Translate

Saturday, September 6, 2014

முயற்சி திருவினை ஆக்கும்!



இடையில் வந்ததை 
இழந்து போகலாம்.
இடையால் வந்ததும் 
இற்றுப் போகலாம்.
இடையில் வந்தவளென 
இகழ்ந்து கூறலாமா?
வாழ்வின் அவதாரம் 
அன்னையவள் கொடுக்க,
வாழ்விற்கு  ஆதாரம் 
தந்தையவர் வழங்க,
வாழ்விற்கே அச்சாரமாய் 
வந்தவள் இருக்க,

சந்தோசங்கள் யாவும் 
சடுதியில் கரைந்து,
சச்சரிப்புகள் புகுந்து 
சலசலப்புகள் தோன்ற,
சலிப்புகள் ஏனோ 
சங்கடமாய் நினைத்து.

இணைந்த கைகளோ 
இதயங்களைத் தந்து
இணக்கமாய் இருந்து,
இருக்கமாய் பிடித்தால், 
இடைவெளி தருமோ?
இடையிலே புகுந்து.

No comments: