Translate

Saturday, July 20, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் -பாவா. ஸ்ரீ.B.சத்யநாராயணன் அவர்களின்

கோயமுத்தூர் . பாவா. ஸ்ரீ.B.சத்யநாராயணன் அவர்களின்  - 70ம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

படிகள் ஒவ்வொன்றும் உயரமாக,
அடிகள் அனைத்தும் கவனமாக.
பாதைகள் எல்லாம் கடினமாக,
வாழ்வோ உயர்ந்தது மெதுவாக.

சாதனைகள் எல்லாம் பட்டியலிட
சாதாரணமில்லை நிசமாக.
சமமான பாதையில்லை கடந்ததெல்லாம்.
சாதகமான நிலையுமில்லை காலமெல்லாம்.

அத்தனையும் தாண்டி இன்று,
எழுபதிலே அடி வைத்தீர்.
ஆனந்தமாய் தாண்டட்டும்
அகவை நூறை(யும்) திடமாக.

இல்லத்தில் மகிழ்வுகள் புரண்டோட,
இறையருள் நீங்காமல் நிலைத்திருக்க,
இறைவனையே பிரார்த்தித்தோம்,
இனிதாக என்றும் நீர் வாழ்ந்திடவே.

பாவா, உங்கள் பாதம் பணிந்து,
தங்களுக்கு மிக தாமதமாக 
எங்கள்  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தங்கள் ஆசிகளுக்காக,
மச்சினன் A.M. பத்ரி நாராயணன்
மற்றும் குடும்பத்தார்.

No comments: