Translate

Tuesday, September 30, 2014

சிறப்பு - ஹைக்கூ...



அன்பும் மதிப்பும்
கேட்டு பெறுவதல்ல.
தானாக கிடைத்தால் தான்.


இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Venkat Ramani





Venkat Ramani

நாளெல்லாம் மகிழ்வாக,
நாட்களெல்லாம் இனிதாக,
வாழ வேண்டும் நலமாக,
வாழ்த்தினோம் நட்பாக.

இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள் நண்பரே.

கண்டதும் - ஹைக்கூ...



ஊசிமல்லியான நான்
மணம் வீசும்
குண்டு மல்லியானேன்.

இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே!

Monday, September 29, 2014

இன்றைய ஹைக்கூ...



ஆரம்பமான கணக்குகளால்
அடிவயிற்றையும் கலக்குமே
அடி(டு)த்த அடி. 

ஆண்சிங்கம் - சின்ன கவிதை.





மகிழ்ச்சி அடைகிறேன்,

என்னால் 

பணிய வைக்க முடியாத 

பெண் சிங்கத்தை 

வேடன் வீழ்த்தியதற்கு.


ஹைக்கூ...

அதிரடி ஆரம்பம்.
தொடர வேணும் தொடர்ந்து

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.



Friday, September 26, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Vasanthakumar Graphicdesigner


Vasanthakumar Graphicdesigner


வருடம் ஒன்று கழிஞ்சாச்சு.
பார்வைக்கு  மேலும்  இளமையாச்சி.
முகம் இன்னும் பொலிவாச்சு
வாழ்க்கை இன்னும் வளமாக
வாழ்த்துக்களோ  தம்பி உனக்காக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி

Thursday, September 25, 2014

ஒரு நொடி - குறுங்கவிதைகள்



மின்னலென திகைத்தேனே
மேகமில்லா பகற்பொழுதில்.
ஒலியிழந்து மீண்டதடா
கருவிழியால் தாக்கப்பட்டு.
-------

கனவிலே
நீ சிரிக்க,
உறக்கத்திலே
நான் பார்த்தேன்.
 ---------

மௌனமாய் உன் வார்த்தைகள்  
சீண்டுகிறதே எனை.
மயக்கத்தில் ஆழ்த்துகிறதே
உறக்கத்திலும் எனை.
-----------

முடியுமா?

வளர்வதை வெட்ட
நகமும் முடியும் சரி.
அறிவையும், அனுபவத்தையும்?







ஏன்? - குறுங்கவிதைகள்


ஏன்?

'வலதாய் இருக்க வேண்டும்
முன்னோக்கி வைக்குமடி '
தடுமாற்றமின்றி
பலமாயூன்றி
முன்னேற முடியுமென்பதலோ

ரைட் ரைட் தானோ?
Right is Right !?

*******************************

ஏன்?

சதை மூடிய எழும்புக்கும்
உணர்வுண்டோ?
ஊடுருவும் குளிரிலது
ம(மு)டங்கிக் கொள்ள பார்ப்பதேன்?

#தொடுத்து விட்டேன்  வினாவை
தொடர வேண்டியது நீங்களே.
இனிய  நற்பொழுது வாழ்த்துக்கள் நட்புகளே. 

பேராசைக்காரன்

...

என் எழுத்துக்களோ 
உம் விழிகளைத் தீண்ட,
உம் அன்பான குரலோசை 
என் செவிகளைத் தீண்ட,
மகிழ்ச்சியில் மிதந்தபடி 
தூய்த்துக் கொண்டிருப்பேன் 
நாளெல்லாம் இனிதாக.
கழிந்திட நிறைவாக.

இனிய நல்நாள் வாழ்த்துக்கள்  நட்புகளே!

Wednesday, September 24, 2014

எப்படி சொல்வேன் ?






மொட்டவிழ்ந்து விரிந்த 
உன் விழியிமைகளை,
மென்மையாய்
தடவிக் கொடுத்தேன் 
இரவு வரை 
விழித்திருக்கப் போவதால்.

 இதைக் கண்டு 
பூவிதழாய் மலர்ந்து 
புன்னகைத்த - உன் 
தேன் சிந்தும் அதரங்களையும் 
சுவையால் சுவைக் கண்டு...
ஐய்யே.....
எப்படி சொல்வேன் 
ரசவாத காவியத்தை - நான் 
இலக்கணம் கற்காமல்.

நட்புகளே! - இனிய நாள் நல்வாழ்த்துக்கள்

நட்புகளே!

பொல்லாத இதயமடா
பொறுக்கியாய் இருக்கிறதே - ஆம்
பொறுக்குகிறதே நல்லிதயத்தை.
பொறுக்கியது போதும்
பொன்னான நாளென
இயம்பும் நட்புகளுக்கு,

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் 

துடித்தது....



பணிகளோ விரைவாய் நடக்க,
பண்டங்கள் உருமாறி,
பட்சனங்களாய்  உருவெடுக்க,
பரிமாறியது கைகள்
பந்தியாய் இல்லாவிடினும்.

பறந்தது எண்ணங்கள்
பறவையாய் சிறகடித்து,
பார்க்கும் பக்கமெல்லாம்
பரபரப்பாய் இயங்க,
 பலரும் எறும்புகளாய்
பணியாற்ற ஓட,
பாதசாலையும்  துடித்தது
பஞ்சு மெத்தையாய் இருக்க.

இனிய காலை நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

அத்தனையும் - ஹைக்கூ...




அத்தனையும்
எரிந்து விடுகிறது
உன்
விழிப்பார்வையில்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sabari Saranya







கொண்டாடி மகிழும்படி 
கோலமிடும் உன் கைகள்,
கொட்டட்டும் முரசாக 
கோள்களைத் தாண்டியது.


இறைவனின் அருளுடனே 
மகிழ்வுடன் என்றும் வாழ  
இனிதான இந்நாளில் 
வாழ்த்தினோம் .

அன்புடன் 
மாமா, அத்தை.

 

Tuesday, September 23, 2014

விசைப்பொறிதனிலே



விடிந்தது பொழுது,
வீட்டிலே பணிகளோ
விரைவாய் நடக்க,
விழிகளோ துலாவ,
விரைகிறது மனமும்,
விளையாட்டு பிள்ளையாய்
விசைகளை அழுத்த.


இனிய காலை வணக்கம் எமதினிய  நட்புகளே  :)

நான் - ஹைக்கூ.....


ஆழ்ந்த
அன்பின்
அலையோசையை 
அறியாதவனோ?

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -Ragunath Nagas






இன்பம் அதுவோ 
வானத்திலிருந்து
பொழியட்டும்  என்றும்
வண்ணங்களை பூசி  
வானவில்லாய்.அது.
நலன்கள் யாவும் 
கூடி உமை சுமக்க 
ஆசிகள் வழங்கினோம் 
 இன்றைய இனிதான நாளில்  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகன் ரகுநாத்துக்கு. 



சித்தப்பா 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Tap Varadakutti





காலமோ தேய்கிறது.
அனுபவமோ கூடுகிறது.
அத்தனையும் புதிதாக.
காண்கிறீர் நடைமுறையில் 

இறைவனின் அருளாலே 
நிலைக்கட்டும் நலங்களெல்லாம் 
இன்றே வாழ்த்தினோம் 
மகிழ்வுடன் நாங்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே.

அன்புடன் 
மாற்றுத்திறனாளிகளின் நண்பன்,
A.M.பத்ரி நாராயணன்

Monday, September 22, 2014

இதற்கென்ன பெயர்?




ஆழ்ந்த உறக்கத்திலும் 
ஆனந்தமான நினைவு.
அருகின்றி இருக்கலாம் 
அருகிடுமோ உறவு.
இழைகளாய் ஊடுருவி 
இசைப்பொழிகிறதே தேன்மழையாய்.
ஈரேழு பிறவிகள் எவ்வுயிராயினும்   
ஈடுடையதாகுமோ இவ்வுயிர்.
உறவுக்கென்ன பெயரிட,
உயிருக்கு மேலானதை.
நாதமாய் ஒலிக்கட்டுமே 
நாளும் பொழுதும் என்றுமது.


இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Mass Venkat







osted toMass Venkat

''மாஸ்'' பெரிதாய்
மருவில்லாததாய்
மகிழ்வுடையாதாய்
மாற்றங்களுமினிதாய்
எந்நாளும்
ஏற்றங்களாய்
நலன்களுடன்  திகழ
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  நண்பரே.



in Sathiabama Sandaran Satia‎ Greetings 

மலர்களைப் போல 


வாழ்வும் மலர்ந்திருக்க,


பூ மணம் போல் 


மகிழ்வுகள் பரவியிருக்க,


செழித்திருக்கும் செடிபோல் 


நலன்கள் நிலைத்திருக்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



https://www.facebook.com/photo.php?fbid=727522610617602&set=p.727522610617602&type=1&theater&notif_t=photo_comment_tagged

Sunday, September 21, 2014

சிற்றூற்று







தண்டையிட்ட கால்களினால் 
உதைபடும் மார்புகளோ 
கொஞ்சிக்கொஞ்சி மகிழுமே 
கோபமது கொள்ளாமல்.

பாபம் கழிக்க வழியின்றி,
புண்ணியம் தேடவும் முடியாமல் 
பன்னீர் துளிகளாய் அபிஷேகம் 
தலை முகம் வாயிக்கின்றி 
காலமது மாறிப்போச்சி 
டைபர் ( Diaper ) எனும் கோமணத்தால் 

''ஹைக்கூ '' கவிதை


திரி நான் ஒளிர
தூண்டுகிறாய் நீ
எண்ணையாய்.


இனியநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

Saturday, September 20, 2014

நீ எங்கே? - குறுங்கவிதை




பூவிலிருந்து மணம் பரவி,
உனைத் தீண்டி வந்தபோது,
நீயிருக்கும் இடம் தேடி,
என் மனமும் அலைந்ததடா!

சும்மாயில்லை நிசம் - குறுங்கவிதை



சுவையின்றி போகுமோ?
சுவைத்திட உன் குரலும்.
சுகமான ராகமாய்
சுழல்கிறதே எம் செவிதனிலே.
சூப்பரான விடுமுறை நாளாக அமைய வாழ்த்துக்கள் நட்புகளே.



Friday, September 19, 2014

மகிழ்ச்சியான தருணம் - இன்றொரு தகவல்

 

முன்பு முகநூளில் [Facebook] தீவிரமாக அதிக பதிவுகளை பதிவிட்டுக் கொண்டிருந்த நண்பர் கலாநிதியின்  [கலாநிதி தீண்டா மெழுகுகள் ]  தாயாரின் திருமண நாளுக்காக நான் தெரிவித்திருந்த வாழ்த்தை, எமது வலைத்தளமான, இந்த வலைதளத்தில்  ''இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்'' என்ற தலைப்பில் 03/08/2013ல்    மீள்பதிவு இட்டிருந்தேன்.

என்னுடைய அப்பதிவு  1100க்கு மேற்பட்ட வலைதள வாசகர்களால் வாசிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாசித்து ஊக்கம் அளித்துள்ள  அனைத்து வாசகர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

வாசகர்கள் தொடர்ந்து  வாசித்து தங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்கும்படி  கேட்டுக் கொள்கிறேன்.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்


மாவிலைத் தோரணமாய் 
பன்னீர் புஷ்பங்களாய் 
இழையோடும் நூலிழையாய் 
உறவுகள் இறுகி, 
உற்சாகம் பொங்க,
மகிழ்வுகள் பெருகி,
நலன்கள் நடைப்பயில, 
குதுகலம் கும்மாளமிட,
மாற்றங்கள் எய்தினும் 
மாற பாசமுடன் 
வாழ்கவே என்றும்.
வாழ்த்துகிறேன் இன்றும்.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.

ஆனந்த கண்ணீர் - இன்றொரு தகவல்






இன்று சிறிது நேரம் முன்பு கழிவறைக்கு சென்று விட்டு வெளியில் நகர்ந்து வந்தேன். அப்பொழுது எனக்கும் எமது பேத்திக்கும் நடந்த உரையாடல்.

நான் நகர்ந்து வருவதை சுட்டிக் காட்டி 

பேத்தி: தாத்தா, ஏன் இப்படி வருகிறீர்கள்? 'நடந்து வாருங்கள் என்றார் 

நான்: என்னால் முடியாதம்மா.
 
பேத்தி, தன்  கைகளை நீட்டி பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்.

நான்: என்னால் எழுந்து  நடக்க முடியாதம்மா 

பேத்தி: ஏன் தாத்தா ?

நான்: என் கால்களுக்கு சக்தியில்லை. அதனால் தான் என்றேன். 

சிறிதும் தாமதமின்றி, தனது கால்களை எனை நோக்கி நீட்டி,  என் கால்களை எடுத்துக் கொள்ளுங்கள் என பேத்திக் கூறியதுடன் என்னைப் போலவே எனக்கு முன்னாள் அமர்ந்து பேத்தியும் நகர தொடங்கினார்.  அடுத்த கணம் இதயம் கரைய விழிகளில் நீர் துளித்து விட்டது, அந்த மூன்று (3) வயதே ஆன இளம் குருத்தின் செய்கைக் கண்டு.  

நான் : [மனம் பதற] அம்மா! உன்  கால்களுக்கு சக்தி இருக்கிறது. நடந்துதான் செல்ல வேண்டும். 
என கூறி எழுப்பி அனுப்பி வைத்து விட்டு, 

ஓ... இறைவா! கள்ளமில்லா பாசபிறவியான என் பேத்தி எந்த குறையுமில்லாமல் நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டேன்.

Thursday, September 18, 2014

பொது மொழி



சிரமங்களைக் கூறி
அனுதாபங்களைப் பெறுவதை விட,
உன் சந்தோசங்களை பகிர்ந்துக் கொள்.
கேட்பவர் மகிழ்ச்சி அடைய.

இனிய  நாள் நல்வாழ்த்துக்கள்.

ஏனோ அலைந்தது?




வழியனுப்பி விட்டது 
நேற்றைய இரவு பொழுதை,
மனமும் விழிகளும்.

குறியின்றி தேடியது 
இமைகள் மூடியிருப்பினும் 
அங்குமிங்கும் 
விழிகள் மனமுடன் இணைந்து.

மண்டையிடியுடன் 
உடலும் சோர்ந்திருக்க,
விடிந்தும் தடையிடுகிறது 
விழிகள் 
இமைகளைத் திறக்க.

Wednesday, September 17, 2014

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்



மாற்றங்கள் இருப்பினும்
மாறாத நட்புடன்
மகிழ்வுகள் தொடர்ந்திட
மறந்திருப்போம் நமை.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Jay Re-Born






Jay Re-Born





மீண்டும் மீண்டும்
துவங்குகிறது வாழ்க்கை.
ஒவ்வொரு செயலிலும்
புதிது புதிதாய்.

வாழ்த்துக்களோ உமக்கு
தினம் தினம்
நலங்களாய் தொடர்ந்து வர,
வாழ்த்தினோம் யாமும்
இன்றைய நாளிலே நட்புடன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Tuesday, September 16, 2014

இனிய நாள் வாழ்த்துக்கள்







                                                                 புகைப்படங்கள் 

பூத்த மலர்களெல்லாம்
பூரண நிலவாய்
புன்னகைக்கும் நின் முகம் காட்ட,
பூரித்தேன் நானுமதைக் கண்டு .

 ...

இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே....
 

நானே எனக்கு வழியானேன்... முன்னோடிகள். தன்னம்பிக்கையாளர்.




ரமேஷ் குமார்,

பிறந்தது முதலே நடக்கமுடியாத ஒருவர், மற்றவர் சிரமமின்றி நடப்பதற்கான காலணி கடை வைத்து நியாயமான விலையில் விற்பது மட்டுமல்லாமல் யாரையும் சார்ந்திராமல் , யாருக்கும் பாராமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
கோவையைச் சேர்ந்த அவர் பெயர் ரமேஷ் குமார், வயது 34.வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் பிறந்த செல்ல மகன்.
பிறவியிலேயே இவருக்கு காலில் குறைபாடு உண்டு. ஆனால் அந்த குறை தெரியாதபடி பாசம் காட்டி வளர்த்தனர்.
படிக்கப்போன இடத்தில் கேலி கிண்டல் எழவே பள்ளிக்கூடம் போவதை விட்டு விட்டார், பரவாயில்லை என்று குடும்பத்தில் உள்ளவர்களே பாடம் எடுத்தனர். இதனால் தமிழ், கணிதம் ஆகியவை நன்றாக வரும்.
முதல் இடி; முதல் தவிப்பு:
மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த ரமேஷின் வாழ்க்கையில் முதல் இடி இறங்கியது, இவரது தாயும், தந்தையும் அடுத்தடுத்து இறந்த போதுதான்.
தாயும், தந்தையும் திடீரென இறந்துவிட, முதல் முறையாக தனிமைப்படுத்தப்பட்டார், முதல் முறையாக தவித்துப்போனார், முதல் முறையாக எதிர்காலத்தை எண்ணி மிரண்டு போனார்.
கலங்கி நின்ற இவரை மகேந்தினின் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.
காப்பகத்தில் தான் யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருப்பதும், இலவசமாக உணவு வாங்கி சாப்பிடுவதும் இவருக்கு நெருடலாகவே இருந்தது, நாம் இவர்களுக்கு பாராமாக இருக்கிறோமோ என்ற உணர்வு அடிக்கடி ஏற்பட ஏதாவது சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று எண்ணினார்.
தந்தை தந்துவிட்டு போன பணத்தையும், உறவினர்கள் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பு போன்றவர்கள் கொடுத்து உதவிய நன்கொடைகளையும் கொண்டு கோவை சாய்பாபா காலனி, செந்தில் நகர், கல்பனா திருமண மண்டபம் அருகே ஒரு செருப்பு கடையை துவக்கிவிட்டார். மறைந்த தாயார் பழனியம்மாள் என்றால் இவருக்கு உயிர் ஆகவே அவரது பெயரின் முதல் எழுத்தையும், இவரது பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து கடைக்கு பிஆர் டிரேடர்ஸ் என்று வைத்துவிட்டார்.
தொண்டு செய்ய ஆசை:
இவருக்கு அதுவரை செருப்பு வியாபாரம் பற்றியும் தெரியாது. ஆனாலும் துணிந்து உழைப்போம், இதைவைத்து பிழைப்போம் என்ற இவரது முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. தன்னை கௌரவமாக காப்பாற்றி கொள்வதற்கு ஏற்றவாறு வருமானம் வருகிறது. இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஊனமுற்ற இவர் கடையில் ஒரு உதவியாளரை வேலைக்கு நியமிக்கலாம் என்ற நிலை வந்தபோது தன்னைப்போலவே ஆதரவில்லாத கருணை இல்லத்து நண்பரையே வேலைக்கு வைத்துள்ளார்.
வாரத்தின் ஏழு நாளும் கடை உண்டு காலை ஏழு மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 9 மணி வரை கடையில்தான் இருப்பார். இவரது நேர்மையான வியாபாரம் பலருக்கு பிடித்து போனதால் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். வருகிறவர்கள் ஷூ மற்றும் கொஞ்சம் காஸ்ட்லியான பிராண்டில் காலணிகள் கேட்டால் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளார். பாங்க் உதவி கிடைத்தால் தொழிலையும்,கடையையும் விரிவு பண்ணி வியாபாரத்தை பெருக்க வேண்டும் வரும் வருமானத்தை கொண்டு நிறைய தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார். இவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.
இவரது தொடர்பு எண்: 9944871680.


தகவல் - எல்.முருகராஜ்  & Nagoorkani Kader Mohideen Basha

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


D/o Vediyappan Discovery Book Palace


மதியாய் விளங்க,
மதியிலும் விளங்க,
மதிவதனியை இன்று
மகிழ்வுடன் வாழ்த்தினோம்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லக்குட்டி.
https://www.facebook.com/photo.php?fbid=4633109521297&set=a.2782231370500.69781.1699704534&type=1&theater




அச்சுதன் குட்டி S/o Swathi Swamy 

தனக்கென ஒரு அச்சை
தரணியில் பதிக்கட்டும்.
தங்கள் அச்சுக்குட்டிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

https://www.facebook.com/swathi.swamy/posts/10152736632492733?comment_id=10152737979967733&notif_t=like



படித்ததில் பிடித்தது.




மறக்கக் கூடாதது தமிழை மட்டுமல்ல,
தாய்மொழி என்பதையும்.



வாழ்த்துக்கள்



ஆஹா! மிளிர்கிறது
அழகாய் மயில்.
ஆனந்தமாய் இருக்கிறது
அற்புதமான உன் கை வண்ணம்
ஆக்கங்கள் உன் கையால்
அதிவிரைவாய் வளரட்டும்.
வாழ்த்துக்கள் ஶ்ரீ வாசவி பிரியா.

நட்பும்,உறவும் - இனிய நாள் நல்வாழ்த்துக்கள்



வானத்தைத் தொட வேண்டும்
வெண்முகில் போல.
அன்பினைப் பொழிய வேண்டும்
கரும்முகில்  போல.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

Sunday, September 14, 2014

வாழ்க்கை ! - குறுங்கவிதை

     

சுவை கூட வளர்த்தவள் தாய்.
சுவையூட்ட வந்தவள் மனைவி.
சுவையாக்க பிறந்தவர்கள் மக்கள்.


இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.

#மக்கள் = குழந்தைகள்.

புரியுமே! - குறுங்கவிதை





வார்த்தைகளின் அலையோசை,
வழிந்த குரலின் ஒலியோசை,
செவி மடுத்த நொடிப்பொழுதில் 
இதயமோ பண்பலையாய் 
துடித்ததே இன்னிசையாய்.

இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே.

Saturday, September 13, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shriya D/o Rajesh Harikrishnan & Sri Vasavi Priya Rajesh




Rajesh Harikrishnan & Sri Vasavi Priya Rajesh அவர்களின் மகளும், எங்கள் அமரத்துவம் சகோதரி வசந்தா ஹரிகிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான ஸ்ரீயா வுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அன்பிலே அரவணைத்து,
ஆளாக்கும் நினைவிலே,
கொஞ்சியே வளர்கின்றார் 
கோபுரமாய் நீ உயர,

உள்ளமெல்லாம் குளிர்ந்திருக்க,
உன் வளர்ச்சி அதிலிருக்க,
உண்ணாமலையான் அருள் பாலிக்க,
உறவெல்லாம் புகழ்ந்திடக் கண்டு,

உன் பெற்றோரும் பூரித்திருக்க,
மகிழ்வாய் யாவும் நிலைத்திருக்க, 
ஸ்ரீயா, உனக்கு  
ஆசிகள் வழங்கி வாழ்த்தினோம் 
தாமதமாய் கொண்டாடும் 
இனிய இப்பிறந்த நன்னாளில்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீயா.

--
அன்புடன் 
தாத்தா, பாட்டி.  

Thursday, September 11, 2014

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து. - ஸ்ரீலதா காமேஷ் பாபு சக்ரவர்த்தி



ஸ்ரீலதா காமேஷ் பாபு சக்ரவர்த்தி 


கொஞ்சி குலவ, 
குவலயம் மகிழ,
வான்முகிழ் போலே,
வந்திவன்  உதிக்க.

ஏந்திய கைகளோ 
துளியாய்  மாற,
விரிந்த இதழ்களில் 
புன்னகை தவழ,

மார்போடணைத்து 
ஊட்டும் உதிரம்,
வையகம் போற்ற 
வாழ வைக்கும்.

கனவு கண்ட 
கருவறை சுமைகள்,
காற்றிலே கரைந்து 
உருவாய் பிறக்க,

மகிழ்வுகள் யாவும் 
முகங்களில் அனைத்தும்.
ஓடி வந்து 
ஒட்டிக் கொள்ளும் 


வாழ்த்தினோம் இன்று 
குலமது செழிக்க,
இறைவன் அருளால் - நலமாய் 
ஈன்றதை அடுத்து.


ஸ்ரீலதா உனக்கு 
எங்கள் நல்லாசிகள்,
அப்பா அம்மா.
Uncle and Aunt  

யோசிக்கிறேன்! - குறுங்கவிதை




வாசித்த பதிவுக்கு
லைக் (Like) இட்டால் கூட,
மௌஸ் (Mouse) தேய்ந்து
விடுமோயென்று


எப்படி? - குறுங்கவிதை




புரியாத கேள்விக்கு 
விடையெங்கு போவேனோ?
அறியாத மொழியில் 
எப்படி யான் உரைப்பேனோ?
காணாத காட்சியை 
சொல்லி நான் கவர்வேனோ!
மகிழ்விலே துள்ளித் திரிய 
அள்ளி உனக்கு தருவேனோ!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Son of Radha Krishnan





Son of Radha Krishnan

எண்ணங்கள் சிறப்பானதாய்
செயல்கள்  விவேகமானதாய்,
ஊக்கமும் ஆக்கமுமாய்
வாழ்வு அமைந்திட,
நலனும் மகிழ்வும் நிலைத்திட
தங்கள் பெருமித மகனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

https://www.facebook.com/photo.php?fbid=725391777496658&set=a.535710803131424.1073741825.100000775286515&type=1&theater

Wednesday, September 10, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - SHIRIYA G/d Tvn Tvnarayanan



SHIRIYA 


Tvn Tvnarayanan

அத்தனையும் 
அழகானது. அது 
ஆண்டவனின் 
ஆட்சியாகும்.

அன்றாடம் 
அவனருளோ 
அமிர்தமாய் 
அமையட்டும்.

அன்பான நல்லாசிகளுடன் 
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தங்கள் பேத்தி SHIRIYA வுக்கு ஐயா.

https://www.facebook.com/photo.php?fbid=729637227090796&set=a.116118508442674.22446.100001335768558&type=1&theater

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் - Shanmuga Murthy

https://www.facebook.com/photo.php?fbid=723165744386622&set=p.723165744386622&type=1&theater&notif_t=photo_comment_tagged





Shanmuga Murthy  திருமணநாள் வாழ்த்துக்கள்


எண்ணங்களில் மிதந்து வரும் 
என்றுமது நீங்காமல்.
எழுத்திலிட முடியுமோ,
எழிற்சியான தருணங்களை?
எத்தனையோ வருடங்கள் 
எண்ணிக்கையற்ற மகிழ்வுகள் 
எழிலாடிய வாழ்க்கையில் 
ஏற்றமாய் திகழவே 
எங்களப்பனை துதிதுமை வாழ்த்தினோம் 
எட்டெட்டாய் கழியினும் ஓருயிராய் வாழ்ந்திட.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


https://www.facebook.com/photo.php?fbid=769784813079004&set=np.136961286.100000889537867&type=1&theater&notif_t=close_friend_activity

Monday, September 8, 2014

பேஃஸ் புக்கே ! (Oh! Face Book)




தீர்மானங்கள் கரைந்து போக,
எண்ணங்கள் சிதறிப் போக,
உறுதிகள் நீர்த்துப் போக,
கனவுகள் கலைந்து போக,
உருகிப் போவதேன் 
உனைக் கண்டதும் நான்?

இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே.

Sunday, September 7, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sakthi Sakthithasan




Sakthi Sakthithasan


அனுபவங்கள் கணக்கின்றி,
ஆழமாய் பதிந்திருக்க,
ஆண்டுகள் ஒவ்வொன்றாய் 
கழிந்து வரும் வேளையிலே,
மன எண்ணங்களை விரைவிலே 
பதித்திட தோனுதையா.
இனியேனும் சாதனைகள் புரிந்திட,
மாற்றங்கள் ஊட்டிட எண்ணுதையா.

வாழ்வது நீண்டிருக்க,
நலமது இணைந்திருக்க,
சுகமான கானங்களாய் 
இனி தொடர்ந்திருக்க,
வாழ்த்தினோம் இன்றே,
இறைவனைத் துதித்தே 
அன்புடன் உம்மை. 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பின் சக்தி சக்திதாசன் அவர்களே.



Saturday, September 6, 2014

மூத்த தலைமுறையில்

எங்கள் தந்தையின் இளைய சகோதரி திருமதி. ராஜம்மாள் ரங்கநாதன். தந்தை வழியில் தற்போது உயிருடன் இருப்பவர் இவர் ஒருவரே.
Only living member of my fathers side.She is 92 living in coimbatore
My paternal aunty