Translate

Tuesday, July 30, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Siva Shankar S

சிரஞ்சீவி. சிவசங்கர் பிறந்தநாள் வாழ்த்து

இடம்: ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் திரு ஈங்கோய் மலை.
தேதி: 27/07/2013 சனிக்கிழமை

நீண்டிருக்குமே பட்டத்துநூலாய்
நினைவுகளும் உன் மனத்தில்,
நீங்காமல் நிலைத்திருக்கும்
நிலாமுற்றத்து நிகழ்வுகளும்..
வானத்துக் கற்கள்
விண்ணிலிருந்து வீழ்ந்தாலும்,
வானவில்லாய் ஜொலிக்குமே
வனப்பூட்டும் உன் கைப்பட்டு.
சித்திரமாய் உன் வாழ்க்கை
சிங்காரமாய் தொடர்ந்திடவே
ஆட்டுவிக்கும் அவனருளோ
ஆனந்தத்தை உமக்கருள
மகிழ்வுகள் என்றென்றும்
நலனுடன் இணைந்து வர.
வாழ்த்துக்கள் பகிர்ந்தோமே
வாசமான பிறந்தநாளுக்கு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகபிள்ளையே!!!


அன்புடன்,
மாமா, அத்தை மற்றும் குடும்பம்.
சேலம்.


https://www.facebook.com/photo.php?fbid=621264081246571&set=p.621264081246571&type=1&theater

No comments: