarangan







கண் கொள்ளாக் கட்சியாய்
கனிந்துருகி ஓட,
மகிழ்விலே மனமும்
மலர்ந்தது கண்டு.
வாழ்த்துக்கள் பகிர
விரைந்தது மனமே.
ஊறிலா வாழ்வும்
உளம் நிறைந்த மகிழ்வும்
உயிரோட்டடமதனை
உறவுடன் கண்டு
உரு தந்த படைப்பால்,
உன்னத நட்பை
உணர்த்துமே செயல்கள்,
உம் உயரிய நிலையை.
இறைவனின் அருளோ
இறுதி வரை இருக்க,
பணிவுடன் அவனின்
பாதங்களில் பணிந்து,
பிரார்த்தித்தோம் உமக்கு
பிரியமுடன் யாமே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

அடைத்தது ஏனோ
வாசல் வழியை.
வாழ்த்துக்கள் கூற
வழியின்றி யாமும்
சன்னல் வழியே
சங்கதி சொன்னோம்.




Mr.Ravi Sarangan

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Mrs.Thiagalakshmi Badri




சொல்ல நினைப்பது
சொற்களில் புகுமோ?
நினைவுகளின் வேகம்
படைப்புக்கு இல்லை.
குலுங்கும் சோழிகளின்
ஓசையைப் போல,
குற்றால அருவியின்
குழுமையைப் போல,
குலுங்கி அதிருமே
குரலொலி மகிழ்வில்.
குழந்தையாய் இருந்து
குமரியுமானாய் - அதையும்
தாண்டி, தலைவியுமானாய்.
தாலாட்டி மகிழ்ந்தாய்
தாயாயிருந்து. - இன்று
உணர்த்துமே செயல்கள்,
உம் உயரிய நிலையை.
இறைவனின் அருளோ
இறுதி வரை இருக்க,
பணிவுடன் அவனின்
பாதங்களில் பணிந்து,
பிரார்த்தித்தோம் உமக்கு
பிரியமுடன் யாமே.
அசைகள் போடும் - உம்
ஆனந்த நிலையில்
பிறந்தநாள் இன்றில்
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
நிலையான நலனுடன்
மகிழ்வாக வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகளே!

ஆசிர்வாதத்துடன்,
மாமா, அத்தை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் -பாவா. ஸ்ரீ.B.சத்யநாராயணன் அவர்களின்

கோயமுத்தூர் . பாவா. ஸ்ரீ.B.சத்யநாராயணன் அவர்களின்  - 70ம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

படிகள் ஒவ்வொன்றும் உயரமாக,
அடிகள் அனைத்தும் கவனமாக.
பாதைகள் எல்லாம் கடினமாக,
வாழ்வோ உயர்ந்தது மெதுவாக.

சாதனைகள் எல்லாம் பட்டியலிட
சாதாரணமில்லை நிசமாக.
சமமான பாதையில்லை கடந்ததெல்லாம்.
சாதகமான நிலையுமில்லை காலமெல்லாம்.

அத்தனையும் தாண்டி இன்று,
எழுபதிலே அடி வைத்தீர்.
ஆனந்தமாய் தாண்டட்டும்
அகவை நூறை(யும்) திடமாக.

இல்லத்தில் மகிழ்வுகள் புரண்டோட,
இறையருள் நீங்காமல் நிலைத்திருக்க,
இறைவனையே பிரார்த்தித்தோம்,
இனிதாக என்றும் நீர் வாழ்ந்திடவே.

பாவா, உங்கள் பாதம் பணிந்து,
தங்களுக்கு மிக தாமதமாக 
எங்கள்  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தங்கள் ஆசிகளுக்காக,
மச்சினன் A.M. பத்ரி நாராயணன்
மற்றும் குடும்பத்தார்.

இனிய இரவு வணக்கம்





அசத்தலான ஆழ்ந்த உறக்கம் .

அமைதியாய் இருக்கட்டும்

ஆனந்தமாய் துவங்கட்டும்

அற்புதமாய் நாளைய பொழுது.
இனிய இரவு வணக்கம் நட்புகளே.


நிமிர்ந்த போது!!!





குவிந்த பார்வை
குத்தீட்டியாய் குதிதியது,
குனிந்த தலை நிமிர்ந்த போது.


இனிய மாலை வணக்கம் நட்புகளே!

Wednesday, July 17, 2013

எங்கே?


சந்திக்கும் வேளையில்
சர்ச்சைகள் தோன்றுமோ?
சகஜமான சூழ்நிலையாய்
சாமரம் வீசுமோ?
சந்தோச நிலையாய்
சங்கிதம் பாடுமோ?
சரசரக்கும் இதயத்தில்
சங்கடங்கள் பல உருள,
சப்தங்கள் வெளிக்காட்டா
சாந்தமான முகத்துடனே,
சந்திக்க வந்தேங்க.
சத்தியமாய் உங்களைத்தான்.

எங்கே????????

இங்கதாங்க......

இனிய மாலை வணக்கம் நட்புகளே!

good evening 1https://www.facebook.com/photo.php?fbid=613315915374721&set=a.572001146172865.1073741825.100000889537867&type=1&theater

Tuesday, July 16, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Kalam Kadir




Kalam Kadir

https://www.facebook.com/photo.php?fbid=613007995405513&set=p.613007995405513&type=1&theater




நித்தமும் சிந்தித்து செயல்படவே
நிகழ்வுகளை அளவிடும் கருவியாக,
காலத்தின் கதிர்களோ தினந்தோறும்,
காட்சிகளாய் தோன்றி வர,
நீண்டதொரு இடைவெளியோ
நிகழ்த்துமோ மாற்றங்களை.
சாமரம் வீசுமோ
சந்திக்கும் இவ்வேளை.
இனிதான இப்பொழுதில்
இன்பத்தின் பல ரசங்கள்,
பருகவே சொல்லுமோ 
பரவசத்தில் நீர் மிதக்க.
நலம் நாடும் உள்ளமிது
நல்வாழ்த்தை நவிழ்கிறது.

முன்கூட்டியே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவி நண்பரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Muthukumar Ramachandran



Muthukumar Ramachandran 17/07/2013 in Advance


https://www.facebook.com/photo.php?fbid=613003462072633&set=p.613003462072633&type=1&theater

வலையிலே வலை பின்னலோ,
வரைவுகளும் பேசுமோ மொழி.
எண்ணங்கள்  புகுந்துக் கொள்ள
எண்ணற்ற வண்ணங்களால்  
வானத்தையும் வையத்தையும்.
வளைந்திடுமோ கலைவண்ணமாய் கை
வாழ்க்கையோ வெற்றிகளாய்
வந்தணைக்கட்டும் உம் முயற்சிகளால்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Vetri Vidiyal Srinivasan


 
Vetri Vidiyal Srinivasan
 https://www.facebook.com/photo.php?fbid=612994792073500&set=p.612994792073500&type=1&theater


நலன்களோ ஆட்சி செய்ய,
மனத்திலோ மகிழ்வு பொங்க,
வெற்றிகளே உம் வாழ்வில்
வசந்தமாய் தொடர்ந்து வீச,
வரதனை வந்தனை செய்தே
வாழ்த்தினோமே அன்புடனே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Monday, July 15, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Bharaneedharan Rangamannar ( மேஜிக் பரத் )









Bharaneedharan Rangamannar

 ( மேஜிக் பரத் ) பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மேடையிலே வித்தைகளை
காட்சிகளாய் முன் விரிக்க,
முரசறையும் அவன்(உன்) கூற்றில்
செவிகளோ கூர்ந்திருக்க,
வியந்த விழிகளோ
அறியாமல் விரிந்திருக்க
வளைந்த புருவங்களோ
வில்லேந்தி நிலைக்கொள்ள,
உச்சரிக்கும் உதடுகளோ
சொல்லின்றி திறந்திருக்க,
மூச்சேற்றும் மூக்குகளோ
முற்றுமாய் விரிந்திருக்க,
தனித்த கைகளோ
ஒலியெழுப்ப காத்திருக்க,

அலை மோதும் கூட்டத்திலே
அழகான கவிதைகளாய்,
அரங்கேற்றிக் கொண்டிருந்தான் (ய் )
வித்தைகளின் வித்தகனாய் அவன் . (நீ)
 கைகளோ விரைவாக,
விரல்களோ திறமையாக,
கண்கட்டி வித்தைகளை
காட்சிகளாய் நிறைவேற்ற,

அலைமோதிய கூட்டமோ
ஆழ்ந்திருந்தது அவன் (உன்)செயலில்,
கொடியேற்றும் கொடி முதல்
கோட்டையும் கொத்தளமும்
இரண்டிடை விரலிடையே
தோற்றமும் தந்தது
இருந்ததும் மறைந்தது.
அற்புதங்கள் பல நிகழ்த்த
அரங்கமதிரும் முரசொலியாய்
அறைந்தது கையொலி செவிகளையே, 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகபிள்ளையே.

அன்புடன்,
மாமா & குடும்பம்.
https://www.facebook.com/photo.php?fbid=612713625434950&set=p.612713625434950&type=1&theater


பிரியாவிடை.. -கலாநிதி தீண்டா மெழுகுகள்









கட்டிப் போட்டது மனங்களை
கலக்கலாய் திருடி.
கள்ளத்தனமோ இது
காட்டும் வித்தையோ இது.
உழைப்பு என்றால்
உண்மையும் அதுவென்றால்,
சிறக்கட்டும் பணி
உயரட்டும் நிலை.
இனிக்கட்டும் வாழ்க்கை
இன்னமுதமாய் அது.

வாழ்த்துக்கள் தீண்டா மெழுகே!

நட்புடன்,
தவப்புதல்வன்.



https://www.facebook.com/kalaniti/posts/607678519263548




இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - அம்பாளடியாள் அம்பாளடியாள்



 


அம்பாளடியாள் அம்பாளடியாள் HBD 16/7/2013
அம்பாளுக்கு அடியவளே!
அன்புக்கும் அடியவளாய்,
அத்தனையும் வாழ்விலே
அருமையாய் உமக்கமைய,
அன்னையவள் அருளோடு,
ஆனந்தமாய் நீர் வாழ,
வாழ்த்துக்கள் பகிர்ந்தோமே
இனிதாய் வாழ்ந்திடவே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.










https://www.facebook.com/photo.php?fbid=612089198830726&set=p.612089198830726&type=1&theater

Sunday, July 14, 2013

இருவரின் உடல் உறுப்புகள் தானம்.



1) வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டபள்ளியை சேர்ந்த அண்ணாமலை (வயது  38). இவருக்கு கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் நடந்தது. இம்மாதம் 8ம் தேதி பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரத்தில் நண்பருடன் பைக்கில் பின்புறம் அமர்ந்து சென்றபோது மழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் குறுக்கில் நாய் வர, அதை காப்பாற்றும் நோக்கில் வண்டியை திருப்ப, வண்டி வழுக்கி கீழே விழுந்ததில் அண்ணாமலையின் தலையில் பலத்த அடியினால், மூளை சாவு அடைந்து விட்டார். உறவினர், மனைவியின் ஒப்புதலுடன் 6 பேருக்கு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

2) வேலூர் அடுத்த திருவலம், சோழவரம் துத்திகாடு கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி விஷ்ணு குமார் வயது 26, இவர் இம்மாதம் 11ம் தேதி பைக்கில்    முத்தரசி குப்பத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும் வழியில் மின்சாரகம்பத்தில் மூதி விபத்துக்கு உள்ளானதில், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் திவீர சிகிச்சை அளிக்கப்பட்டும், மூளை சாவு ஏற்பட்டு விட்டது. பெற்றோர்களின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.

அவ்விருவரின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலுடன், அண்ணாமலையின் மனைவின் தாலிக்கையின் மஞ்சள் காயாத நிலையில், சொல்லொன்னா துயரத்திலும் உடல் உறுப்புகள் தானம் செய்த அவருக்கும், இருவரின் பெற்றோர்களுக்கும் நமது மனமார்ந்த வணக்கங்ககளை தலைதாழ்த்தி தெரிவித்துக் கொள்வோம்.


Saturday, July 13, 2013

குறைவொன்றுமில்லை....




தினமும் நாளிதழ்கள் .
பக்கங்களில் செய்திகள் .
பரபரப்புக்கு பஞ்சமில்லை.
கைதுகளுக்கு குறைவில்லை.
வெட்கமும் படவில்லை
இலஞ்சத்தில் மூழ்குவதால்.

பரதேசி எனவும் விடுவதில்லை,
பாழும் செயலென நினைப்பதில்லை,
கணக்கு வழக்கு பார்ப்பதில்லை,
பணவெறிக்கோ குறைவில்லை.

வயதொன்றும் அளவில்லை.
கற்பழிப்புக்கு கண்ணில்லை.
மனசாட்சிக்கும் பயமில்லை.
சட்டத்தையும் மதிப்பதில்லை.

காமத்தினால் கள்ளக்காதல்
காசுக்காக கூட்டுக்கொள்ளை.
கூலிக்கென்று பட்டாளம்.
கூத்தடிக்குது தினந்தோறும்.

பார் அளக்க பணம் வேண்டும்.
பழுதுக்கும் பணம் வேண்டும்.
பாதுகாக்க  பணம் வேண்டும்.
பாடையாயினும்  பணம் வேண்டும்.

வேலியே மேய்கிறது பயிர்களை.
காவலனே அடிக்கிறான் கொள்ளையை.
ஆள்பவனும் ஊருஞ்சுகிறான் மக்களை.
#ஆண்டவனும் முயல்கிறான் அள்ளவே
இறைவனும் பார்க்கிறான் நடப்புகளை.
எல்லையும் அளவுக்குள் இல்லையே.


# ஆண்டவனும் = ஆட்சி செய்தவனும்

https://www.facebook.com/notes/dhavappudhalvan-badrinarayanan-a-m/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/553545731370429

Friday, July 12, 2013

மதிய வணக்கம்








மதியம் நெருங்கும் நேரத்திலும்,
*மதி தெளியா நிலையுடனே- நட்புக்கு
மயங்கிய நட்புகளுக்கு,
மகிழ்வுடனே மதிய வணக்கம்.

கண்ட காட்சிகளோ
கடை விரிக்க,
கலைந்ததே உறக்கம்
கண்களில் தேங்கி இருக்க.

கற்பனையில் மிதக்காதீர்
காவியமில்லை பதிப்பதற்கு.
காரணம் வேண்டுமல்லவா - உம்
கட்டற்ற நினைவுகளை தடுப்பதற்கு.


*அப்பு... இது டாஸ்மாக் வேலையில்லைங்கோ....

நம்மில் [நம்முள்] நடக்கும் விந்தை


முதுகெழும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உட்சந்தலையில் இருந்து முதுகெழும்பின் அடிப்பாகம் வரை ஏழு
ஆதாரச்சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு
மையம் உண்டு.
நாடி நரம்புகளும்,முடுகெழும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே
மூலாதாரம்
சுவாதிட்டானம்,
மணிபூரகம்,
அனாகதம்,
விசுத்தி,
ஆக்ஞை,
சகஸ்ராரம்
எனப்படும்.
ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு.
சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம்.
மூலாதாரம் 600 காலை ----06.00--06.40 வரை
சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை
மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை
அனாகதம் 6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை
விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை
ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை
சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை.
மொத்தம் 21.600
இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன
ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு
வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது
அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப
மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள
சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.
நம்மில்  [நம்முள்] நடக்கும் விந்தை 

முதுகெழும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உட்சந்தலையில் இருந்து முதுகெழும்பின் அடிப்பாகம் வரை ஏழு
ஆதாரச்சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு
மையம் உண்டு.
நாடி நரம்புகளும்,முடுகெழும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே 
மூலாதாரம் 
சுவாதிட்டானம், 
மணிபூரகம், 
அனாகதம்,
விசுத்தி, 
ஆக்ஞை, 
சகஸ்ராரம் 
எனப்படும்.
ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு.
சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம்.
மூலாதாரம் 600  காலை ----06.00--06.40 வரை
சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை
மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை
அனாகதம்  6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை
விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை
ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை
சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை.
மொத்தம் 21.600
இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன
ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு
வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது
அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப
மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள
சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும். 
https://www.facebook.com/photo.php?fbid=506739226059515&set=a.185040661562708.44943.100001703264948&type=1&theater

ஊஞ்சலில், உமை - குறுங்கவிதைகள்



ஊஞ்சலில் ....


 நினைவுகளோ ஆட்ட,
முதலிலே வந்தாய்.
அன்பெனும் பிடியோ
அழுத்தமாய் இருக்க,
ஆனந்தமாய் ஆடியது
ஊஞ்சலில் நினைவு.
================




உமை.

எண்ணங்களில் இருந்து
உணர்வுகள் சிந்த,
எந்நாளும் அது
உத்வேகமூட்டும் உமை.
=================

Thursday, July 11, 2013

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - Mr.Madhavan






Mr. மாதவன் தம்பதியருக்கு  திருமண  நல்வாழ்த்துக்கள்...... posted FB Aug 2012

இனிக்கட்டும் வாழ்க்கை,
நிலைக்கட்டும் நிலையாய்.
அன்பும் பாசமும் பிணைந்து,
விரியட்டும் உறவுகள் சிறந்து.
மலர்ந்த மனங்களால்
குதுகலம் கூடட்டுமென
இனிதான உம் திருமண நாளில்
அன்புடன் வாழ்த்துகிறோம்.

 இனிய திருமண வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- Madhivanan Balakrishnan


Madhivanan Balakrishnan June 13, 2012

https://www.facebook.com/photo.php?fbid=432899863416328&set=p.432899863416328&type=1&theater


பாலனாய் கிருஷ்ணனாய்
மதி கொண்ட மாதவனாய்
இறைவனின் அருளால்
மகிழ்வுடன் நலமாய்
பல்லாண்டு வாழ
வாழ்த்துக்கள் சொன்னேன்
உம்மினிய பிறந்தநாள் இன்றே.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Wednesday, July 10, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Gt Gopal Krishna 2011

Gt Gopal Krishna

Gt Gopal Krishna July 3, 2011

https://www.facebook.com/photo.php?fbid=223218677717782&set=p.223218677717782&type=1

இனிதாய் கழியட்டும் வாழ்க்கை.
நலமாய் இருங்கள் நட்புடன் இணைந்து.
சுகமாய் இருங்கள் குடும்பமுடன் இணைந்தென
அன்புடன் வாழ்த்தினோம்
இனிய உம் பிறந்த நன்னாளிலே.


அறிவுக்கண் திறக்க அறிய சேவையாற்றி வரும் கோவை "ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை"

அறிவுக்கண் திறக்க அறிய சேவையாற்றி வரும் கோவை "ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை"க்கு வாழ்க, வளரட்டும் தங்கள் சேவையென, எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் . 

https://www.facebook.com/photo.php?fbid=677371472276178&set=a.251710784842251.89114.100000099950772&type=1&theater


Tuesday, July 9, 2013

அடடா...



தீக்குச்சி கேட்டான்,
எதற்கென கேட்டாள்,
உரசவே என்றான்.

முகமோ சிவந்தாள்
தனையென நினைத்து.
ஒடிசலாய் அவள்.

இனிய மாலை வணக்கம் நட்பூக்களே!!!



* உரசவே - பற்ற வைக்க.

* ஒடிசலாய்- ஒல்லியாய் ( Line )

டாக்டர்களுக்கு கட்டாய உத்தரவு.


மாற்றுத்திறனாளிகள், ரயில் பயண சலுகைப் பெற, அரசு டாக்டர் சான்று அளிப்பது கட்டாயம். இந்த சான்றை வழங்க ரயில்வே துறை விதித்துள்ள விதிமுறைகளை, சில அரசு டாக்டர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்வதாக புகார் எழுந்ததை முன்னிட்டு, புதிய வழிகாட்டுதல் உத்தரவை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.அதில்,...

"அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று வைத்திருக்கும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு டாக்டர்கள் மறுக்காமல் ரயில் பயண சான்று வழங்க வேண்டும்  சான்று அளிக்கும் படிவத்தில் டாக்டரின் பதிவு எண்ணுடன் கூடிய முத்திரை, பணிப்புரியும் அரசு மருத்துவமனையின் முத்திரை, ஆகியவற்றை தெளிவாக தெரியும் படி முத்திரையிட்டு கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது."

இது அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும் தெரியபடுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  




உதவுங்கள் கொடுத்து, கண்களை.....

 
2 min video to make you think for a lifetime
Length: 1:39
 
உன்னத கண்களை
உயிரோட்டமாக நிலைதிருக்க
உதவுங்கள் கொடுத்து
உயிர் பிரிந்த பிறகு.
https://www.facebook.com/dhavappudhalvan.badrinarayananan/posts/608688575837455
 

Monday, July 8, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- Mrs.Lalitha Murali




Mrs.Lalitha Murali & Mr.Murali

https://www.facebook.com/photo.php?fbid=224241530948830&set=p.224241530948830&type=1


கைப்பிடித்த மணாளனோ
களிப்படைய துணையிருக்க,
தூண்டி விட்ட விளக்காக
என்றும் நீ சுடர் விட்டு பிரகாசிக்க,
வாழ்த்தினோம் மனமுவந்தே
என்றென்றும் இளமையுடன்,
கள்ளமிள்ள புன்னகையுடன்,
நலமும் வளமும் பெற்று நீ
வாழ்க! வாழ்க!! வாழ்கவென
வாழ்த்தினோம் உம் இனிய
இப்பிறந்த நன்நாளிலே.

உடன் பிறவா சகோதரன்,
-தவப்புதல்வன்.

இரங்கல்

Mrs. Shanthi Abe



https://www.facebook.com/notes/shanthi-abe/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/417823541748




உயிர் கொண்டு எழுந்ததோ,
உள்ளத்து உணர்வுகள்,
உன்னதம் அடைந்ததே
உயிர் நீத்த உயிரும்.
உலாவுமே நெஞ்சிலே
உம் உயிர் உள்ளவரை.
உண்மை சொல்லட்டுமா
உலகறிய செய்து விட்டீர்.

அவர் ஆத்மா சாந்தி அடைய,
உங்கள் உள்ளங்களோ மனசாந்தி அடைய,
இல்லத்தில் மங்களங்கள் தொடர
இரங்கலுடன் எங்கள் நல்ஆசிகளும்.

தவப்புதல்வன்.