Translate

Showing posts with label இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். Show all posts

Tuesday, December 26, 2017

இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்



எங்களினிய சிட்டுக்களே!
மகிழ்வாய் என்றும்
சிறகடித்து வளர,
செயலிலே சிறப்பாய்
செயல்பட்டு உயர,

பரமபிதா ஆசீர்
பற்றியுமை தாலட்ட,
நாங்களும்  ஆசீர்வதித்தோம்
நலமுடன் நீங்களிருக்க.

இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். 💐💐🎂🎂🍰🍰🍭🍭🍇🍩🍡🍡🍬🍬🙌🏼🙌🏼

பாசமுடன்
தாத்தா,
அவ்வா.சாதனா செல்லம், சுதன் குட்டி

எங்களினிய சிட்டுக்களே!
மகிழ்வாய் என்றும்
சிறகடித்து வளர,
செயலிலே சிறப்பாய்
செயல்பட்டு உயர,

பரமபிதா ஆசீர்
பற்றியுமை தாலட்ட,
நாங்களும்  ஆசீர்வதித்தோம்
நலமுடன் நீங்களிருக்க.

இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். 💐💐🎂🎂🍰🍰🍭🍭🍇🍩🍡🍡🍬🍬🙌🏼🙌🏼

பாசமுடன்
தாத்தா
பாட்டி

இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்



சிந்தனையில் தேவனிருக்க,
சீராட்டி அவர் காக்க,
உற்ற துணையாய் உடனிருந்து
உயர்வுக்கு வழி காட்ட,

நலனும் மகிழ்வும் நிறைந்திருந்து
சிறப்பான வாழ்வாய் அதுவமைத்து
சிகரமாய் புகழ் பெற்று நீங்களுயர,
ஆண்டவர் ஆசீர் நிலைத்திருக்க,
இனியதிந்த நாளில் வாழ்த்தினோம்
பாசமுடன் மனமுவந்து.

இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். 🎂🌹🌹🙌🏼🙌🏼

அன்புடன்
அப்பா, அம்மா

Friday, December 22, 2017

இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

🌲🌲

வந்திங்கு உதித்தவரை
வானிலிருந்து வழி காட்ட,
ஒளி பிடித்து புறப்பட்டார்
ஒளிரும் தேவனை துதிப்பாட.

நாளிது மகிழ்வாக,
நாளெல்லாம் நலமாக,
ஆசீரளித்தார் கரமுயர்த்தி
அண்டிய அனைவருக்கும்.

அருட்பெரும் ஒளியாளர்
அமைதி கொண்ட நிலையாளர்.
ஆரவாரம் ஏதுமின்றி
அருட்பார்வையில் உய்வித்தார்.

பாடங்களை போதித்தார்
பாவங்கள் கழிந்தோட.
பிரார்த்திப்போம் நாள்தோறும்
பரிசுத்த போதகரை.

உலகிலுள்ள அனைத்து கிருஸ்துவ மக்களுக்கும், நண்பர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். 💐💐💐💐💐💐💐💐

அன்புடன்
தவப்புதல்வன் 🙏